32°C

Editor

பூஜைக்கு ஏற்ற பூவன். . . இயற்கை விவசாயம்

பூஜைக்கு ஏற்ற பூவன். . .

பழத்தில் $ 1 லட்சத்து 12 ஆயிரம். . . இலையில் $ 1 லட்சத்து 98 ஆயிரம்! வாழைப் பழங்களில் பல ரகங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பூஜைக்கு பூவன் வாழையைத்தான் பயன்படுத்துவார்கள். ஆய்டு முழுவதுமே வாழைப்பழங்களுக்குத் தேவை இருந்தாலும். . . பொங்கல் சமயத்தில் பூவன் வாழைக்கு நல்ல கிராக்கி இருக்கும். அதிலும் தஞ்சவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் விளையும் பூவன் வாழைக்கு தனி மரியாதை, இப்பகுதியின் பிரத்யேக தட்பவெப்ப நிலையால் இந்த வாழை, புள்ளிகள் […]

March 14, 2015 Editor
பழுபாகலுக்கு நல்ல கிராக்கி! இயற்கை விவசாயம்

பழுபாகலுக்கு நல்ல கிராக்கி!

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைப்பட்டி, மம்மானியூர், கோம்பை உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் பாரம்பரிய ரகமான பழுபாகற்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இக்காயை பல்பகால், கரிபாகல், நெய்பாகல் எனவும் அழைக்கப்படும். இது கொடி வகைப்பயிராக இருந்தாலும். . . பெரும்பாலும் உடுபயிராக சாகுபடி செய்யப்படுவதால் தனியாக பந்தல் அமைக்கும் செலவில்லை. இது கசப்புச்சுவை கொண்டிருக்காது. இதை காளான் மற்றும் இறைச்சி சமைக்கும் விதத்தில் சமைத்தால் நல்ல ருசியாக இருக்கும். இதற்கு திண்டுக்கல் சந்தையில் கிராக்கி உள்ளது. விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ […]

March 14, 2015 Editor
இயற்கை முறையில் தக்காளி சாகுபடி ! இயற்கை விவசாயம்

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி !

தென்னைக்கு இடையில் ஊடுபயிராக தக்காளி சாகுபடி செய்யும் முறை பற்றி, சோமசுந்தரம் சொன்ன தகவல்கள் இங்கே……….. ஒன்றரை அடி இடைவெளி ! நிலத்தை நன்கு உழுது, பாத்திக் கட்டித் தயார் செய்த பிறகுதான் நாற்றுகளை வாங்க வேண்டும். பாத்திகளில் தண்ணீர்விட்டு வடிந்து சுண்டிய பிறகு, ஒன்றரை அடி இடைவெளியில் நாற்றுகளை ஈர நடவு செய்ய வேண்டும். 2 ம் நாளில் உயிர்த்தண்ணீர் கொடுக்க வேண்டும். நிலம் காயாத அளவுக்கு பாசனம் செய்ய வேண்டும். அடைமழைக் காலத்தில் செடிகள் […]

February 23, 2015 Editor
தகதகக்கும் இயற்கைத் தக்காளி….. காய்கறி வகைகள்

தகதகக்கும் இயற்கைத் தக்காளி…..

நேரடி விற்பனையில், ரூபாய் 1 லட்சம் கூடுதல் லாபம்! கஷ்டப்பட்டு உழைத்து, என்னதான் தரமான மகசூலை எடுத்தாலும்… அதை சந்தைப்படுத்துதல் என்கிற விஷயத்தில், விவசாயிகளுக்குச் சறுக்கல்தான். கமிஷன் மண்டியில் என்ன விஅலைக்கு விற்றாலும், மொத்த விற்பனையில், 10 சதவிகிதம் தரகு அழுதாக வேண்டும். சிலசமயம் விற்ற பணம் கமிஷனுக்கே சரியாகிப்போய், வெறும் கோணிப்பையுடன் வீடு திரும்பும் நிலையும் விவசாயிகளுக்கு ஏற்படுவது உண்டு. ‘இதை மாற்ற வழியே இல்லையா?’ என்ற ஏங்கும் விவசாயிகள் ஒரு பக்கம் இருந்தாலும்… சில […]

February 23, 2015 Editor
அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு…! கால்நடை

அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு…!

‘மாடு மறுவருஷம்… ஆடு அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொல்வடை சொல்வார்கள். அதாவது மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால், அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் இதைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதேபோல, மாட்டுச் சாணத்தை மட்க வைத்துதான் மண்ணில் இட வேண்டும். ஆட்டு எருவை அப்படியே மண்ணில் இடலாம். அதனால் மாட்டுச் சாணம் மூலம் அடுத்த ஆண்டில்தான் மகசூல் கிடைக்கும். ஆட்டு எரு மூலம் அந்த ஆண்டிலேயே மகசூல் கிடைக்கும் […]

January 28, 2015 Editor
செழிப்பான வருமானம் தரும் செம்பு…. இயற்கை விவசாயம்

செழிப்பான வருமானம் தரும் செம்பு….

உருளைக்கிழங்கு இணையான சுவை மற்றும் சத்துக்களைக் கொண்டது, சேம்பு என அழைக்கப்படும் சேப்பக்கிழங்கு. இது தரைப்பகுதியிலே வளரக்கூடியது என்பது கூடுதல் சிறப்பு. புளிக்குழம்பு, வறுவல், பொரியல் என பல வகைகளில் இதைச் சமைக்கலாம். குறிப்பாக திண்டுக்கல், நத்தம், காரைக்குடி போன்ற பகுதிகளில் சைவ விருந்துகளில் பட்டை, சோம்பு போன்ற நறுமணப் பொருட்களைச் சேர்த்து இறைச்சி போலவே இதை சமைத்துப் பரிமாறும் பழக்கமும் உண்டு. அதனால், எப்போதும் நல்ல தேவை உள்ள காய்கறிகளில் சேப்பக்கிழங்கும்  ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது. தன்னை […]

January 27, 2015 Editor
தக்காளிச் செடிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட… பயிர் பாதுகாப்பு

தக்காளிச் செடிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட…

வேம்பு, புங்கன் கரைசல்! வேப்பெண்ணெய் 4 லிட்டர், புங்கன் எண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றுடன் 500 மில்லி காதி சோப்புக்கரைசலைச் சேர்த்து… நன்றாகக் கலக்கி, அக்கரைசலில் இருந்து, 100 மில்லியை எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலவேளைகளில், கைத்தெளிப்பான கொண்டு, புகைபோல் தெளிக்க வேண்டும். 20, 40 மற்றும் 60-ம் நாட்களில், தக்காளியில் பூச்சிகளை விரட்ட இக்கரைசலை தெளிப்பு அவசியம். பூச்சிகளை விரட்ட வேம்புக் கரைசல்! நடவு செய்த 50 முதல் 65-ம் நாளில், செடிகள் […]

January 27, 2015 Editor
எங்கே விற்கலாம்… எப்போது விற்கலாம்…..? செய்திகள்

எங்கே விற்கலாம்… எப்போது விற்கலாம்…..?

விற்பனைக்கு வழிகாட்டும் வேளாண் பல்கலைக்கழகம்! பருவகால மாறுபாடுகள், ஆட்கள் பிரச்சனை, தண்ணீர்த் தட்டுப்பாடு எனப் பலவிதமான பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஓயாது உழைத்து உற்பத்திச் செய்வதைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் விவசாயிகள். ஆனால் எந்தப் பட்டத்தில் எந்தப் பயிரை விதைத்தால், நல்ல விலை கிடைக்கும் என்பது தெரியாமல்தான் பலர் தவிக்கிறார்கள். இதற்காகவே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், மாதம்தோறும் பலவகையான பயிர்களுக்கு முன்னறிவிப்பை வெளியிட்டு, […]

January 27, 2015 Editor
தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள் செய்திகள்

தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

பயிர் பாதுகாப்பு : தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள் நாற்றழுகல் முன்பருவ இலைக்கருகல் ஃபுசேரியம் வாடல் செப்டோரியா இலைப்புள்ளி பாக்டீரியா வாடல் பாக்டீரியா இலைப்புள்ளி தக்காளி தேமல் நோய்(TMV) இலை சுருட்டை நோய்(TLCV) தக்காளி புள்ளி வாடல் (TSWV) 1. நாற்றழுகல்:  அறிகுறிகள் : நாற்றழுகல் தக்காளியில் இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது. அதாவது முளைக்குமுன் மற்றும் முளைத்தபின் ஏற்படுகிறது. முளைக்கும் முன் நிலையில் மண் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே நாற்று இறந்துவிடுகிறது. முளைக் குருத்து முற்றிலுமாக அழுகிவிடும். […]

January 13, 2015 Editor
ஒரே நிலத்தில் மூன்று வகை விவசாயம்; பூவந்தி விவசாயி புதிய முயற்சி இயற்கை விவசாயம்

ஒரே நிலத்தில் மூன்று வகை விவசாயம்; பூவந்தி விவசாயி புதிய முயற்சி

பூவந்தி: பூவந்தி அருகே விவசாயி ஒருவர் ஒரே நிலத்தில் மூன்று வகை பயிர்களை சாகுபடி செய்து லாபம் ஈட்ட புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். பூவந்தி அருகே கட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அய்யாவு. தனது நிலத்தில் வாழை பயிரிட்டு வந்தார். நாள் முழுவதும் வாழைக்கு தண்ணீர் வேண்டும், சாகுபடி நேரம் அதிகமாவதுடன் தண்ணீரின் தேவையும் அதிகமாகி வந்தது. இதனை குறைக்க சீசனுக்கு ஏற்றவாறு தர்ப்பூசணி செடியை பயிரிட்டுள்ளார். மூன்று மாத கால பயிரான தர்ப்பூசணி செடி நிழலில் […]

January 9, 2015 Editor