32°C

கால்நடை

கால்நடை

கன்றுகளைத் தாக்கும் இரத்தக்கழிச்சல் நோய் கால்நடை

கன்றுகளைத் தாக்கும் இரத்தக்கழிச்சல் நோய்

இரத்தக்கழிச்சல் இளங்கன்றுகளைத் தாக்கும் முக்கியமான ஒரு செல் ஒட்டுண்ணி நோயாகும். நோய்க்காரணி : இந்நோய் பத்திற்கும் மேற்பட்ட எய்மீரியா என்ற ஒரு செல் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. அவற்றில் எய்மீரியா சுர்ணை எ.போவிஸ் மற்றும் எ.சிலிண்ட்ரிகா போன்ற ஒட்டுண்ணி வகைகளின் தாக்கம் அதிகமாக கன்றுகளில் காணப்படும். நோய்பரவும் விதம் : இரத்தக்கழிச்சலால் பாதிக்கப்பட்ட கன்றின் சாணத்தில் எய்மீரியா ஒட்டுண்ணிகளின் உறை முட்டைகள் வெளியேற்றப்படுகிறது. இந்த உறை முட்டைகள் சாதகமான சூழ்நிலை நிலவும் பட்சத்தில் 2 முதல் 10 நாட்களுக்குள் […]

June 13, 2017 Editor
வாத்து வளர்ப்பு : பகுதி – 2 கால்நடை

வாத்து வளர்ப்பு : பகுதி – 2

பருவநிலை… கவனம் தேவை! வாத்துகளுக்கு பெரிய அளவில் நோய்த் தாக்குதல் இருக்காது. இருந்தாலும் சீசன் மாறுற சமயத்துல பக்கத்துல இருக்குற மருத்துவரை அழைச்சுகிட்டு வந்து காட்டுறது நல்லது. அதே மாதிரி இடம் விட்டு இடம் மாத்தும்போது ராத்திரியிலதான் மாத்தணும். அப்பதான் றெக்கை தொங்கிப்போற நோய் வராது” என்ற நடராஜன் வருமானத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். ஒரு நாளைக்கு எண்ணூறு முட்டை! “தீனி நல்லா சாப்பிட்டாத்தான் வாத்துக ஒழுங்கா முட்டை வைக்கும். அதனால மேய்ச்சல் சமயங்களில் வாத்துக அதிகமா […]

May 7, 2017 Editor
வாத்து வளர்ப்பு : பகுதி-1 கால்நடை

வாத்து வளர்ப்பு : பகுதி-1

சேறும் சகதியுமாய், அறுவடை முடிந்த நெல் வயல்.. கையில் நீளமான கம்புடன் ஹோய்.. ஏய்.. என வித்தியாசமான லயத்தில் ஒருவர் சத்தம் எழுப்பிக் கொண்டு இருக்க.. அந்த சத்தத்துக்கு எசப்பாட்டு படிப்பதுபோல ‘பக் பக்’ என சத்தம் கொடுத்துக்கொண்டே ஒதுங்குகின்றன. பெரிதும் சிறிதுமான ஆயிரக்கணக்கான வாத்துகள்.. தஞ்சைப் பகுதியில் நெல் அறுவடை முடிந்த பிறகு வயல்வெளிகளில் இது போன்ற காட்சிகள் தாராளமாகக் காணக் கிடைக்கும். வாத்து இறைச்சிக்கு பெரியளவில் கிராக்கி இல்லை என்றாலும், வாத்தின் முட்டைகளுக்கு நல்ல […]

May 6, 2017 Editor
தீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..! கால்நடை

தீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..!

தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி மனிதர்களை மட்டுமல்லாமல், கால்நடைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பச்சை பசேலென்ற இயற்கை காட்சிகளுக்கு பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் மட்டும், கடந்த ஐந்து மாதங்களாக நாள் ஒன்றுக்கு ஐந்து மாடுகள் தீவனம் மற்றும் தண்ணீர் இல்லாமல் இறந்து போயுள்ளன. மோயர், மசினக்குடி, பலகோலா ஆகிய கிராமங்களில் மட்டும் கிட்டத்தட்ட 300 கால்நடைகள் மரணமடைந்துள்ளன.கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தன்னுடைய 60 மாடுகள், தீவனம் இல்லாமல் இறந்துவிட்டதாக வருத்தம் தெரிவிக்கிறார் மோயர் கிராமத்தைச் […]

April 26, 2017 Editor
400 மாடுகள் வளர்க்கும் முதியவர்..! கால்நடை

400 மாடுகள் வளர்க்கும் முதியவர்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் அருகே ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் ஒருவர் தன் வீட்டில் 400 நாட்டு மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தமலை (60). கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவர் தந்தை காலத்தில் அந்த ஊர் கிராம கணக்குப்பிள்ளையாக இருந்த ஒருவர், நோய்வாய்ப்பட்ட கன்றுக்குட்டி ஒன்றை தன்னால் பராமரிக்க முடியாமல் இவர்கள் வீட்டுக்கு தானமாக கொடுத்துள்ளார். […]

March 7, 2017 Editor
ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை..! கால்நடை

ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை..!

கடுமையான வறட்சிக் காலத்தில் கால்நடைகளுக்குக் கொடுப்பதற்காகப் பதப்படுத்தி வைக்கப்படும் தீவனம்தான் ஊறுகாய்ப் புல், தீவனச்சோளம், கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6, கினியா புல், கொழுக்கட்டைப் புல், தீவனத்தட்டை, குதிரை மசால், வேலிமசால், முயல்மசால் ஆகியவற்றில் கிடைப்பவற்றை ஊறுகாய்ப் புல்லாகப் பதப்படுத்தி வைக்கலாம். 6X6 அடி தூரம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக்கொள்ள வேண்டும். குழி மேடான இடத்தில் இருக்க வேண்டும். குழிக்குள் கால் அடி உயரத்துக்கு மணலைப் பரப்பி, அதன் […]

February 23, 2017 Editor
மதிப்புக் கூட்டப்பட்ட வைக்கோல் கால்நடை

மதிப்புக் கூட்டப்பட்ட வைக்கோல்

உலர் தீவனத்தில் முதன்மையானதாக இருப்பது வைக்கோல். வைக்கோலை மதிப்புக்கூட்டிக் கொடுத்தால் முழுமையான பலன் கிடைக்கும். 10 கிலோ கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் பை முழுவதும் வைக்கோலால் நிரப்ப வேண்டும். ஒரு கிலோ கல் உப்பை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கோல்மீது கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிக்க வேண்டும். அடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ வெல்லத்தைக் கரைத்துத் தெளித்துப் பிளாஸ்டிக் பையை இறுக்கமாகக் கட்டி, நிழலில் 12 நாட்கள் வைத்து, பிறகு மாடுகளுக்குக் கொடுக்கலாம். இப்படி […]

February 22, 2017 Editor
மாற்றுத் தீவனம் அசோலா..! கால்நடை

மாற்றுத் தீவனம் அசோலா..!

நீர் பாசி வகையைச் சேர்ந்த அசோலா கால்நடைகளுக்கு முக்கியமான மாற்றுத் தீவனமாகும். 200-க்கும் மேற்பட்ட பாசி வகைகள் இருக்கின்றன. இதில் உணவாக பயன்படும் பாசிகளில் அசோலாவும் ஒன்று. 30 சதவிகிதம் புரதச்சத்தும், 10 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டும் இதில் உள்ளன. சிறிய பரப்பிலேயே குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி அசோலா வளர்க்கலாம். 9 அடி நீளம், 3 அடி அகலத்தில், பாலி எத்திலீன் ஷீட் கொண்டு தொட்டி போல அமைக்க வேண்டும். இதில், 10 கிலோ மண், 5 கிலோ […]

February 21, 2017 Editor
வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..! கால்நடை

வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..!

”சவுண்டல் தானாகவே பரவக்கூடிய பயிர். ஒரு கன்றை நட்டால் போதும். ஒரே ஆண்டில் நன்கு வளர்ந்துவிடும். விதைகள் விழுந்து மிக வேகமாகப் பரவிவிடும். வேலிமசாலில் 24 சதவிகிதம் வரை புரதச்சத்து உண்டு. ஒருமுறை இதை நட்டால் போதும். வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இதைப் ‘பல்லாண்டுத் தீவனம்’ என்பார்கள். விதைத்த இரண்டே மாதங்களில் மூன்றடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். இதைத் தண்டோடு சேர்த்து நறுக்கிக் கொடுத்தால், ஆடு மாடுகள் விரும்பிச் சாப்பிடும். கோ-1, கோ-2, கோ-3, கோ-4, […]

February 20, 2017 Editor
கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்..! கால்நடை

கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்..!

கால்நடை வளர்ப்பில் கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்துப் பேசிய தேசிங்கு ராஜா, “பெரிய ஆடுகளுக்கு 250 கிராம் முதல் 400 கிராம் வரை தவிடு கொடுத்தாலே போதும். ஆடுகளுக்கு அதிகளவு அதிகளவு தவிடு கொடுப்பது ஆபத்தில் முடிந்துவிடும். ஆடுகளைத் தாக்கும் நோய்களில், துள்ளுமாரி நோய், ஆட்டு அம்மை, ஆட்டுக்கொல்லி நோய், அடைப்பான், நீலநாக்கு நோய் போன்றவை முக்கியமானவை. ஆடுகளுக்கு ஜூன் மாதத்தில் ஆட்டுக்கொல்லி எனப்படும் பிபிஆர் நோய்க்கான தடுப்பூசியும்; ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசியும்; […]

January 2, 2017 Editor