32°C

பயிர் பாதுகாப்பு

பயிர் பாதுகாப்பு

மாம்பழங்களில் தீவிர நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஆந்த்ராக்னோஸ் பூஞ்சை கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு

மாம்பழங்களில் தீவிர நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஆந்த்ராக்னோஸ் பூஞ்சை கட்டுப்பாடு

அறிமுகம் மாம்பழம் இந்தியாவின் தேசியப் பழமாகும். உலகின் மாம்பழங்களில் கிட்டத்தட்ட பாதி அளவு இந்தியாவில் மட்டுமே பயிரிடப்படுகின்றது. மேலும், 2017 ஆம் வருடத்தில் மாம்பழங்களின் உலகளாவிய உற்பத்தி  50.6 மில்லியன் டன்கள் ஆகும், மாம்பழபழங்கள் அதிகம்  உற்பத்தி  செய்யும் நாடாக இந்தியா உள்ளது (19.5 மில்லியன் டன்). இந்தியாவிற்கு அடுத்ததாக பெரிய உற்பத்தியாளர்களாக சீனா மற்றும் தாய்லாந்து உள்ளது. பொதுவாக மாம்பழம் இனிமையானது, இருப்பினும் மாம்பழச்சதைப்பகுதி, அதன் சுவை மற்றும் அமைப்புக்கு ஏற்ப வகைகள் மாறுபடுகின்றன. அல்போன்சோ […]

October 16, 2020 editor news
காலிஃபிளவா் மற்றும் முட்டைக்கோஸ் – ல் வைர முதுகுப் பூச்சி கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு

காலிஃபிளவா் மற்றும் முட்டைக்கோஸ் – ல் வைர முதுகுப் பூச்சி கட்டுப்பாடு

வைர முதுகுப் பூச்சியானது புளூடெல்லிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தது.  இந்த பூச்சியானது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்க்கு வந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இப்பூச்சியானது ஐரேப்பாவை தாயகமாகக் கொண்டது. மேலும் இது காலிஃபிளவா் மற்றும் முட்டை கோஸ் போன்ற குரூசிபெரஸ் குடும்பத்தை சார்ந்த அனைத்து காய்கறிகளையும் உண்ணக் கூடியது. இப்பூச்சியானது ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற அனைத்து பகுதிகளிலும் பரவி தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த பூச்சியினால் 50 சதவிதம் வரை […]

October 15, 2020 editor news
காய்கறி பயிர்களில் வைரஸ் மேலாண்மை பயிர் பாதுகாப்பு

காய்கறி பயிர்களில் வைரஸ் மேலாண்மை

நமது அன்றாட வாழ்வில் காய்கறிகள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அவை நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை நமக்கு அளிக்கின்றன. இந்தியாவானது பலவகையான நிலத்தோற்றம் மற்றும் காலநிலையை கொண்டுள்ள ஒரு பல்லுயிர் மண்டலமாக விளங்குகிறது. எனவே பலதரப்பட்ட காய்கறிகள் விளைவதற்கு இந்தியாவில் ஏற்ற கால நிலை நிலவுகிறது. இந்தியாவானது காய்கறி உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாக உள்ளது. மேலும் இந்தியாவானது காய்கறி பயிர்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளின் இடத்தில் உள்ளது. […]

October 15, 2020 editor news
பனை மரப் பயிர் பாதுகாப்பு பயிர் பாதுகாப்பு

பனை மரப் பயிர் பாதுகாப்பு

தென்னையைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் பனையையும் தாக்குகின்றன. பனை மெதுவாக வளரும் தன்மையைப் பெற்றுள்ளதால் தெளிக்கும் வேதிப்பொருள் நீர்மத்தின் அளவும் குறைவாகவே இருக்கும். பனை வளருகின்ற பொழுது தேவைப்படும் கரைசலின் அளவு அதிகரிக்கும் என்பதால் பயிர் பாதுகாப்புக்கு ஆகும் செலவும் கூடும். பனையின் வயதைப் பொருத்து பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதற்கான செலவு மாறுபடும். பனையைத் தாக்கும் பூச்சிகள் விதை முளைத்தலின் போது காண்டாமிருக வண்டின் இளம்புழுக்கள் மற்றும் கரையான்களால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. கீழே விழும் […]

October 15, 2020 editor news
ஒருங்கிணைந்த கோரை களைக் கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு

ஒருங்கிணைந்த கோரை களைக் கட்டுப்பாடு

கோரை உலகின் மோசமான களைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகெங்கிலும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரை இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இது அனைத்து வகையான மண்ணிலும் வளர்கிறது. பயிரிடப்பட்ட வயல்கள் (குறைந்தது 50 வெவ்வேறு பயிர்கள்), சாலையோரங்கள், மேய்ச்சல் நிலங்கள், ஆற்றங்கரைகள், நீர்ப்பாசனத் தடங்கள் மற்றும் இயற்கை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழ்விடங்களில் கோரையைக் காணலாம். இவற்றில் பயிரிடப்பட்ட வயல்களைத் தவிர மற்ற வாழிடங்களில் பல்லினத்தன்மை மற்றும் மற்ற தாவர போட்டிகளால் கோரைக் குறைந்து காணப்படும். […]

September 17, 2020 editor news
பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

பருத்தி ஒரு பணப் பயிராகும். பருத்தி இழைகள் மட்டுமல்லாமல் அதன் முழுச் செடியும்  பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோய் மிக முக்கியமானது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்நோய், இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பரவலாகக் காணப்படுகிறது. இந்நோயினால் பருத்தி மகசூல் குறைவதோடு, பருத்தி இழைகளின் தரமும், பலமும் குறைகிறது. தீவிர நிலையில் இந்நோய் 100 சதவீத உற்பத்தியையும் பாதிக்கக்கூடியது. பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோயும் […]

September 16, 2020 editor news
கோகோ செடியில்  தேயிலைக் கொசு நாவாய்ப் பூச்சியின் தாக்குதலும் அவற்றின் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

கோகோ செடியில் தேயிலைக் கொசு நாவாய்ப் பூச்சியின் தாக்குதலும் அவற்றின் மேலாண்மை முறைகளும்

கோகோ ஒரு வாசனை மிகுந்த பணப்பயிராகும். இது வணிகரீதியில் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது. கோகோ தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் பள்ளத்தாக்கு நிலப்பகுதியைத் தாயகமாகக் கொண்டது. கோகோ பயிரானது 1523 ஆம் ஆண்டிலிருந்தே உலகின் பல நாடுகளில் பயிரிடப்பட்டு வந்தாலும் நமது இந்திய நாட்டில் 1970 ஆம் ஆண்டு முதல் பண்ணைப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  உலக அளவில் கோகோ உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 0.3 சதவீதமாக உள்ளது. கோகோ சாக்லேட் சுவை மிகுந்த பானங்கள் […]

September 16, 2020 editor news
அவரையில் துரு நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும் பயிர் பாதுகாப்பு

அவரையில் துரு நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

அவரைக்காய் உண்ணச் சுவையாகவும், மிகுந்தச்  சத்துள்ளதாகவும் இருக்கிறது. இதில் புரதச் சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகக் காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். அவரையில் பல வகைகள் உண்டு. இச்செடி இந்தியாவில் இருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாகக் கருத்தப்படுகிறது. அவரையில் பல வித நோய்கள் தோன்றினாலும் துரு நோயால் 3 – 36 சதம் வரையில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. அவரையை தாக்கும் துரு நோயை பற்றியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் […]

September 16, 2020 editor news
கரும்பு பயிரைத் தாக்கும் இளங்குருத்துப் புழுவின் மேலாண்மை பயிர் பாதுகாப்பு

கரும்பு பயிரைத் தாக்கும் இளங்குருத்துப் புழுவின் மேலாண்மை

கரும்பு, இந்தியாவின் மிக முக்கியமான பண‌ப்பயிராகும். கரும்பில் இளம் பருவத்தில் (3 மாதங்களுக்குள்) தாக்க கூடிய பூச்சிகளில் இளங்குருத்து புழு மிகவும் முக்கியமான பூச்சியாகும். கரும்பில், இளங்குருத்துப் புழுவானது 25 முதல் 30 விழுக்காடு அளவிற்கு சேதம் விளைக்கும்.    தாக்குதலின் அறிகுறிகள்:         இப்பூச்சியானது 1-3 மாத வயதுடைய இளம் பயிர்களை அதிகமாகத் தாக்கும். நிலமட்டத்திற்கு மேலே இளந்தண்டுகளில் பல சிறு துளைகள் குருத்தில் காணப்படும்.         புழுக்கள் […]

August 31, 2020 editor news
கத்தரியில் நாற்றழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

கத்தரியில் நாற்றழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கத்தரி இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் பெருமளவில் பயிரிடப்படும் காய்கறியாகும். கத்தரி உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் ஆண்டுக்குத் தோராயமாக 128.13 லட்சம் டன்கள் கத்தரி உற்பத்தி செய்யப்படுகிறது. கத்தரியில் பல்வேறு வகையான நோய்கள் தோன்றினாலும் நாற்றழுகல் நோய் மிக முக்கியமான ஒன்றாகும். இந்நோயானது பலவகை காய்கறிப் பயிர்கள், தோட்டப் பயிர்கள், அலங்காரச் செடிகள், காட்டுவகை மரங்கள் போன்றவற்றின் நாற்றாங்கால்களில், இளம் நாற்றுகளைத் தாக்கி, அதிக சேதம் விளைவிக்கக்கூடியது. கத்தரியில் […]

August 31, 2020 editor news