பயிர் பாதுகாப்பு
தைல மரம் மற்றும் வேப்ப மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு
தைல மரம் தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் பேட்டோசீராரூபோமேக்குலேட்டா ஆகும். மாமரத்தைச் தாக்கும் நீண்ட உணர்வு கொம்புகளை உடைய அதே வண்டுகளின் புழுக்கள் தைலமரத்திலும் துளையிடும். துவாரங்களுக்குக் கீழே கழிவுப் பொருட்கள் கொட்டிக் கிடக்கும். அலுமினியம், பாஸ்பைடு மாத்திரை ஒன்றைத் துளைக்குள் போட்டு, களிமண் கொண்டு மூடி வைத்து உள்ளே இருக்கும் புழுக்களை அழிக்கலாம். கறையான் கறையானின் பூச்சியியல் பெயர் மைக்ரோடெர்மஸ் மற்றும் ஓடென்டோடெர்மஸ் ஆகும், வேர்களை அரித்துத் தின்று மரங்களை வாடச் செய்யும். […]