32°C

பயிர் பாதுகாப்பு

பயிர் பாதுகாப்பு

பருத்திப் பயிரில் களை மேலாண்மை பயிர் பாதுகாப்பு

பருத்திப் பயிரில் களை மேலாண்மை

பருத்தி பயிரானது தமிழகத்தில் முக்கியமாக பெரம்பலூர், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சமார் 1.2 லட்சம் ஹெக்டரில் பயிரடப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களை விட உற்பத்தி குறைவாகவே உள்ளது. அதற்கான காரணங்கள் மானாவாரியாக பயிரிடுதல் பழைய தொழில்நுட்பத்தையே சார்ந்திருத்தல் சரியான முறையில் பருத்திச் செடியை பராமரிக்க இயலாமை களைகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் களைகள்: விவசாயிகள் பருத்தி விதை ஊன்றியவுடன், களையும் பருத்தியும் சேர்ந்தே முளைக்க ஆரம்பிக்கிறது. களையானது பருத்தியுடன் […]

August 28, 2020 editor news
கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் மேலாண்மை பயிர் பாதுகாப்பு

கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் மேலாண்மை

இந்தியாவில் கடந்த பயிர் ஆண்டில் 353.8 மில்லியன் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை உற்பத்தியிலும் சர்க்கரை நுகர்வோர் எண்ணிகையிலும் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கருப்பு பயிர் சாகுபடி பரப்பளவிலும் உற்பத்தியிலும் உத்திர பிரதேசம் முதல் இடத்தில் இருந்தாலும் உற்பத்தி திறனை பொருத்த வரையில் தமிழகமே முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இத்தகைய உற்பத்தி திறனுக்கு  சவாலாக உள்ள காரனிகளில் மிகவும் முக்கியமானது செவ்வழுகல் நோய் ஆகும். இந்நோய்யின் தாக்கத்தால் கரும்பின் எடையில் 29 சதவிகிதமும் […]

August 27, 2020 editor news
துவரையில் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

துவரையில் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

துவரை இந்தியாவில் பயிரிடப்படும் பயிறு வகைகளில் முக்கியமான பயிராகும். வேளாண் துறைப் பதிவேட்டின் படி கடந்த ஆண்டு இந்தியாவில்  துவரை உற்பத்தி  42.27 லட்சம் டன்கள் ஆகும். துவரையில் பல்வேறு நோய்கள் ஏற்ப்பட்டாலும் அவற்றில் மிக முக்கியமானது வாடல் நோயாகும். இந்நோய் ஃபியூசேரியம் உடம் என்றப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்நோய்த் தீவிர நிலையில் 100 சதவீத உற்பத்தியையும் முற்றிலுமாகப் பாதிப்பிற்குள்ளாக்கிவிடும். இந்தியாவில் மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்நோய்  அதிகளவில் காணப்படுகிறது. இந்நோயால் ஆண்டுக்கு […]

August 25, 2020 editor news
மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளும் பயிர் பாதுகாப்பு

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளும்

முன்னுரை: மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழு (ஸ்பொடாப்டிரா புருஜிபெர்டா) அமெரிக்கக் கண்டத்தின் வெப்ப மற்றும் மிதவெப்ப பகுதிகளை தாயகமாக கொண்டது. இவ்வகை படைப்புழுக்கள் 80 க்கும் மேற்ப்பட்ட பயிர்களைத்தாக்கி அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக புல் வகைப் பயிர்களான மக்காச்சோளம், நெல், கோதுமை, சோளம் மற்றும் கரும்பு பயிர்களை பெருமளவில் தாக்கக் கூடியது. இந்தியாவில் மக்காச்சோளப் படைப்புழுவின் தாக்குதல்   முதன்முதலாக கர்நாடக மாநிலத்தில் சிவமோகா மாவட்டத்தில் 2018 ஆண்டு மே மாதத்தில் கண்டறியப்பட்டது. பின்னர் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, […]

August 25, 2020 editor news
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள் பயிர் பாதுகாப்பு

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள்

நெல் நமக்கு முக்கியமான உணவுப்பயிர் ஆகும். உலகின் மொத்த நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது 2018- 2019  இல் நெல்சாகுபடி 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் 2019-2020ம் ஆண்டில் 117.47 மில்லியன் டன்னாக உள்ளது. இந்நிலையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வழிமுறைகளை கூர்ந்து ஆராயும் போது உற்பத்தியாகும் சமயத்தில் ஏற்படக் கூடிய இழப்பு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. அவை நெல்லைத்தாக்கும் பூச்சிகள், நோய்கள், களைகள், எலிகள் மூலமும் மற்றும் தானிய […]

August 21, 2020 editor news
பயிர் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் பிராசினோலைடுகள் பயிர் பாதுகாப்பு

பயிர் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் பிராசினோலைடுகள்

தாவரங்கள் உட்பட ஒவ்வொரு உயிரினத்தின் குறிக்கோள் அடுத்த தலைமுறை சந்ததிகளை உருவாக்குவதாகும். விதைகளை உருவாக்குவதன் மூலம் தாவரங்கள் சந்ததிகளை விரிவாக்கம் செய்கிறது. தாவரங்கள் அவற்றின் விதைகளை உருவாக்க பயன்படுத்தும் கருவிகள் மலர்கள். ஒரே இனத்தின் பூக்களுக்கு இடையில் மகரந்தம் மாற்றப்படும்போது மட்டுமே விதைகளை உற்பத்தி செய்ய முடியும். மகரந்தச் சேர்க்கை என்பது ஒரு பூவின் மகரந்தங்களிலிருந்து வரும் மகரந்தம் சூல் தண்டிற்குள் சென்று விதையாக உருப்பெறுகிறது. மகரந்தங்களின் சக்தியைப் பொறுத்தே, பூவில் விதைகள் மற்றும் பழங்களின் வளர்ச்சி […]

August 21, 2020 editor news
மிளகாயில் ஆந்த்ராக்னோஸ் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் பயிர் பாதுகாப்பு

மிளகாயில் ஆந்த்ராக்னோஸ் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

மிளகாய், நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத நான்காவது மிக முக்கியமான பயிராகும். இது உலகின் மிக வெப்பமண்டல மற்றும் துணைவெப்பமண்டல பகுதிகளில் பயிரிடப்பட்டு வருகின்றனது. இந்த மிளகாய் பச்சை மற்றும் பழுத்த வரமிளகாயாகவும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இது சிவப்பு நிறமாக மாறுவதற்கு காரணம் “கேப்சிசின்” என்ற நிறமியாகும். அதுமட்டுமின்றி மிளகாயிலிருந்து அல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டு அவை மருதத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த மிளகாயினை பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் மற்றும் நூற்புழுக்கள் போன்றவை அதிகளவில் தாக்கி பயிர்களின் […]

August 21, 2020 editor news
பருவநிலை மாற்றமும், நிலக்கடலை சாகுபடியை பெரிதும் பாதிக்கும் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

பருவநிலை மாற்றமும், நிலக்கடலை சாகுபடியை பெரிதும் பாதிக்கும் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகளும்

ஒரு தாவரத்தின் வளர்ச்சி என்பது இரண்டு காரணிகளால் நிர்வகிக்கப்படுகிறது. ஒன்று வளமான மண், இரண்டு தேவையான பருவநிலை. ஒரு விவசாயியின் பயிர் சாகுபடி நல்ல மகசூலை தருமா? அல்லது தோல்வியில் முடியுமா? என்பதும் இதைச் சார்ந்தே அமைகிறது. பண்ணை சார்ந்த உரங்கள், பசுந்தாள் உரங்கள், மண்புழு உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் போன்றவற்றை தேவையான அளவு இட்டு சிறந்த வடிகால் வசதியுடன் பாதுகாத்தாலே போதும் மண்ணின் வளத்தை கூட்டிவிடலாம். ஆனால் பருவநிலை மாற்றத்தை நம் ஒருவரால் மாற்றிவிட […]

August 20, 2020 editor news
தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளும் பயிர் பாதுகாப்பு

தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளும்

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், தென்னையைத் தாக்கி அதிக சேதமுண்டாக்கும் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும். தென்னையில் இதன் தாக்குதல் முதன் முதலாக 2004ம் ஆண்டில் மத்திய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர நாடான பெலிஸ் நாட்டில் மார்ட்டின் என்ற விஞ்ஞானியால் கண்டறியப்பட்டது அதன் பின் 2009ம் ஆண்டில் அமெரிக்காவின் தென் பிளோரிடா மாகாணத்தில் தென்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நம் நாட்டில் இப்புதிய வகைப் பூச்சிகளின் பாதிப்பு தென்னையில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் […]

August 20, 2020 editor news
வெண்டை பயிரைத் தாக்கும் நரம்புத் தேமல் நோயும் அதனை  கட்டுப்படுத்தும் முறைகளும் பயிர் பாதுகாப்பு

வெண்டை பயிரைத் தாக்கும் நரம்புத் தேமல் நோயும் அதனை கட்டுப்படுத்தும் முறைகளும்

நோய் இல்லாத ஆரோக்கியமான உடலைப் பெற அனைவரும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அன்றாட சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளில் அத்தியாவசிய சத்துக்களான பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களில் ஏ, ஈ மற்றும் சி போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன. இந்தியா முழுவதும் பயிரிடப்படும் காய்கறிப் பயிர்களில் வெண்டை ஒரு முக்கியமான பயிராகும்.  இது வைட்டமின்கள் ஏ, பி (Vitamin A, B), புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்த பயிர் ஆகும். வெண்டை வெப்பமண்டல […]

August 17, 2020 editor news