32°C

செய்திகள்

விழாக்களை அலங்கரிக்கும் ஒசூர் ரோஜாவுக்கு வெளிநாட்டில் மவுசு செய்திகள்

விழாக்களை அலங்கரிக்கும் ஒசூர் ரோஜாவுக்கு வெளிநாட்டில் மவுசு

தமிழகத்தில் ரோஜா உற்பத்தியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலிடம் வகிக்கிறது. இங்கு நிலவும் மிதமான தட்வெப்ப நிலை, செம்மண் கலந்த மணல் பாங்கான நிலம் மலர் சாகுபடிக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் சாதாரண நிலத்திலும், பசுமை குடில்கள் அமைத்தும் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது. சுட்டெரிக்கும் கோடை காலத்திலும் மலர் உற்பத்தி பாதிக்கமால் இருக்க வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமான பாலித்தீன் பேப்பர்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர்.  ஓசூரில் விளையும் […]

August 23, 2014 Editor
புதினா, கொத்தமல்லியால் மணக்கும் சூளகிரி செய்திகள்

புதினா, கொத்தமல்லியால் மணக்கும் சூளகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி பகுதிகள் காய்கறி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக சூளகிரி, பேரிகை, மருதாண்டப்பள்ளி, மாரண்டப்பள்ளி, மைலோப்பள்ளி, உலகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகளின் பிரதான பயிராக கொத்தமல்லி, புதினா உள்ளது. இந்த பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை, மண்வளம் ஆகியவற்றால் இந்த பயிர்கள் செழித்து வளருகின்றன. மேலும் சுவை, மணமும் கூடுதலாக உள்ளது. சென்ட் கணக்கில்நிலம் இருந்தாலே போதும் என்பதால் ஏராளமான விவசாயிகள் இவற்றை விரும்பி பயிரிடுகின்றனர். கொத்தமல்லி விதைத்த 70 […]

August 23, 2014 Editor
விவசாயிகளுக்கு வளம் தரும் தக்காளி-தென்னை செய்திகள்

விவசாயிகளுக்கு வளம் தரும் தக்காளி-தென்னை

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு ஏற்ற இடமாக வாழப்பாடி தாலுகா உள்ளது. தக்காளி உற்பத்தியில் வாழப்பாடி முன்னிலையில் உள்ளது. வாழப்பாடி, பேளூர், மங்களாபுரம் ,கருமந்துறை உள்ளிட்ட வாழப்பாடி பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபாடி செய்யப்பட்டுள்ளது. வாழப்பாடி, பேளூரில் தக்காளி மண்டி உள்ளது. வாழப்பாடி சுற்று வட்டார பகுதியில் அறுவடை செய்யப்படும் தக்காளி மண்டிகளுக்கு தினமும் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து சென்னை, சேலம், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு தக்காளி செல்கிறது. […]

August 22, 2014 Editor
சோற்று கற்றாழை வேண்டுமா? செய்திகள்

சோற்று கற்றாழை வேண்டுமா?

சோற்று கற்றாழை வேண்டுமா? வணக்கம் நண்பர்களே கரூர் மாவட்டம் அருகேயுள்ள நண்பர்களிடம் 50 ஏக்கருக்கும் மேல் சோற்றுக்கற்றாழை பயிரிட்டு உள்ளார்கள். யாரேனும் சொற்றுக்கற்றாழை எங்கே விற்பது அல்லது விற்பனை முகவர்களின் முகவரியினை தெரிவிக்கமுடியுமா?

August 19, 2014 Editor
விவசாயம் – ஆன்டிராய்டு மென்பொருள் செய்திகள்

விவசாயம் – ஆன்டிராய்டு மென்பொருள்

தர்மபுரியில் 25.7.2014 நடைப்பெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் விவசாயம் மென்பொருளை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு.விவேகானந்தன் அவர்கள் முன்னிலையில் விவசாயிகளிடைே அறிமுகப்படுத்தி பேசிட ஒரு வாய்ப்பு அமைந்தது. நாங்கள் 21ம் தேதி முகநூலில் விவசாயம் பற்றிய ஆன்டிராய்டு மென்பொருளை பதிவிடவும். அதை தர்மபுரி மாவட்ட விவசாயத்துறை இணை இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திரு.மதுபாலன் அவர்கள் அந்த மென்பொருளை பயன்படுத்திப்பார்த்துவிட்டு நேரில் வரச்சொன்னார். அன்றே நேரில் பார்த்து இந்த மென்பொருளை மக்களிடையே கொண்டு சேர்க்க நாங்கள் தயார் என்று அறிவித்ததோடு […]

July 28, 2014 Editor
கிருஷ்ணகிரி மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விட்டனர். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து இரு பிரதான கால்வாய்களில் முதல்போக புன்செய் பாசனத்திற்காக 16.7.2014 முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

July 15, 2014 Editor
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் செய்திகள்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்

மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் ஆகிய தொழிற்படிப்புகள் போல வேளாண் ஆராய்ச்சி படிப்புக்கும் இன்று முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்தப் படிப்பில் படிக்கவும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேற்கூறிய படிப்புகளுக்கு அங்கீகார கவுன்சில்கள் செயல்பட்டு வருவது போல, வேளாண் ஆராய்ச்சி படிப்புக்கும் தனி கவுன்சில் உள்ளது. அது, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில். மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி பெற்ற அமைப்பு இது. இதற்கு முன்னர் இக்குழுமம், உயர் அதிகாரம் படைத்த […]

July 15, 2014 Editor
வேளாண் பல்கலையில் மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி செய்திகள்

வேளாண் பல்கலையில் மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் பயிற்சிமையம் சார்பில், பொதுமக்கள், இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தபடியே சிறு சிறு தொழில்கள் செய்ய வாரந்தோறும் பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறது. அதன்படி, வரும் 17ம் தேதி வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த ஒருநாள் பயிற்சி அளிக்கிறது. நேரம் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை. கட்டணம் ரூ.400. மகளிர் குழுவை சேர்ந்தவர்களுக்கு ரூ.300, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.200ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதியஉணவும், தயாரிப்புப் பொருட்களும் வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை […]

July 15, 2014 Editor