- தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம்.
- தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது.
- தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த ஒன்று இல்லை.
- சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும்.
- முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.
- வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது.
- இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது.
- குழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் குணப்படும் வாய்ப்பு உள்ளது.
- தீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100, 200 மில்லி இளநீரை தினமும் இரண்டு முறை அருந்தலாம்.
- பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்கூட அலுவலங்களில் காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, தற்போது இளநீர் பருகத் தொடங்கியிருப்பது ஆச்சரியப்படத்தக்க உண்மை
சர்வதேச தேங்காய் தினம் இன்று
Tamilnadu
செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.