32°C

செய்திகள்

மடிநோய்க்கு மருந்து! கால்நடை

மடிநோய்க்கு மருந்து!

மாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்னையே ‘மடிநோய்’ மடிநோய் வந்த மாடுகளை ஒதுக்கி வைச்சிடுவாங்க. கால் கிலோ சோற்றுக்கற்றாழையைத் துண்டு துண்டாக வெட்டி, அதை ஆட்டுக்கல் உரல்ல அரைச்சு, இரண்டு கரண்டி மஞ்சள்தூளையும், அரைப் பாக்கு அளவு சுண்ணாம்பையும் சேர்த்து கொஞ்சமா தண்ணீர் விட்டு பிசையனும். இதை ஒரு நாளுக்கு பத்து தடவை வீதம், ஒரு மாசத்துக்கு மடிக்காம்புகள்ல தேய்ச்சா… மடி நோய் சரியாகிடும். நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 4, 2016 Editor
மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் ! இயற்கை உரம்

மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் !

மழைக்காலம், பூச்சிகளின் பெருக்கத்துக்கு ஏற்ற உகந்த சூழ்நிலையாக உள்ளது. இந்நிலையில் நெல்லில் இலைச்சுருட்டுப்புழு, இளம் நெற்பயிர், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களில், இலைகளில் உள்பக்கமாகச் சுருட்டி, உள்ளிருந்து பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். இதனால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் தண்டுத் துளைப்பான் தாக்கப்பட்ட பயிர்களில் தண்டுப் பகுதி பல இடங்களில் காய்ந்து காணப்படும். ஒற்றை நாற்று நடவு செய்த நிலங்களில், போதுமான அளவுக்குக் காற்று, சூரிய ஒளி கிடைப்பதால், புகையான் தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஆனால், […]

July 4, 2016 Editor
பரோட்டாவுக்கு சவால் விடும் தினை ! சிறுதானிய சமையல்

பரோட்டாவுக்கு சவால் விடும் தினை !

’ஒரு சாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா? உணவுப் பஞ்சம் வராட்டா, நம்ம உசுரை வாங்குமா பரோட்டா?’        இந்த பாட்டை, 1951-ம் வருசம் வெளியான ‘சிங்காரி’ திரைப்படத்துக்காக எழுதியிருக்காரு கவிஞர் தஞ்சை ராமையாதாஸ். ஆக, உணவுப் பஞ்சம் மூலமாதான், ஊர் முழுக்க பரோட்டா பரவியிருக்கு. அட, ஆமாங்க… இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்துல, உலகம் முழுக்கவே உணவுப் பஞ்சம். போர்வீரர்களுக்குகூட உணவு கொடுக்க முடியாத நிலை. அப்பதான், குறைஞ்ச […]

July 2, 2016 Editor
மணத்தக்காளி சாகுபடி இயற்கை விவசாயம்

மணத்தக்காளி சாகுபடி

மணத்தக்காளி விதைக்காக அலையத் தேவையில்லை. சில செடிகளை அறுக்காமல் விட்டால், காய் பிடித்து, பழம் வைக்கும். அந்தப் பழங்களைப் பறித்து, விதைகளை எடுத்து, சாம்பலில் புரட்டி காய வைத்து, பயன்படுத்தலாம். மணத்தக்காளி, களர்நிலம் தவிர மற்ற அனைத்து வகை மண்ணிலும் வளரும். செம்மண் மற்றும் மணல் கலந்த செம்மண் நிலங்களில் சிறப்பாக வளரும். சாகுபடிக்கு தனியாக பட்டம் இல்லை. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். நிலத்தை புழுதியாக உழவு செய்து, 8 அடிக்கு 8 அடி இடைவெளியில் […]

June 23, 2016 Editor
மரச்சாம்பலும் விவசாயமும் செய்திகள்

மரச்சாம்பலும் விவசாயமும்

மரச்சாம்பல் என்பது மரத்தை எரிப்பதனாலோ அல்லது மரத்துகள்களை எரிப்பதாலோ கிடைக்கும். இந்த மரச்சாம்பலில் பொட்டாசியம், பொட்டாசியம் கார்பனேட் உள்ளதால் விளைநிலங்களில் உள்ள மண்ணிற்கும், பயிர்களுக்கும் மிகவும் ஏற்றது. மண்ணில் உள்ள தேவையில்லாத அசிடிட்டிக்களை போக்கவல்லது மரச்சாம்பல். மேலும் மரச்சாம்பலில் உள்ள 13 வகையான சத்துக்கள் மண்ணிற்கு வளமளிக்கின்றன. ஆனால் சாம்பல் பயன்படுத்தும்போது மிக கவனமாக கையாள வேண்டும். மண்ணில் அதிகமான ஆசிட் இருந்தாலோ அல்லது பொட்டாசியம் இருந்தாலோ அதற்கு மரச்சாம்பல்தான் சிறந்த தீர்வு. மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral  

June 21, 2016 Editor
விவசாயத்தை எளிதாக்கும் பொருட்களின் இணையம் (IoT) செய்திகள்

விவசாயத்தை எளிதாக்கும் பொருட்களின் இணையம் (IoT)

விவசாயத் துறையில்தான் தொழில்நுட்பம் மிகமிகக் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆனால் பொருட்களின் இணையம் (IoT) தொழில்நுட்பம் விவசாயிகளை மிக நுட்பமான விவசாயிகளாக மாற்றவுள்ளது. ஆம் சென்சார்கள் எனப்படும் நுண்ணுணர்விகள் வழியாக விவசாயத்தை இன்னமும் மேம்படுத்தலாம். பெருகி வரும் தண்ணீர் பிரச்சனைக்கு பொருட்களின் இணையம் (IoT) இன்னொரு வரப்பிரசாதம் ஆகும். ஆம் இதற்கு முன் தண்ணீரை பொத்தாம் பொதுவாக பயிர்களுக்கு இறைத்துவிடுவோம். ஆனால், “பொருட்களின் இணையம்” உணர்வி மூலம் பயிர்கள் உள்ள மண்ணில் புதைத்து வைத்துவிட்டு வேரை கண்காணிக்கிறார்கள். […]

June 18, 2016 Editor
பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள் கீரை வகைகள்

பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள்

தமிழகத்தில் நிலவும் தட்பவெப்ப நிலையை, சித்தர்களும், முன்னோர்களும் 6 வகைப் பருவங்களாகப் பிரித்துள்ளனர். கீரைகள் பற்றிய இந்தப் புத்தகத்தில் பருவ காலங்களுக்கு என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். இருக்கிறது, மற்ற உணவுகளைப் போல் கீரை உணவுகள் கிடையாது. மற்றவற்றில் இல்லாத, கிடைக்காத பல ‘நல்ல விஷயங்கள்’ கீரைகளில் உள்ளன. அவற்றை, எந்தவித தடங்கல்களோ, குறைபாடுகளோ இல்லாமல் ‘அனுபவிக்க’ வேண்டும் என்றால், தட்பவெப்ப நிலைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சித்தர்களும், இதைக் கருத்தில் கொண்டுதான் பருவ காலங்களுக்கு […]

June 15, 2016 Editor
விவசாய குறுஞ்செயலியை பயன்படுத்துவோர் கவனத்திற்கு செய்திகள்

விவசாய குறுஞ்செயலியை பயன்படுத்துவோர் கவனத்திற்கு

விவசாய குறுஞ்செயலியை கடந்த இரண்டு வருடங்களாக பயன்படுத்தி ஆதரவளித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.. விவசாயம் குறுஞ்செயலி தற்பொழுது இணைய வேகத்திற்கு ஏற்றாற்போல் இயங்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே பழைய குறுஞ்செயலியை நீக்கி விட்டு புதியதாக தரவிறக்கம் செய்யவும் அல்லது மேம்படுத்திக்கொள்ளவும், கீழ்கண்ட இணைப்பில்.. https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil  

May 26, 2016 Editor
புல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு! செய்திகள்

புல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு!

தென் அமெரிக்காவில் உள்ள Los Llanos வெப்பமண்டல புல்வெளி பகுதியில் காணப்படும் மண் மிகப் பெரிய மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் அப்பகுதியில் உள்ள மண்ணில் அதிகம் மண் புழுக்கள் காணப்படுகிறது என்பதாகும். தானகவே அப்பகுதியில் மண் புழு சாணம் உருவாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியில் 3 அடி ஆழத்திலேயே மண் புழுக்கள் மிக அதிகமாக உருவாகியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் புல்வெளி அதிகம் இருப்பதாலேயே மண் புழுக்கள் […]

May 23, 2016 Editor
விவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி செய்திகள்

விவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி

Strathclyde என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  விவசாயத்தை மேம்படுத்த  புதிய தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி மிக விரிவாக கூறியுள்ளனர். அவர்கள் ஆய்வின்படி விண்வெளியில் பயன்படுத்திய மண் பரிசோதனை சாதனம் தற்போது விவசாய வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி கருவி மண்ணின் தரத்தை அறிந்துகொள்ள மிக உதவியாக இருக்கிறது. இந்த கருவிக்கு பெயர் மண் உணரி. இது மண்ணின் தன்மையினை மிக எளிதாக கண்டுபிடித்து விடுகிறது. இந்த கருவியின் செயல்பாட்டை துல்லியமாக அறிந்துகொள்ள […]

May 23, 2016 Editor