32°C

editor news

தேனீ வளர்ப்பு (பகுதி – 12) தொடர்

தேனீ வளர்ப்பு (பகுதி – 12)

தேனீக்களின் எதிரிகள் அவற்றின் கட்டுப்பாடு தேனீக்கள் ஏராளமான எதிரிகளால் தாக்கப்படுகின்றன. தேனீக்களை இந்த எதிரிகளிடமிருந்து பாதுகாக்க திறமையான நிர்வாகம் அல்லது மேலாண்மை தேவைப்படுகிறது. இதற்கு தேனீ எதிரிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் சேதத்தின் தன்மை, அளவு மற்றும் அவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது என்பதை புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். தேனீ வளர்ப்பவரின் வழக்கமான கவனம் தேவைப்படும் சில முக்கியமான எதிரிகள் பற்றி கீழே பார்க்கலாம். கொள்ளையடிக்கும் குளவிகள்: வெஸ்பா வெலுட்டினா (Vespa velutina) வெஸ்பா பாசலிஸ் […]

October 23, 2020 editor news
பசுமைப் புரட்சி – வரமா? சாபமா?  பகுதி – 9 தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 9

கடந்த இதழ்களில் நான் பசுமைப் புரட்சியின் தலைப்பில் எழுதிய அனைத்து கட்டுரைகளும் வரலாற்று நிகழ்வுகளையும் அரசின் புள்ளி விவரங்களையும் கொண்டவை. அவற்றை யாராலும் பொய் என்றோ மிகைப்படுத்தப்பட்டது என்றோ சொல்ல முடியாது. ஆனால் இந்தப் பகுதி என்னுடைய சொந்த கருத்தை முன் வைக்கப்போகிறேன். அதில் பலருக்கு உடன்பாடு இருக்கலாம், இல்லாமல் போகலாம். பசுமைப் புரட்சியைப் பற்றிக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் இருதரப்பட்ட விவாதங்களின் ஒரு பகுதியாக அதை எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். இந்தத் தலைப்பு எடுக்கும் […]

October 23, 2020 editor news
திறன்மிகு ஜாதிக்காய் சாகுபடி தொழில்நுட்பங்கள் தொழில்நுட்பம்

திறன்மிகு ஜாதிக்காய் சாகுபடி தொழில்நுட்பங்கள்

ஜாதிக்காய் ஒரு வாசனை மரப் பயிராகும். இவை தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பயிரிடப் பட்டு வருகிறது. இந்தோனேஷியாவை தாயகமாகக் கொண்ட பயிராகும். இது ஒரு வாசனை பயிராக இருந்தாலும் மிகுந்த மூலிகைத்துவம் கொண்டது. இதில் இருந்து எடுக்கப்படும் அத்தியாவசிய எண்ணெயானது சர்வதேச சந்தையில் கூடுதல் மதிப்பு உள்ளது. இந்த மரமானது பெரும்பாலும் தென்னை மற்றும் பாக்கு மரங்களுக்கு இடையில் ஒரு ஊடுபயிராக பயிரிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். எனவே […]

October 23, 2020 editor news
சிறுகிழங்கில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் மூலம் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்: ஒரு வெற்றிக்கதை தொழில்நுட்பம்

சிறுகிழங்கில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் மூலம் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்: ஒரு வெற்றிக்கதை

முன்னுரை இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வரும் ஒரு முக்கிய பயிர் சிறு கிழங்கு ஆகும். உருளைக்கிழங்கைப் போல் தோற்றமளிக்கும் இதன் கிழங்குகள் சமைத்து காய்கறியாக உண்ணப்படுகின்றன. செடிகளின் அடிப்பகுதியில் தண்டோடு சேர்ந்து கரும் தவிட்டு நிறத்தில் நல்ல வாசனையுடனான கிழங்குகள் கொத்தாக இச்செடிகளில் உண்டாகின்றன.  கிழங்குகளில் உலர்ந்த பொருள் (31-33%), மாவுச்சத்து (18-20%) மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் (0.05 முதல் 0.12%) காரணமாக ஒரு சிறப்பியல்பு சுவையுடன் […]

October 23, 2020 editor news
தென்னையில் ஊடு பயிர் சாகுபடி தொழில்நுட்பம்

தென்னையில் ஊடு பயிர் சாகுபடி

தென்னை, அதிக இடைவெளியில் நடப்படும் பணப்  பயிராகும். தென்னை மரங்களுக்கு இடையே காலியாக இருக்கும் நிலப்பகுதியில் பலவிதமான பயிர்களை ஊடுபயிர்களாக சாகுபடி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்குச் சாதகமாக தென்னை மரத்தின் வேர்ப்பகுதியும் தலைப்பகுதியும் அமைந்துள்ளன. தனிப்பயிராகத்  தென்னை சாகுபடி செய்யப்படும் தோப்புகளில் மண்வளமும், சூரிய ஒளியும் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. 7.5 மீ X 7.5 மீ இடைவெளியில் தென்னை நடப்பட்டுள்ள தோப்புகளில் சுமார் 75 சதம் நிலப்பரப்பு பயன்படுத்தப்படாமல் உள்ளது. தென்னை மரங்களின் வேர்கள், அடிமரத்திலிருந்து […]

October 22, 2020 editor news
கறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி ? மானியங்கள்

கறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி ?

இந்திய நாட்டின் கறிக்கோழி (பிராய்லர்) உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 9% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் கோழி இறைச்சியின் நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ளது. அரசு மானியத்தை வழங்குவதன் மூலம், இந்தத் தொழிலை ஊக்குவித்து வருகிறது. உலகில் மூன்றாவது பெரிய கறிக்கோழி (பிராய்லர்-கோழி) உற்பத்தியாளராக இந்தியா உள்ளது, ஆண்டுக்கு 3.7 மில்லியன் டன் கோழி இறைச்சியை உற்பத்தி செய்கின்றது. சந்தை மதிப்பு சுமார் 91,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தனிநபர் […]

October 22, 2020 editor news
சம்பங்கிப் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் பயிர் பாதுகாப்பு

சம்பங்கிப் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள்

வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில் சாகுபடி செய்யப்படும் வணிக மலர்களில் சம்பங்கி முக்கியமான மலர்ப்பயிராகும். இம்மலர்கள் கவர்ச்சியான வெண்மை மற்றும் வண்ண நிறங்களாலும் மெல்லிய நறுமணத்துடனும், கொய்மலர் மற்றும் உதிரி மலராகவும், நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றன.  மேலும் தோட்டங்களில் அழகுக்காக தொட்டிகளிலும், படுக்கைகளிலும், வரப்புகளிலும் வளர்க்கப்படுகின்றன. வட மாநிலங்களில் இவை பெரும்பாலும் கொய்  மலருக்காகவும், தென்னிந்தியாவில் உதிரி மலருக்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றது. இதனை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்தும் முறைகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம். இலைப்பேன் […]

October 22, 2020 editor news
ஒருங்கிணைந்த எலிக்கட்டுப்பாடு முறைகள் பயிர் பாதுகாப்பு

ஒருங்கிணைந்த எலிக்கட்டுப்பாடு முறைகள்

உலக தானிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு எலிகளால் சேதப்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்தியாவில் 7 முதல் 8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் எலிகளால் சேதமடைகின்றன. ஒரு எலியானது ஒரு நாளைக்கு சராசரியாக 30 முதல் 50 கிராம் உணவும், 40 மிலி தண்ணீரையும் உட்கொள்ளும். எலிகள் சேமித்து வைக்கப்படும் விதைகள், தானியங்களை சேதப்படுத்துவதோடு, மனிதர்களுக்கு பல்வேறு சுகாதாரக் கேடுகளையும்,  நோய்களையும் பரப்புகின்றன. எலி வகைகள் இந்தியாவில் பல எலி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கீழ்கண்ட எலி […]

October 22, 2020 editor news
திருந்திய மிளகு சாகுபடி தொழில்நுட்பங்கள் தொழில்நுட்பம்

திருந்திய மிளகு சாகுபடி தொழில்நுட்பங்கள்

மிளகு ஒரு வாசனை பயிராகும். இது வாசனைப் பயிர்களின் ராஜா என்று அழைக்கப் படுகிறது. பைபர் நைகிரம் என்பது அதன் தாவரவியல் பெயராகவும் மற்றும் பைபரேசியே அதன் குடும்பமாகவும் கருதப்படுகிறது. மேலும் மிளகானது ஒரு மூலிகை குணம் நிறைந்த பயிராகும். இதில் உள்ள பிபேரின் மூலிகைத்துவம் கொண்டது. எனவே இக்கட்டுரையில் மிளகின் சாகுபடி தொழில்நுட்பங்களை பற்றி பார்க்கலாம். மண் மற்றும் தட்பவெப்பநிலை: மிளகு பொதுவாக மானாவாரிப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. 150-250 செ.மீ. அளவிலான மழையும், அதிக […]

October 22, 2020 editor news
இந்திய டிராக்டர்களும் விவசாயிகளும் தொழில்நுட்பம்

இந்திய டிராக்டர்களும் விவசாயிகளும்

இந்திய விவசாயத்த்தில் டிராக்டர்கள் பெரும் பங்கு ஆற்றி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பொதுவாக இந்தியாவில் அதிக அளவில் 35 முதல் 45 எச் பி ட்ராக்டர்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளது. இதன் கரணம் என்ன? இந்திய விவசாயிகள் நில அளவுகள் சிறு குறு அளவிலேயே அதிகம் காணப்படுகிறது. அதாவது பெரும்பான்மையான விவசாயிகளிடம் 2 முதல் 5 ஏக்கருக்குட்பட்ட நிலப்பரப்பு தான் காணப்படுகிறது. எனவே இந்த வகை டிராக்டர்கள் இந்திய விவசாயிகளுக்கு போதுமானதாக இருக்கிறது. டிராக்டர்கள் […]

October 21, 2020 editor news