32°C

Editor

சர்வதேச தேங்காய் தினம் இன்று தினம் ஒரு தகவல்

சர்வதேச தேங்காய் தினம் இன்று

ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில், 1969ம் ஆண்டு செப்., 2ம் தேதி துவங்கப்பட்டது. இதை முன்னிட்டு, ஆண்டுதோறும், உலக தேங்காய் தினம், செப்., 2ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், தேங்காயில் இருக்கும் நன்மைகள், கடை பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து, கண்காட்சியாக ஏற்படுத்தப்பட்டு விளக்கப்படுகிறது. உலகின் மிகத் தூய்மையான நீரை நீங்கள் பருகிக்கொண்டு இருக்கிறீர்கள் நண்பர்களே!” என்பார்கள் இளநீர் அருந்துபவர்களிடம். வேர் வழியே உறிஞ்சி உச்சிக்குக் கொண்டுபோய், சொம்புத் தண்ணீரை […]

September 2, 2018 Editor
பயிர் வளர்க்க கடல்நீர் ஊக்கி! இயற்கை விவசாயம்

பயிர் வளர்க்க கடல்நீர் ஊக்கி!

கடலோர மாவட்டங்களில் வாழும் விவசாயிகள் ‘உயிர்நீர்’ எனும் ஒரு திரவத்தை ஆங்காங்கே பயிர்களுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பஞ்சகவ்யாவைப் போல இதுவும் பயிர் வளர்ச்சி ஊக்கிதான். மனிதர்கள் சத்துப் பற்றாக்குறையால் அல்லது நோய் காரணமாக சோர்வடைந்தால் அவர்களுக்கு குளுக்கோஸ் கொடுப்பதைப் போல பயிர்கள் வாடும் நேரங்களில் இந்த ‘உயிர்நீர்’ தெளித்தால் நல்ல பலன் கிடைப்பதாக சொல் கிறார்கள். பாண்டிச்சேரியில் இதை ‘அக்ரிஸ்பான்’ என்ற பெயரில் லிட்டர் 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். கடலோர மாவட்ட விவசாயிகள் தாங்களே இதைத் […]

September 2, 2018 Editor
இந்தப் பறவையின் பெயர் தெரியுமா? – கல் குருவி தினம் ஒரு தகவல்

இந்தப் பறவையின் பெயர் தெரியுமா? – கல் குருவி

மேலே உள்ள இந்த பறவையின் பெயர் தெரியுமா ? கல் குருவியை தெற்காசியாவின் பல பகுதிகளில் காணலாம். இந்தியாவில் கங்கை நதிக்கரைப் பகுதியிலும் ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் இந்தப் பறவை உண்டு. ஸ்ரீலங்கா மற்றும் வங்காள தேசத்திலும் இந்தப் பறவை அதிகம். சற்றே நீண்டு வளைந்த சாம்பல் நிற அலகு. தலை உச்சியில் செம்பழுப்பு நிறம். அதன் பிறகு ஒரு வெள்ளைப் பட்டை. அதற்கும் கீழே கண் பகுதியை ஒட்டி ஒரு கரும்பட்டை. ஆரஞ்சு வண்ணக் […]

September 2, 2018 Editor
பனையில் மொத்தம் எத்தனை வகை தெரியுமா? மரங்கள்

பனையில் மொத்தம் எத்தனை வகை தெரியுமா?

பனையில் 34 வகை உள்ளது 1.ஆண் பனை 2.பென் பனை 3.கூந்தப்பனை 4.தாளிப்பனை 5.குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7.ஈச்சம்பனை 8.ஈழப்பனை 9.சீமைப்பனை 10.ஆதம்பனை 11.திப்பிலிப்பனை 12.உடலற்பனை 13.கிச்சிலிப்பனை 14.குடைப்பனை 15.இளம்பனை 16.கூறைப்பனை 17.இடுக்குப்பனை 18.தாதம்பனை 19.காந்தம்பனை 20.பாக்குப்பனை 21.ஈரம்பனை 22.சீனப்பனை 23.குண்டுப்பனை 24.அலாம்பனை 25.கொண்டைப்பனை 26.ஏரிலைப்பனை 27.ஏசறுப்பனை 28.காட்டுப்பனை 29.கதலிப்பனை 30.வலியப்பனை 31.வாதப்பனை 32.அலகுப்பனை 33.நிலப்பனை 34.சனம்பனை

August 31, 2018 Editor
பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத்திட்டம் பற்றிய விவசாயிகளுக்கு இன்னமும் தெரியவில்லை. ஆய்வறிக்கை கருத்துக்களம்

பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத்திட்டம் பற்றிய விவசாயிகளுக்கு இன்னமும் தெரியவில்லை. ஆய்வறிக்கை

  2016ம் ஆண்டு விவசாயிகளின் நலனுக்காக பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீட்டு திட்டம் துவங்கப்பட்டது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து திட்டங்களிலும் உள்ள சிறப்பான கூறுகளைக்கொண்டும், பலவீனமான குறைபாடுகளுள்ள கூறுகளை நீக்கிவிட்டும் இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டத்தையும், மாற்றம் செய்யப்பட்ட அதன் இன்னொரு வடிவத்தையும் நீக்கிவிட்டு இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது கிீழ்க்கண்ட சிக்கல்களுக்கு பயனளிக்கும் […]

August 21, 2018 Editor
மழையால் 46440 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்பு செய்திகள்

மழையால் 46440 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்பு

இந்தியாவில் கடந்த இரண்டு மாதமாக பெய்ந்து வரும் மழையால் 8 மாநிலங்களில் 46440 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக ராஜ்சபாவில் மாநிலங்களுக்கான விவசாய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.மஹாராஸ்டிரா, இமாச்சல் பிரதேஸ், கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் பெருமளவு பாதிப்படைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ள குறிப்பின் அடிப்படையில் மஹாராஸ்டிர மாநிலம் 22,511 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல், பருத்தி, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளும், சேதமடைந்துள்ளதாகவும், இமாச்சல பிரதேசத்ததில் தோட்டக்கலைத்துறையின் 11798 லட்சம் பரப்பளவிலும், […]

August 16, 2018 Editor
இணையம் வழியாக பொருட்களை விற்க இ-நாம் திட்டத்தில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு : மத்திய அமைச்சர் சில வரி செய்திகள்

இணையம் வழியாக பொருட்களை விற்க இ-நாம் திட்டத்தில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு : மத்திய அமைச்சர்

விவசாயிகள் தங்கள் பொருட்களை இணையம் வழியாக விற்க உதவும் மத்திய அரசின் இ-நாம் திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய விவசாய அமைச்சர் திரு.ராதாமோகன் சிங் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். மார்ச் 2018 இறுதியில் நாடு முழுதும் 585 சந்தைகள் இநாம் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் சந்தைகள் இணைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

August 16, 2018 Editor
மாஞ்செடி பதியம் போடும் முறை இயற்கை விவசாயம்

மாஞ்செடி பதியம் போடும் முறை

வாசகர் ஒருவர் கேட்டதன் அடிப்படையில் மாமரம் பதியம் போடும் முறை பற்றிய காணொளி இங்கே காணலாம்   வாசகர்கள் உங்கள் சந்தேகங்களை editor.vivsayam@gmail.com என்ற முகவரியில் கேட்கலாம் நன்றி!

August 11, 2018 Editor
ஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில்  பயிற்சி! கால்நடை

ஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தங்கி ஊரக வேளாண் பணி குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் விளக்குப்பொறி, விதை நேர்த்தி, அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பல பயிற்சிகளை மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்து வருகின்றனர். இந்த பயிற்சியின் ஒரு கட்டமாக வேளாண்புல ‘ஜி-13’ குழு மாணவிகள் சார்பில் சீர்காழி அருகே உள்ள சந்தப்படுகை கிராமத்தில் ஆடுகள் மற்றும் […]

August 11, 2018 Editor
கன்னியாகுமரியில் ஹைட்ரோபோனிக்ஸ் நுட்ப பயிற்சி செய்திகள்

கன்னியாகுமரியில் ஹைட்ரோபோனிக்ஸ் நுட்ப பயிற்சி

நாள் : 04.08.2018 – சனிக்கிழமை. நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சிக் கட்டணம் – ரூ.100. விவேகானந்தா கேந்திரம், விவேகானந்தாபுரம், கன்னியாகுமரி – 629702. பயிற்சியில் கலந்துகொண்டால் கிடைக்கும் பயன்கள் : ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவனம் வளர்ப்பு , அதன் சிறப்பம்சம் தீவன வகைகள் மற்றும் ரகங்கள், ஹைட்ரோபோனிக் முறையில் தீவனம் உற்பத்தி செய்யும் முறை போன்றவை குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் […]

August 2, 2018 Editor