32°C

Editor

திராட்சை சாகுபடி! பயிர் வகைகள்

திராட்சை சாகுபடி!

தமிழ்நாட்டில் திராட்சை விவசாயத்தில் முதலிடத்தில் உள்ளது தேனி மாவட்டம். எல்லா காலங்களிலும் திராட்சை விளையக்கூடிய சீதோஷ்ணநிலையை தமிழகத்திலேயே தேனியில் மட்டும்தான் காணமுடியும். இங்கு திராட்சை அதிகளவு பயிரிட்ப்படுவதைத் தொடர்ந்து அதை ஊக்குவிக்கும் வகையில் திராட்சை ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைத்துள்ளனர். இதில் 120 புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.   தமிழகத்தில் 2800 ஹெக்டேரில் கோவை, திண்டுக்கல், தெனி திருநெல்வேலி மாவட்டங்களில் திராட்சை விவசாயம் செய்யப்பட்டாலும் தேனியில் மட்டும் 2,300 ஹெக்டேரில் திராட்சை விவசாயம் செய்யப்படுகிறது.   தேனியில் […]

July 3, 2017 Editor
சிறுவாணி குறுக்கே அணை… அச்சத்தில் விவசாயிகள்! செய்திகள்

சிறுவாணி குறுக்கே அணை… அச்சத்தில் விவசாயிகள்!

தென் மாவட்டங்களுக்கு முல்லை பெரியாறு… டெல்டா மாவட்டங்களுக்குக் காவிரி… வட மாவட்டங்களுக்குப் பாலாறு… என மூன்று புறமும் நதி நீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில்,மேற்கு மாவட்ட விவசாயிகளுக்கும் நதி நீர் பிரச்னை துவங்கிவிட்டது. தற்போது, பவானியின் உபநதிகளில் ஒன்றான சிறுவாணியின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டுள்ள கேரள அரசு, அதற்காகச் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதியைப் பெற்றுள்ளது. இதனால், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சிறுவாணி அணையில் இருந்து செல்லும் உபரி நீர், சிறுவாணி […]

July 1, 2017 Editor
பஞ்சகவ்யா – பல்கலைக்கழகத்தின் பரிசோதனை முடிவு! பயிர் பாதுகாப்பு

பஞ்சகவ்யா – பல்கலைக்கழகத்தின் பரிசோதனை முடிவு!

ஆரம்பகாலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதை விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. பாமர மக்களிடம் புழக்கத்தில் இருந்த பஞ்சகவ்யாவை பல்கலைக்கழகம் வரை கொண்டு சேர்த்தவர்களில் ஒருவரான கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின், வளம்குன்றா அங்கக வேளாண்மைத்துறையின், தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். சோமசுத்தரத்தின் அனுபவங்களை கடந்த இதழில் பார்த்தோம். மேலும் பஞ்சகவ்யா குறித்து சோமசுத்தரம் சொன்ன தகவல்கள் இங்கே… “ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தில் 5 வருஷம் வேளாண் அலுவலரா வேலை பார்த்தேன் .அப்போ, […]

July 1, 2017 Editor
பழ ஈக்களுக்கு சிக்கன கவர்ச்சிப் ”பொறி”! பயிர் பாதுகாப்பு

பழ ஈக்களுக்கு சிக்கன கவர்ச்சிப் ”பொறி”!

தோட்டக்கலைப் பயிர்களான பழமரங்கள், காய்கறிகள் போன்றவைகட்கு கெடுக்கக்கூடியது ‘பழ ஈ’க்கள்  சின்ன ஈக்கள் தானே என்று இருந்து விட்டால் மகசூலில் பெரிய பாதிப்பையையும், விற்பனையின் போது தரக்குறைவையும் ஏற்படுத்திவிடும்.  ‘பேக்ட்ரோசீரா குக்கர்பிட்டே’ எனும் பழ ஈக்கள் வெள்ளை நிற இறக்கைகளையும், பழுப்பு மற்றும் சாம்பல் புள்ளிகளையும் உடையது. அளவில் சிறியதாக இருக்கும். ‘சிலியேட்டஸ்’ செம்பழுப்பு நிற உடல் அமைப்பைக் கொண்டது. ‘ஜீனேட்டோ’ மஞ்சள் நிறமாகவும் இடுப்பில் மஞ்சள் பட்டைகளை உடையது. தக்காளி, பூசணி வகை, புடலை, திராட்சை, மாதுளை, […]

July 1, 2017 Editor
அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்! செய்திகள்

அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

நீங்கள் வேளாண் மாணவரா? வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவரா? பணிபுரிபவரா? வேளாண்மை சார்ந்த கட்டுரைகளை எழுதும் ஆர்வம் உள்ளவரா?   உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வேளாண்மை தொடர்பான தலைப்புகளில் உங்களுடைய கட்டுரைகளை ‘அக்ரிசக்தி-விவசாயம்’ செயலிக்கு அனுப்பிவைக்கலாம்; உங்கள் எழுத்துகள் பல்லாயிரம் விவசாயிகளைச் சென்றடையும்; அவர்களுக்கு நன்மை தரும்!   இது சிறந்த சேவைமட்டுமல்ல; நீங்கள் பகுதி நேரமாக வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பும்கூட.   ஆர்வமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்: editor.vivasayam@gmail.com உடனே […]

June 30, 2017 Editor
உலக அளவில்  தானிய உற்பத்தி அதிகரிப்பு! செய்திகள்

உலக அளவில் தானிய உற்பத்தி அதிகரிப்பு!

  ஜ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கைப்படி ,2016-17 நிதியாண்டில் உலக அளவிலான தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2016-17-இல் மட்டும் 250 பில்லியன் மெட்ரிக் டன் அளவிலானதானிய உற்பத்தி அதிகரித்திருந்தாலும் ஆப்பிரிக்கா,ஏமன் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 மில்லியன் மக்கள் பட்டினியையும், உணவு பற்றாக்குறையையும் எதிர்கொண்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 20 மில்லியன் மக்கள் இரவு உணவு உண்ண வழியின்றி பட்டினியாக உறங்கச் செல்கின்றனர். ஒருபுறம் விவசாய உற்பத்தி அதிகரிக்கிறது என்று கூறப்பட்டாலும் மறுபுறம் […]

June 28, 2017 Editor
மண்புழுவும் நுண்ணூட்ட சத்தும்! இயற்கை உரம்

மண்புழுவும் நுண்ணூட்ட சத்தும்!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ‘ஜீரோபட்ஜெட்’ பிதாமகர் சுபாஷ் பாலேக்கர், பதில் சொல்கிறார். “ஜீரோபட்ஜெட் முறையில் சாகுபடி செய்யும்போது, பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் எனத் தனியாக எதையும் கொடுக்க வேண்டாம். மண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றில் நாட்டுமாட்டின் சாணத்தில் மட்டுமே உண்டு. இந்தச் சாணத்தை மண்ணின் மீது வைத்துவிட்டாலே போதும். காதலியைப் பிரிந்த காதலன் தேடிவருவது போல, நாட்டு மண்புழுக்கள் மேலே வந்துவிடும். நம்  பயிருக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளைச் சாப்பிடும். நிலத்தில் கீழே, மேலே என்று மாற்றி […]

June 28, 2017 Editor
பாரம்பரிய முறையில் நிலத்தடி நீர் கண்டறியும் முறை! தொழில்நுட்பம்

பாரம்பரிய முறையில் நிலத்தடி நீர் கண்டறியும் முறை!

“சித்தர்களை,’மந்திரம், மருத்துவம் கற்றவர்கள் ‘ என்றெ பெரும்பாலும் அறிந்து வந்துள்ளோம். ஆனால், சித்தர்கள்தான் , தழிழ் மண்ணின் முதல் விஞ்ஞானிகள். விவசாயம் உட்பட, அவர்கள் தொடாத துறைகளே இல்லை. ‘நீர் வளம் இருந்தால் மட்டுமே, விவசாயம் செழிக்க முடியும். மழைநீரைச் சேமித்து,ஏரி குளங்கள் மூலம் பாசனம் செய்தாலும்,மழை பொய்க்கும்போது, சேமித்து வைத்த பணத்தை எடுத்துச் செலவு செய்வது போல, நிலத்தடி நீரை கவனமாகச் செலவழிக்க வேண்டும்’ என்கிறார்கள், சித்தர் பெருமக்கள். நீரூற்றுக் கண்டுபிடிக்கும் முறைகளைப் பண்டிதர்கள் முதல் […]

June 28, 2017 Editor
தமிழக விவசாயம் – தேவையும் தீர்வும் – 1 தொடர்

தமிழக விவசாயம் – தேவையும் தீர்வும் – 1

இந்தப்பகுதியில் இதுவரை நாளிதழ்கள் மற்றும் விவசாயம் சார்ந்த இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்புடன் நமது கருத்துக்களும் இக்கட்டுரையில் இடம்பெறும்… காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக மாநிலம் தர மறுத்ததாலும் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகள் கைவிரித்ததாலும் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் ஆரம்ப நிலையிலேயே கருகிக் கொண்டிருக்கின்றன. இது, ‘விவசாயி அதிர்ச்சி மரணம் ‘ மற்றும் ‘ விவசாயிதற்கொலை’ என்று அதிர வைக்கும் செய்திகளாகப் படபடக்கின்றன! மத்திய, மாநில அரசுகளுக்குத் தொடர் போராட்டங்கள் […]

June 28, 2017 Editor
“குருவிகள்” பத்திரம் செய்திகள்

“குருவிகள்” பத்திரம்

”சின்னஞ்சிரிய  வண்ணப்பறவை   எண்ணத்தைச்   சொல்லுதம்மா..  அது  இன்னிசையோடு   தன்னை  மறந்து   சொன்னதைச்   சொல்லுதம்மா…”  என்ற  பாடலைக்   கேட்கும் போதெல்லாம்   நினைவின்   இடுக்கிலிருந்து    பட்டெனப்  பறக்கும்    ஒரு  சிட்டுக்குருவி.   மனிதர்களோடு  மனிதர்களாகக்   கலந்து  வாழ்ந்த   இந்தச்  சின்னஞ்சிறிய  உயிர்,  அழிவின்  விளிம்பில்    இருக்கிறது.  உயிர்  பன்மயத்தை  உயிர்ப்போடு  வைத்திருக்க   உயிர்சங்கிலி    எத்தனை  முக்கியமானது  என்பது  நமக்குத்  தெரியும்.  ஆனால்,மனிதனின்   ஒவ்வொரு   செயலும்  அந்தச்  சங்கிலியின்  கண்ணிகளைக்  காவு  வாங்கிக்கொண்டே   இருக்கிறது.   விளைவு   புவிவெப்பம்,  நோய்களின்   பெருக்கம்,  சூழல்கேடு,  ஆரோக்கியக்கேடு  […]

June 27, 2017 Editor