32°C

Editor

நல்ல மாட்டை தேர்ந்தெடுப்பது எப்படி? கால்நடை

நல்ல மாட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை: நல்ல மாட்டிற்கான அடையாளங்கள் – பசு பார்க்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும். பின்பகுதி பெருத்து இருக்க வேண்டும். கெட்டசதை போட்டிருக்க கூடாது. உடலில் உள்ள எலும்புகள் தெரியும்படி இருக்க வேண்டும். பால்மடி பஞ்சுபோல் இருக்க வேண்டும். தொட்டால் பால் வழிய வேண்டும். பால்மடி, பால் சுரக்கும் பால் கொடி கண், தொப்புள் வரை நீண்டு இருக்க வேண்டும். பாய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். […]

July 30, 2016 Editor
வறட்சியை தாங்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு ! விவசாய கட்டுரைகள்

வறட்சியை தாங்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு !

நாட்டு ரக சர்க்கரைவள்ளி கிழங்கின் வயது 3 மாதங்கள். நடவுக்கேற்ற பருவம். அக்டோபர் – டிசம்பர் மாதங்களாகும். தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுள்ள மண் வகை ஏற்றது. அனுபவ விவசாயி திருவண்ணாமலை மாவட்டம் சம்மந்தனூர் குப்புசாமி. இவர் 70 சென்ட் சாகுபடி நிலத்தில் தண்ணீர் கட்டி கொக்கி கலப்பையில் உழவு செய்து 2 டிப்பர் எருவைக் கொட்டி கலைத்து விட்டு பின்னர் மண் பொலபொலப்பாகும் வரை ரோட்டோவேட்டர் மூலம் இரண்டு சால் உழவு செய்து, மாட்டு ஏர் […]

July 29, 2016 Editor
வெட்டி வேர் விவசாயம் : குறைந்த பராமரிப்பில் நிறைவான லாபம் விவசாய கட்டுரைகள்

வெட்டி வேர் விவசாயம் : குறைந்த பராமரிப்பில் நிறைவான லாபம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் “வெட்டி வேரை’ சாகுபடி செய்வது தமிழகத்தில் அரிதாகவே நடக்கிறது. இதற்கு மணல் கலந்த செம்மண் பொருத்தமானது. வாரம் ஒரு முறை தண்ணீர் வசதி அவசியம். உரம், பூச்சி மருந்து தேவையில்லை. நாட்டுவகை, தரிணி என்று இருவகை வெட்டி வேரை சாகுபடி செய்யலாம். நாட்டு வகை ஒன்றரை ஆண்டும், தரிணி ஒரு ஆண்டும் சாகுபடி காலம். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது குருவாடிப் பட்டி கிராமம். பி.காம்., பட்டதாரியான பாண்டியன், 40, […]

July 29, 2016 Editor
நிலவேம்பு விவசாயம் மருத்துவ குணங்கள்

நிலவேம்பு விவசாயம்

நிலவேம்பு : (ஆன்ரோகிராபிஸ் பேனிகுலேட்டா) இது ஒரு செடி தாவரமாகும். இலைகளின் இரு முனைகளிலும் குறுகி காணப்படும். மிகுந்த கசப்புத் தன்மை உடையதாக இருக்கும். விதைகள் மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது ஓராண்டு பயிராகும். குடலில் ஏற்படும் அடைப்பு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலநோய், குடற்புண், வயிற்றுப்புண், வயிற்றெரிச்சல், இருமல், தோல் நோய்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மஞ்சள்காமாலை, கல்லீரல் சம்பந்தமான நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. டெங்கு காய்ச்சல் முழுவதுமாக குணப்படுத்துவதற்கு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. புற்றுநோயைக் குணமாக்கும் […]

July 29, 2016 Editor
பயனளிக்கும் பல பயிர் பண்ணையம் விவசாய கட்டுரைகள்

பயனளிக்கும் பல பயிர் பண்ணையம்

முயற்சி என்பது விதை போல, அதை விதைத்து கொண்டே இரு… முளைத்தால் மரம், இல்லையென்றால் மண்ணிற்கு உரம்” என்கிறார் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். காய்கறி சாகுபடி, நெல் சாகுபடி, எள் சாகுபடி, கடலை சாகுபடியில், அசத்தி வருகின்றனர், சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பனம்பட்டியை சேர்ந்த விவசாயிகள். காரைக்குடியிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது இந்த பனம்பட்டி. 10 ஏக்கரில் பல பயிர்களை, ஆண்டு முழுவதும் சாகுபடி செய்து வரும் சித.உடையப்பன் கூறியதாவது: ஒரு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளோம். […]

July 28, 2016 Editor
இயற்கை வேளாண்மை தரும் லாபம் இயற்கை உரம்

இயற்கை வேளாண்மை தரும் லாபம்

இன்று இயற்கை விவசாயத்துக்கு பலரும் மாறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் ரசாயன உரங்களையும் நுண்ணூட்ட சத்துக்களையும் பயோ என்று வார்த்தை தான் இயற்கை விவசாயம் செய்திடும் உத்தி என்ற தவறான பிரசாரத்தில் ஈடுபடுவது வருத்தம் தரும் நிகழ்வாகும். அந்தந்த நிலத்தில் விளையும் பயிரின் கழிவுகளையும் அதன்மூலம் உற்பத்தி செய்யும் மண்புழு உரம் மற்றும் சான்று பெற்ற நிறுவனங்களில் இருந்து பயன்படுத்த வேண்டிய வேம் சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா முதலியவற்றை பயன்படுத்துவதும் இதில் மிக […]

July 28, 2016 Editor
சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி காய்கறி வகைகள்

சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி

கோடைப் பட்டத்தில் பலவிதமான பணப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இருப்பினும் கோடைப் பட்டத்தில் பயிர் சாகுபடிக்கு அபரிமிதமான பாசன நீர் கிடைக்காது. இருக்கும் நீரினை உபயோகித்து மார்க்கெட்டில் நல்ல விலை போகும். மற்றும் விளைச்சலை கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்து பணம் சம்பாதிக்க வேண்டும். கோடைப் பட்டத்தில் நல்ல வருவாயினை தருவது வெள்ளரி சாகுபடி ஆகும். இந்தப் பயிர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த விவசாயிகளுக்கு அதிக நிலப்பரப்பு இருக்காது. இவர்கள் வெள்ளரி சாகுபடியை […]

July 28, 2016 Editor
மழைநீரில் மின்சாரம் செய்திகள்

மழைநீரில் மின்சாரம்

மழை பெய்தால் அந்த இடமே ஈரமாகி விடுகின்றன. அதனால் சில பேர் மழை வருவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் விவசாயம் செய்யும் மக்கள் மழை வருகிறது என்றால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால் மழை வந்தால் தான் பயிர்கள் செழிப்பாக வளரும் என்று எண்ணுகிறார்கள். அதனால் விவசாயிகள் மழையை அதிகமாக நேசிக்கின்றனர். மழை வெறும் விவசாயத்துக்கு மட்டும் பயன் தருவதில்லை. மழை நீரில் இருந்து மின்சாரமும் எடுக்கலாம் என்று மெக்ஸிக்கோ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள மூன்று மாணவர்கள் […]

July 28, 2016 Editor
பாகல் சாகுபடி செய்யும் முறை ! காய்கறி வகைகள்

பாகல் சாகுபடி செய்யும் முறை !

15 சென்ட் நிலத்தை ரோட்டோவேட்டர் கொண்டு உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 5 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவில் குழி எடுத்து.. ஒவ்வொரு குழியிலும் ஒரு சட்டி ஆட்டு எரு போட்டு இரண்டு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு, மேல் மண் கொண்டு குழியை மூடி.. ஒவ்வொரு குழியிலும் ஒரு சாண் இடைவெளியில் மூன்று விதைகள் வீதம் ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15 சென்ட் நிலத்துக்கு 100 […]

July 28, 2016 Editor
வராஹ குணபம் தயாரிப்பு முறை! இயற்கை உரம்

வராஹ குணபம் தயாரிப்பு முறை!

எலும்பு, கொழுப்புடன் கூடிய 5 கிலோ பன்றிக்கறியை எலும்புகள் கரையும் அளவுக்கு நன்கு வேக வைத்து ஆற விட வேண்டும். வேகவைத்த கறியை பிளாஸ்டிக் கலனில் இட்டு அதனுடன் 10 கிலோ பசுஞ்சாணம் சேர்த்துக் கலக்கி, ஒரு கிலோ உளுந்து மாவு, ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர் பசுந்தயிர், 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் கலந்து மூடி நிழலில் வைக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை மட்டும் மூடியைத் திறந்து நன்கு கலக்கி விட வேண்டும். […]

July 26, 2016 Editor