செய்திகள்
பூச்சிக்கொல்லிகளின் வகைகள்
தொடு நஞ்சு, குடல் நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, புகை நஞ்சு, நரம்பு நஞ்சனு மொத்தம் 5 வகைப் பூச்சிக்கொல்லிகள் இருக்குது.
பயிர் பாதுகாப்பு
தொடு நஞ்சு, குடல் நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, புகை நஞ்சு, நரம்பு நஞ்சனு மொத்தம் 5 வகைப் பூச்சிக்கொல்லிகள் இருக்குது.
“இயற்கைப் பூச்சிவிரட்டி நல்ல பூச்சிகளை நிலத்திலிருந்து விரட்டாது. பயிருக்கு கெடுதல் செய்யும் பூச்சிகளை மட்டுமே விரட்டும். அதுதான் இயற்கையின் அதிசயம். எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும், வரப்பில் தட்டைப் பயறு இருக்க வேண்டும். அதற்கு அடுத்ததாக மஞ்சள் நிறப் பூக்கள் உள்ள செடிகள் இருக்க வேண்டும். நிலத்தைச் சுற்றிலும் வரப்புகளில் 8 அடி இடைவெளியில் ஆமணக்கு இருக்க வேண்டும்.
தமிழகத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சத்தமில்லாமல் பரவலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளி த்தபோது 10க்கும் மேற்பட்ட விவசாயிகளில் இறந்துள்ளனர், அதே போன்ற பிரச்னை தற்போது தமிழக மக்களுக்கும் ஏற்படாத வகையில் நாம் அனைவரும் முச்செரிக்கையாக இருப்பது சாலச்சிறந்தது. அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது பயிர்களும் பாதிக்கப்படுகின்றன , நிலமும் பாதிக்கப்படுகிறது, அதை சாப்பிடும் மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு விவசாயிகள் தெளிப்பான்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லியை வாங்கும்போதும் அதைப் […]
வெயில் மற்றும் களையால், பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வீணாவதை தடுக்க, தோட்டக்கலை பயிர்களுக்கு, நிலப்போர்வை அமைப்பதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் ஏரி, குளங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அதோடு நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டது. ஆனால் இப்போது கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பயிர்களுக்கு பாய்ச்சப்படும் நீர் மற்றும் ஈரப் பதத்தை வெயில் மற்றும் களைகள் வேகமாக […]
தேயிலைக்கொசு:ஹெலோபெல்டிஸ் அன்டோனி வாழ்க்கை சரிதம் :- பூச்சிகள் மெல்லியதாக, சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் காணப்படும். பெண் பூச்சி, முட்டைகளை மொட்டுக்கள் மற்றும் இலைகள் பறிக்கப்பட்ட தண்டுப் பகுதிகளில் சொருகிவிடுகின்றன. முட்டைகளிலிருந்து இளம் பூச்சிகள் வெளிவரும். இவை இறக்கைகளற்று காணப்படும். இளம்பூச்சிகள் 5 முறை தோலுரித்து முழுவளர்ச்சியடைந்த பூச்சியாக மாறும். நோயின் அறிகுறிகள்:- இளம் பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும் செடிகளின் குருத்துப் பகுதிகள், மொட்டுகள், தளர் இலைகள் போன்ற பாகங்களில் குத்தி, சாற்றை உறிஞ்சி உண்டு அதிக […]
எலுமிச்சை பிளவை நோய்: சாந்தோமோனாஸ் சிட்ரை நோய் அறிகுறிகள்: இந்நோயானது சொரிநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோய் இலைகள், கிளைகள், முதிர்ந்த கிளைகள், பழங்கள், முட்கள் போன்ற எல்லா பாகங்களையும் தாக்கக்கூடியது. இலைகளில் முதலில் சிறிய வட்ட வடிவ நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றும். நோய் முற்றிய நிலையில் புள்ளிகள் நிறமாக மாறி, நடுப்பகுதி சொரசொரப்பான தக்கை போல குழிவுடனும் காணப்படும். பழங்களிலும் இதேபோன்று நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றி பின் காய்ந்து, […]
வெங்காயத்தை ஆனியன் என்றும் கூறலாம். இது யூனியோ என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் தாவரவியல் பெயர் : அல்லியம் சீபா இது தண்டுள்ள சிறிய செடி. ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. தரமான வெங்காயக் குமிழ்கள் சேகரிப்பு!! வருடம் முழுவதும் […]
எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி: பாப்பில்லியோ டெமாலியஸ் வாழ்க்கை சரிதம்: அந்துப்பூச்சிகள் கருமை நிற இறக்கைகளில் மஞ்சள், வெண்மை கலந்த புள்ளிகளைக் கொண்டிருக்கும். அந்துப்பூச்சிகள் இளம் தளிர்களில் முட்டைகளை இடும். முட்டையிலிருந்து வெளிப்படும் புழுக்கள், பறவையின் எச்சம் போல் காணப்படும். வளர்ந்த புழுக்கள் பெரியதாக பச்சை நிறத்தில் கழுத்தில் மாலை போன்ற அடையாளத்துடன் காணப்படும். பின் இலைகளிலேயே கூட்டுப்புழுவாக மாறும். கூட்டுப்புழுவிலிருந்து அந்துப்பூச்சி வெளிவரும். சேத அறிகுறி: […]
இந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாம்தான், உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்துப் படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொருவாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, […]
வணிகமுறை இனப்பெருக்கமுறைகளில் ஒன்றான செடி வளர்ப்பு. செடியின் கிளையை வளைத்து மண்ணில் நுழைத்து அதன் மேல் மண்ணிட்டு பின் தொடந்து நீர்ப்பாய்ச்சினால், மண்ணில் நுழைக்கப்பெற்ற பகுதியின் அடியில் புத்தும் புதிய வேர்கள் உருவாகும்; அதன் விளைவாக புதியச்செடி துளிர்க்கும். துளிர்விட்ட புதிய செடி ஓரளவிற்கு வளர்ந்தவுடன் அச்செடி மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனிச்செடியாக வளர்க்கப்படும். ஒட்டுக்கட்டுதலின் போது தாய்ச்செடியிலும் வேர்ச்செடியிலும் ஒரே மாதிரியான காயங்கள் ஏற்படுத்தி இணைத்துப் பின்னர் துணியினால் அல்லது பாலீதீன் பேப்பர் மூலம் கட்டி விடுவர். […]
தேடலை தொடங்க குறைந்தபட்சம் 3 எழுத்துக்களை தட்டச்சு செய்யவும்.
உங்கள் ஊர், கிராமம் அல்லது பகுதியில் நடந்த சம்பவங்கள், விபத்துக்கள், திருவிழாக்கள் அல்லது பொதுப் பிரச்சனைகளை எமது செய்திப் பிரிவுக்கு உடனே பகிருங்கள்.
Agrisakthi முக்கிய பிரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் உங்கள் திரையில் பெற அனுமதி வழங்கவும்.