32°C

senthamil

முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல் துறை), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608002
மீன் குட்டையின் மீது நாட்டுக்கோழி வளர்ப்பு இயற்கை விவசாயம்

மீன் குட்டையின் மீது நாட்டுக்கோழி வளர்ப்பு

நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒருங்கிணைந்த இயற்கை விவசாயி வீராச்சாமியின் தோட்டம். நாம் சென்றவுடன் மிகவும் உபசரிப்புடன் நம்மை வரவேற்ற அவர் முதலில் தான் பின்பற்றும் இரண்டு கொள்கைகளை நம்மிடம் கூறினார். இயற்கை விவசாயி தனக்கு தேவையான இடுபொருட்களை வெளியில் இருந்து வாங்க கூடாது என்பதே அவருடைய முதல் கொள்கை. ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு என்பதே அவருடைய கொள்கை. கிராம நிர்வாக அலுவலராக இருந்து […]

May 20, 2019 senthamil
பசுந்தாள் உரமாக பயன்படும் காலபோ தாவரம் இயற்கை உரம்

பசுந்தாள் உரமாக பயன்படும் காலபோ தாவரம்

குறைந்த நாட்களில் வளர்ந்து பூமியை கவர்ந்து கொள்ளும் இத்தாவரமானது பருப்புவகை தாவரங்களுள் ஒன்றாகும். மேலும் இது விளை நிலங்களில் சுயமாக வளரும் தன்மை கொண்ட தாவரம் ஆகும். மண் அரிப்பை தடுப்பதற்கும் மிளகு, தென்னை போன்ற தோட்டங்களில் வளரும் அருவருப்பான களைகளை மேலாண்மை செய்யவும் உள்ள விலை மலிவான மற்றும் பயனுள்ள தாவரம் இதுவாகும். பல்லாண்டு வாழும் இத்தாவரமானது கொடிவகையைச் சார்ந்தது. கால்நடைகள் விரும்பி உண்பதில்லை. 16 வாரங்களில் 2.5 மீட்டர் நீளம் வரை வளரும் தன்மை […]

October 6, 2018 senthamil
நஞ்சில்லா வேளாண்மை முறையில் மிளகு வாடல் நோய் மேலாண்மை இயற்கை உரம்

நஞ்சில்லா வேளாண்மை முறையில் மிளகு வாடல் நோய் மேலாண்மை

மிளகுப் பயிரைத் தாக்கும் நோய்களில் மிக முக்கியமானது வாடல் நோய் ஆகும். இது ஒரு வகை பூசண நோய். முதலில் இலையின் முனையிலிருந்து வாடத்தொடங்கும். நன்கு வளர்ந்த மிளகுக் கொடி திடீரென பட்டுப்போய் விடும்.  இது ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவக் காற்று மழையினால் அதிகம் பரவுகின்றது. நோய் தாக்கிய 10 அல்லது 15 நாட்களுக்குள் மிளகுக்  கொடி இலை அனைத்தும் உதிர்ந்து இறந்துவிடும். தூர் பாகத்திற்கு மிக அருகில் இருக்கும் தளிர் […]

September 15, 2018 senthamil
நஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள் விவசாய கட்டுரைகள்

நஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள்

மாம்பழத்தில் பழ ஈக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்குதலால் மா பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது நுகர்வோருக்கும் அதிக இழப்பு ஏற்படுகிறது. பழத்தின் உட்பகுதியிருக்கும் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் சதைப்பகுதியை தின்று அழிக்கின்றன. இதனால் தோலின் மேற்பரப்பில் பழுப்புநிறத்திட்டுக்கள் காணப்படும். சேதம் அதிகமாகும் நிலையில் பழங்கள் அழுகி பழுப்பு நிறத் திரவம் வெளிவரும். இதனால் சேதமடைந்த பழங்கள் அழுகி கீழே விழுந்துவிடுகின்றன. இதன் புழுவானது வெண்ணிறத்துடனும், கால்கள் இல்லாமலும் தலை பகுதி அகன்றும் காணப்படும். பழ ஈக்கள் ஆரஞ்சு […]

September 11, 2018 senthamil
நஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை! இயற்கை உரம்

நஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை!

இந்நோய் ஸ்கிலிரோசியம் ரால்ஃப்சி என்ற பூஞ்சணத்தின் மூலம் உருவாகின்றது. செடியின் வயது 50 முதல் 60 நாட்கள் இருக்கும் போது நோய் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான வறண்ட வெப்பநிலைக்கு பிறகு மழை பெய்யும்போது நோய் தாக்குதல் அதிகமாக காணப்படும். மண்ணில் அதிக படியான ஈரம் அல்லது தண்ணீர் தேங்கும் போது இந்நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் தாக்கிய செடியின் தண்டின் அடிப்பகுதி அழுகி காணப்படும். வெண்மையான பூசணவித்துக்கள் பாதிக்கப்பட்ட செடியின் மேல்புறத்தில் காணப்படுகின்றன. செடியின் […]

September 8, 2018 senthamil
கோவையில் ஜூலை 21,22 ல் விதைத்திருவிழா விவசாய நிகழ்ச்சிகள்

கோவையில் ஜூலை 21,22 ல் விதைத்திருவிழா

  மரபு விதைகள் இயற்கை விளைப்பொருட்கள் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் என பல பகுதிகள் உண்டு கொண்ட விதைத்திருவிழா அனுமதி இலவசம் இடம் : KSIRS பள்ளி வளாகத்தில் சின்னவேதம்பட்டி கோயம்புத்தூர் தொடர்புக்கு பாபுஜி : 96983 -73592, ராஜசங்கர் : 99944-47252      

July 20, 2018 senthamil
வெங்கடாம்பேட்டையில் வேளாண் மாணவர்களின் முகாம் விவசாய கட்டுரைகள்

வெங்கடாம்பேட்டையில் வேளாண் மாணவர்களின் முகாம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவம் குறித்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் துவக்கவிழா கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில் வெங்கடாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்றது. இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல வேளாண் விரிவுரையாளர் திரு. சு.ஜெய்வேலு அவர்களும் தாவர நோயில்துறை வல்லுனர் திரு சஞ்சைகாந்தி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் ஊர் பெரியவர்கள், விவசாயிகள், ஊர்ப்பொது […]

July 19, 2018 senthamil
பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரு பார்வை… இயற்கை விவசாயம்

பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரு பார்வை…

வறட்சியை தாங்கி வளரகூடியவை 1.சொர்ணாவாரி 2.புழுதிக்கார் 3.புழுதிசம்பா 4.காட்டு சம்பா 5.மட்டக்கார் 6.வாடான் சம்பா 7.குள்ளக்கார் 8.குழியடிச்சான் வெள்ளத்தை தாங்கி வளரகூடியவை 1.நீளன்சம்பா 2.குதிரைவால் சம்பா 3.கலியன் சம்பா 4.சம்பா மோசானம் 5.குடைவாழை வறட்சி மற்றும் வெள்ளம் ஆகிய இரண்டையும் தாங்கி வளருபவை 1.கப்பக்கார் 2.வைகுண்டா 3.பிச்சவரி 4.குரங்குசம்பா உவர் நிலத்தில் வளரக்கூடியவை 1.கருப்பு நெல் 2.குழியடிச்சான் புகையான் மற்றும் கதிர் நாவாய் பூச்சி தாக்குதலை தாங்கி வளருபவை 1.நீளன்சம்பா 2.சிகப்பு குருவிக்கார் படைப்புழு தாக்குதலை தாங்கி வளருபவை […]

April 29, 2018 senthamil
பசுந்தாள் உரம் தக்கைப்பூண்டு! இயற்கை உரம்

பசுந்தாள் உரம் தக்கைப்பூண்டு!

தக்கைப்பூண்டு ஒரு பசுந்தாள் உரம்.தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தில் அடுத்து சாகுபடி செய்வதற்காக போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம் போடத் தேவையில்லை. அதிகமான செலவும் இருக்காது. ஏனெனில் இதன் வேர்களில் முடுச்சிகள் இருப்பதால் அவற்றில் ரைசோபியம் போன்ற நுண்ணுயிர்கள் வாழ்வதற்க்கு ஏற்றதாக இருக்கிறது. இதன் வேர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் சேர்க்கிறது. 45 நாள்கள் முதல் 70 நாள்களுக்குள் பூப்பூத்தவுடன் அதனை அப்படியே அந்த நிலத்திலேயே மடக்கி உழுதுவிட வேண்டும். இப்பயிரானது 6 அடி […]

December 25, 2017 senthamil
விதைநெல்லைச் சேமித்து வைக்கும் நுட்பம்! செய்திகள்

விதைநெல்லைச் சேமித்து வைக்கும் நுட்பம்!

விதைநெல்லைச் சேமிக்கும்போது அதன் ஈரப்பதம் மிகவும் முக்கியம். ஈரப்பதம் கூடினாலும் குறைந்தாலும் அதன் முளைப்புத்தன்மை பாதிக்கப்படும். ஆகையால் விதையைச் சேமிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விதைநெல்லை சூரியஒளியில் உலர்த்துவதில்தான் நுணுக்கம் உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் களத்தில் கொட்டி மூன்று நாட்களுக்கு உலர்த்த வேண்டும். நெல்லை கால்களால் தள்ளியபடி உலர்த்தும்போது சலசலவென்று சத்தம் கேட்கும். கைகளில் அள்ளிவைத்து திருகி பார்த்தால் எளிதாக தோல் உரியும். அரிசியை வாயில் வைத்து கடித்தால் […]

September 2, 2017 senthamil