32°C

Editor

புளி சாகுபடி செய்யும் முறை மரங்கள்

புளி சாகுபடி செய்யும் முறை

நாட்டு ரகங்களுக்கு 40 அடி இடைவெளி தேவை. இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் 25 மரங்கள் நடவு செய்யலாம். ஒட்டு ரகங்களுக்கு 25 அடி இடைவெளி போதுமானது. இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் 60 மரங்கள் நடவு செய்யலாம். புரட்டாசிப் பட்டம் புளி நடவுக்கு ஏற்றது. தேர்ந்தெடுத்த நிலத்தில், 2 அடி சதுரம் 2 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ களிமண்ணைக் கொட்டி, கன்றுகளை […]

August 4, 2016 Editor
வல்லாரைக் கீரை (Centella asiatica) கீரை வகைகள்

வல்லாரைக் கீரை (Centella asiatica)

சித்தர் பாடல் அக்கர நோய் மாறும் அகலும் வயிற்றிழிவு தக்கவிரத் தக்கடுப்புத் தானேகும் – பக்கத்தில் எல்லாரையு மருத்தென் றேயுரைத்து நன்மணையுள் வல்லாரையை வளர்த்து வை.                                  (பதார்த்த குணசிந்தாமணி) பொருள் வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, ரத்த பேதியால் உண்டாகும் கடுப்பு போன்றவை தீரும். இவைதவிர, நினைவாற்றல் அதிகரிக்கும். காய்ச்சல் குணமாகும். வேறு பல நோய்களையும் […]

August 3, 2016 Editor
கரிசலாங்கண்ணி கீரை  (Eclipta prostrate) கீரை வகைகள்

கரிசலாங்கண்ணி கீரை (Eclipta prostrate)

சித்தர் பாடல் குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை யுற்றபாண்டு பன்னோ யொழிய – நிரற் சொன்ன மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக் கையாந் தகரையொத்தக் கால்.                                       ( அகத்தியர் குணபாடம் ) பொருள் தொண்டையில் ஏற்படும் நோய்கள், காமாலை, குஷ்டம், ரத்த சோகை, வயிறு ஊதிப்போதல் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும் […]

August 2, 2016 Editor
மொட்டை மாடியில் கோழி வளர்க்கும் முறை ! கால்நடை

மொட்டை மாடியில் கோழி வளர்க்கும் முறை !

ஒரு சேவல், நாலு கோழிகள் இருந்தால் போதும். அது மூலமா முட்டை எடுத்து குஞ்சு உற்பத்தி பண்ணி விற்பனை செய்வது மூலமாக, மாதம் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். இதற்கு அதிகமான இட வசதி கூட தேவையில்லை. வீட்டு மொட்டைமாடியில் கூட வளர்க்க முடியும். எல்லா கோழிகளும் ஒரே நேரத்துல முட்டை வெக்காது. ஒண்ணு முட்டை வைக்கும்போது ஒண்ணு அடையில இருக்கும். இன்னொன்னு குஞ்சுகளோட இருக்கும். அதனால, சுழற்சி முறையில மாசா மாசம் நமக்கு […]

August 2, 2016 Editor
புதிய ரக காளானுக்கு ஆராய்ச்சி! செய்திகள்

புதிய ரக காளானுக்கு ஆராய்ச்சி!

கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்.. பருவ காலங்களில் முளைக்கும் காளான் வகைகளை வரிசைப்படுத்தி, புதிய ரக பால் காளான் தயாரிக்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இயற்கையாக முளைத்த காளான்களைச் சேகரித்து வைத்துள்ளனர். இது குறித்துப் பேசிய, பயிர் நோயியல் துறைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, “காளான் வகைகளை ஆராய்ந்து, புதிய ரகம் வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். உலகளவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வகை இயற்கைக் காளான்கள் உள்ளன. அவற்றில், 50 […]

August 1, 2016 Editor
விவசாயம் குறுஞ்செயலி ஒரு லட்சம் பயனாளர்கள் ! செய்திகள்

விவசாயம் குறுஞ்செயலி ஒரு லட்சம் பயனாளர்கள் !

விவசாயம் குறுஞ்செயலி தற்போது ஒரு லட்சம் பயனாளர்கள் என்ற மைல் கல்லை அடைந்துள்ளது. தமிழ் குறுஞ்செயலிகளில் ஒரு லட்சம் நிறுவல்கள் என்பது ஒரு மைல்கல். இப்போது அதை விவசாயம் குறுஞ்செயலி அந்த மைக்கல்லை அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 3 முறை எங்களது கூகிள் பிளே ஸ்டோர் சந்தை கணக்கு தடை செய்யப்பட்டு இது 4வது கணக்கு. எனவே அதையெல்லாம் எண்ணுகையில் இது ஏற்கனவே வெற்றிதான். என்றாலும் அடுத்த இலக்கு 10 லட்சம் விவசாயிகளையாவது அடைவது என்பதே. விவசாயத்தில் பல […]

July 31, 2016 Editor
நாவல் மர பராமரிப்பும் அதன் பயன்களும்! விவசாய கட்டுரைகள்

நாவல் மர பராமரிப்பும் அதன் பயன்களும்!

நாவல் மரங்களை மழைக்காலங்களில் நடவு செய்வது நல்லது. தனியாக பட்டம் கிடையாது. அனைத்து மண் வகைகளிலும் வளரும். நாவல் மரம் 5 ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்தாலும்.. வருமான ரீதியாக காய்ப்புக்கு வர 8 முதல் 10 ஆண்டுகள் பிடிக்கும். அறுவடையின்போது, பழம் சிதையாமல், மண் படாமல் பக்குவமாகப் பறிக்க வேண்டும். வீரிய நக நாவல் உடையாது, அடிபடாது. அதிக நாள் தாங்கக்கூடியது. இயற்கை இடுபொருட்கள் கொடுக்கும்போது பழத்தின் சுவை கூடுவதோடு தரமும் கூடுகிறது. நாவலில் கொடிநாவல், குழிநாவல், […]

July 31, 2016 Editor
சீஸ்-க்கான சந்தையும் பயிற்சியும் செய்திகள்

சீஸ்-க்கான சந்தையும் பயிற்சியும்

கொடைக்கானலில் பால் பண்ணையுடன், சீஸ் தயாரித்து வரும் பாட்ரிஷியா பதில் சொல்கிறார். “பால் உற்பத்தியில் கவனம் செலுத்தும் தமிழ்நாட்டு மக்கள், அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ‘சீஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ‘பாலாடைக் கட்டி’ புளிப்புச் சுவையுடன் இருக்கும். சீஸ், பலவிதமான சத்துக்கள் நிரம்பிய பொருள். இதற்கு, நட்சத்திர விடுதிகள், துரித உணவகங்கள்.. போன்றவற்றில் அதிக தேவை இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் தேவையான அளவு சீஸ் கிடைப்பதில்லை. வெளிநாடுகளில் […]

July 31, 2016 Editor
புளியங்கொட்டையின் தொழிற்சாலைப் பயன்கள் செய்திகள்

புளியங்கொட்டையின் தொழிற்சாலைப் பயன்கள்

புளியங்கொட்டையின் தொழிற்சாலைப் பயன்கள்: சராசரியாக புளியம்பழம் 55 சதவீதம் சதைப்பற்றுள்ள பகுதியையும், 34 சதவீதம் கொட்டையையும், 11 சதவீதம் நாறும், ஓடும் கொண்ட பகுதியாகும். ஒட்டும் பசை, பெக்டின், கால்நடைத்தீவனம், புரதம் ஆகியவை தயாரிக்க புளியங்கொட்டையின் உள் அமைந்த பருப்புப்பொடி ஆதாரமாக அமைகிறது. பெக்டின் – ஜாம், ஜெல்லி தயாரிக்க பயன்படுகிறது. வியாபார ரீதியாக பழங்களிலிருந்தும், பழத்தோலிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. ஒட்டும் பசை – புளியங்கொட்டையினுள் உள்ள பருப்புப் பொடியில் இருமடங்கு தண்ணீரைச் சேர்த்து 5 சதவீதம் குளுக்கோஸ், […]

July 30, 2016 Editor
ஏற்றம் தரும் எலுமிச்சை ! இயற்கை விவசாயம்

ஏற்றம் தரும் எலுமிச்சை !

எலுமிச்சை மரத்தின் கொழுந்து இலை, பூ, விதை, பிஞ்சுக்காய், கனி, கனிச்சாறு, கனியின் தோல், மரப்பட்டை, வேர், வேர்ப்பட்டை, எண்ணெய் இவை அனைத்துமே பயன்பாட்டில் உள்ளன. எலுமிச்சம் பழச்சாறில் அதிக அளவில் இயற்கையாக அமைந்துள்ள வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து “ஸ்கர்வி என்ற நோயைத் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நா வறட்சி, அதிக தாகம், கண்நோய், காதுநோய், நகச்சுற்று, நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்போக்கு இத்தகைய எண்ணற்ற பிணிகளைப் போக்கவல்ல ஒரு தேசியப்பழம் என்றும் இது போற்றப்படுகிறது. வளமான […]

July 30, 2016 Editor