32°C

Editor

வீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ செய்திகள்

வீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ

அடீனியம் என்றால் என்ன? பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்டுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது. ஒரு வீட்டின் முன்பு ஜந்து அடீனியம் செடிகள் இருந்தால் அந்த வீட்டின் அழகே தனிதான்.   அடீனியம் வகைகள்: 1. அடீனியம் அரபிக்கம் (Adenium Arabicum) 2. அடீனியம் போஹ்மியானம் (Adenium Boehmianum) 3. அடீனியம் கிறிஸ்பம் (Adenium Crispum) 4. அடீனியம் மல்டிஃபுளோரம் (Adenium Olifolium) 5. […]

May 14, 2020 Editor
விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ? விவசாய கட்டுரைகள்

விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ?

இன்று தமிழகத்தில் விவசாயிகளுக்காக போராடிய ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள். இந்த அக்ரிசக்தி விவசாயம் இன்று ஆலம்விழுது போல் பரந்துவிரிந்துவரக்காரணம் திரு.நம்மாழ்வார் ஐயா அவர்களுடனான திருவண்ணாமலை சந்திப்பே காரணம் http://agrisakthi.com, http://vivasayam.org அவரின் பிறந்தநாளில் இன்றைய விவசாயம் சந்திக்கும், சந்தித்த, சந்திக்க உள்ள பிரச்சினைகளைப் பார்ப்போம் கொரோனோக்கு முன்பு விவசாயம் எப்படி இருந்தது என்று என்பது நமக்குத் தெரியும். ஆனால் இன்றோ கொரோனா பெருந்தொற்றால் வீட்டில் முடங்கியபடி அடுத்த வேளை சாப்பாட்டிற்குப் பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் […]

April 6, 2020 Editor
ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் போகாது : மரு.ஃபரூக் அப்துல்லா கொரோனா குறிப்புகள்

ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் போகாது : மரு.ஃபரூக் அப்துல்லா

சீனாவின் வூஹானில் வாழும் ஒரு இந்திய வர்த்தகர் ஹிந்தியில் ஒரு மெசேஜ் போட்டிருப்பதாகவும் அதை தமிழில் மொழிபெயர்ப்பதாகவும் ஒரு வாட்சப் ஆடியோ / வீடியோ சுற்றுகிறது. அதில் கூறப்படுவது யாதெனில் தினமும் மூன்று அல்லது நான்கு முறை வேது பிடிப்பது/ ஆவி பிடிப்பது கொரோனா வந்தவர்களிடம் தொண்டையில் மூக்கில் இருக்கும் கொரோனாவை கொல்லும் என்று கூறுகின்றது இது உண்மையா? பொய்யா ? Dr.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை சந்தேகமே தேவையில்லை மேற்சொன்ன மெசேஜ் சத்தியமான […]

April 3, 2020 Editor
கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…?? கொரோனா குறிப்புகள்

கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…??

கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…?? மருத்துவரை காலம் தாழ்த்தாமல் அணுகுவதன் முக்கியத்துவம் என்ன? Dr.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை JOURNAL OF AMERICAN MEDICAL ASSOCIATION இல் வெளிவந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 138 கொரோனா தொற்று நோயாளிகளிடம் செய்யப்பட்ட கள ஆய்வு முடிவுகள் (Wang et al study) மருத்துவமனையில் Serious / critical நிலையில் அனுமதிக்கப்பட்ட 138 நோயாளிகளிடம் காணப்பட்ட அறிகுறிகள் பின்வருமாறு 98.6% […]

March 31, 2020 Editor
இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்?  Dr. Karthik raja,M.D, கொரோனா குறிப்புகள்

இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? Dr. Karthik raja,M.D,

Dr. Karthik raja,M.D, Chennai. இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? எனக்கு நோய் வந்தால், மற்றவர்களின் பாதுகாப்பு குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? அது எப்படியும் என்னைக் கொல்லப் போகிறது. சரி சுயநலவாதியே கேளு நோய் வந்த அனைவரும் சாக வில்லை. மக்கள் இந்த நோயிலிருந்து உயிர் பிழைத்துள்ளனர். சீனாவில் இறப்பு விகிதம் 3% மட்டுமே, ஏனெனில் அவர்களுக்கு சரியான தரமான மருத்துவ உதவி கிடைத்தது. பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே இறந்தனர், […]

March 31, 2020 Editor
கொரோனா பற்றி மருத்துவர்களின் குறிப்புகள் கொரோனா குறிப்புகள்

கொரோனா பற்றி மருத்துவர்களின் குறிப்புகள்

அன்பார்ந்த அக்ரிசக்தி விவசாயம் -பயனாளிகளே! வணக்கம் கொரோனா பெருந்தொற்று நம் அனைவரையும் கலக்கத்தில் வைத்துள்ளது. வீட்டில் முடக்கியும் வைத்துள்ளது. அதே சமயம் போலிச்செய்திகளால் நம்மை பதட்டத்திலும் வைத்துள்ளது. உங்களை கொரோனா பதட்டத்தில் இருந்து தவிர்க்க உங்களுக்கு நாங்கள் உதவவிருக்கிறோம். மருத்துவர்கள் மட்டுமே வழங்கும் கொரோனா செய்திகளை உங்களுக்கு நாங்கள் வழங்குகின்றோம். மருத்துவர்கள் உறுதி படுத்திய செய்திகளை மட்டுமே நாங்கள் வழங்குகின்றோம். எனவே தொடர்ந்து இணைந்து இருங்கள் அக்ரிசக்தி விவசாயம் தளத்துடன். புரளிச்செய்திகளை தவிர்த்து மருத்துவர்களின் குறிப்புகளைக்கொண்டு நாம் […]

March 31, 2020 Editor
கொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா ? உங்கள் கவனத்திற்கு செய்திகள்

கொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா ? உங்கள் கவனத்திற்கு

விவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள், ஆலோசனைகள் தேவைப்பட்டாலும் உங்களுக்கு நாங்கள் ஆலோசனை அளிக்கிறோம் உங்களிடம் என்னப் பொருள்கள் இருந்தாலும் அதை உடனடியாக விற்பனைக்கு அனுப்ப நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம், விவசாய சந்தேகங்கள் இருந்தால் உங்களுக்கு எளிதாக வழியும் காட்டுகிறோம் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் விவசாயம் சார்ந்த சிக்கல்கள் என்னென்ன என்பதை மட்டும் […]

March 25, 2020 Editor
விவசாய ஜோதிடம் பகுதி 5 :  நெல்லவிக்க ஏற்ற நாள் தொடர்

விவசாய ஜோதிடம் பகுதி 5 : நெல்லவிக்க ஏற்ற நாள்

  நீடியதோர் ஞாயிறுடன் வியாழன் றானும் நெற்பிறந்த நாளதனால் அவிக்க லாகா கூடியமற் றைந்துநாள் நெல்லவித்தால் குபேரனைப் போல் வாழ்வார்கள்குவல யத்தில் தேடியமா வாசைகார்த் திகையி லுந்தான் திவசகா லங்களிலும் நெல் லலித்து நாடியநெற் புழுங்கலா யிருக்குமாகில் நன்மையிலை தீமையுண்டாம் நாடிப்பாரே. திவச காலம் நெல்ல அவிப்பதற்கு ஏற்ற நாள் ஞாயிறு, வியாழன் நெல் அவிப்பதற்கு ஏற்ற நாள் அல்ல மற்ற நாட்களில் நெல் அவித்தால் குபேரனை போல் வாழ்வார்கள் அமாவாசை, கார்த்திகை, திவச காலங்களிலும் நெல் […]

March 24, 2020 Editor
கீரனூர் ஒடுகம்பட்டி  கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி பயிற்சிகள்

கீரனூர் ஒடுகம்பட்டி கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணை புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகேயுள்ள குடும்பம் – கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்கவிருக்கிறார்கள். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ. 600. தொடர்புக்கு: தொலைபேசி: 0431 2331879, 98424 33187.

March 12, 2020 Editor
பாபநாசம் சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மூலிகை முற்றம் பயிற்சிகள்

பாபநாசம் சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மூலிகை முற்றம்

மூலிகை முற்றம் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெறவுள்ளது. மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். பயிற்சிக் கட்டணம் ரூ. 200 மட்டும், தங்குமிடம் இலவசம். முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, செல்போன்: 98421 66097.

March 12, 2020 Editor