32°C

editor news

கழனியும் செயலியும்  (பகுதி – 4) தொடர்

கழனியும் செயலியும் (பகுதி – 4)

வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப உலகில் ஒவ்வொரு செயல்களும், தொழில்களும், பொருட்களும் மாற்றத்தினை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் விவசாயம் சார்ந்த செயல்களும் மேம்படுத்தப் படுகின்றன. அவற்றில் ஒன்றே வேளாண் செயலிகள். வேளாண் செயலிகள் வேலைகளை எளிமைப்படுத்துவதோடு நேரம், இடுபொருட்கள், உழைப்பு என அனைத்தினையும் சரியாக கணக்கிட்டு தீர்மானிக்க உதவி செய்கின்றன. சென்ற கட்டுரையின் தொடா்ச்சியாக மேலும் சில வேளாண் செயலிகளும் அவற்றின் பயன்களும்…. Amma e-service of land records: நிலம் சார்ந்த ஆவணங்களுக்காக அறிமுகப்பத்தப்பட்டதே இந்த […]

November 11, 2020 editor news
துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இலங்கை, பர்மா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் துவரை அதிகமாகப் பயிரிடப்படும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது. விதைத்த 45 நாட்களுக்குள் நோய்த் தாக்கினால் அந்தச் செடிகளில் பிஞ்சுகளோ, காய்களோ தோன்றாமல் பூக்கள் எல்லாமே மலடாக மாறிவிடும். துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம். நோய்க்காரணி இந்நோய் துவரை மலட்டுத் தேமல் நச்சுயிரியினால் தோற்றுவிக்கப் படுகிறது. நோயின் அறிகுறிகள் […]

November 11, 2020 editor news
கண்வலிக்கிழங்கு சாகுபடி மருத்துவ குணங்கள்

கண்வலிக்கிழங்கு சாகுபடி

கண்வலிக்கிழங்கு என்னும் கிழங்கு வகை செங்காந்தள் மலர்ச் செடியிலுருந்து பெறப்படுகிறது. இச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இது கலப்பைக்கிழங்கு, கார்த்திகைக்கிழங்கு, வெண்தோன்றிகிழங்கு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது இந்திய மற்றும் ஆப்பிரிக்க மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதன் கிழங்குகள் உழவுக்கலப்பை போன்ற அமைப்பைப் பெற்றிருப்பதால் கலப்பைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு கொடி வகை மருத்துவப்பயிராகும். இவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் பயிர் மேம்பாட்டு ஆராய்ச்சியில் சடுதி மாற்றத்திக்காக பயன்படுகின்றன. வாதம், மூட்டுவலி, தொழுநோய் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றன. […]

November 11, 2020 editor news
பயிர் வளர்ச்சியில் ட்ரைகான்டனால் பங்கு தொழில்நுட்பம்

பயிர் வளர்ச்சியில் ட்ரைகான்டனால் பங்கு

‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’ என்ற வாக்கிற்கு ஏற்ப, ‘நல்ல ஆரோக்கியமான தாவரங்கள் இருந்தால் தான் அதிக மகசூல் பெறமுடியும்’. ஒரு தாவரத்தின் வளர்ச்சியானது, அதன் ஜீனுடைய செயல்பாடு மற்றும் சூழ்நிலை காரணிகளால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. தாவரங்களில் உருவாக்கப்படும் சில பொருட்கள் தாவரங்களின் வளர்ச்சி, வாழ்வியல் மற்றும் உயிர்வேதிச் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன. தாவர வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் செயல்களைப் பொறுத்து இவை வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள், தாவர ஹார்மோன்கள் மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. இந்த […]

November 11, 2020 editor news
தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும் மரங்கள்

தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

இந்நோயானது பிரேசில், ஆப்ரிக்கா, கயானா, இலங்கை, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற தென்னை அதிகம் பயிராகும் நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் தென்னைப் பயிராகும் எல்லா மாநிலங்களிலும் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது. தென்னையைத் தவிர பாக்கு, ஈச்ச மரம், கொக்கோ, ரப்பர் போன்ற மரங்களையும் தாக்கக் கூடியது. தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் காண்போம். நோய்க்காரணி இந்நோயானது ஃபைட்டோப்தோரா பால்மிவோரா என்ற பூசணத்தால் தோற்றுவிக்கப்படுகிறது. இதன் பூசண இழைகள் குறுக்குச் சுவர்கள் இல்லாமலும், நிறமற்றும், […]

November 11, 2020 editor news
கழனியும் செயலியும் (பகுதி – 3) தொடர்

கழனியும் செயலியும் (பகுதி – 3)

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு செயலிகளை வேளாண் தகவல்களுக்காக இந்திய அரசானது வெளியிட்டுள்ளது.  இம்மாதிரியான செயலிகளானது வேளாண் நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்றன. இவை வேளாண் ஆராய்ச்சிகள், செய்திகள் நிகழ்வுகள், விலை நிலவரங்கள், மேலும் பல தகவல்களை விவசாயிகளுக்கும் பங்குதாரர்களுக்கும் தெரிவிக்கின்றன, அந்த வரிசையில் இந்த வார செயலிகள் இதோ…. CHC இந்த செயலியானது உழவர்களையும் இயந்திர வாடகை மையங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. 50 கிலோ மீட்டர் […]

November 10, 2020 editor news
பசுமை காக்கும் மியாவாக்கி காடுகள் மரங்கள்

பசுமை காக்கும் மியாவாக்கி காடுகள்

வளர்ந்து வரும் நவீன உலகத்தில் காடுகள் அழிக்கப்பட்டு கான்கீரிட் கட்டடங்களாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த அவல நிலைமையை போக்குவதற்காகவும், பசுமையை பேணிக் காப்பதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட முறையே மியாவாக்கி காடுகள். காலி இடத்தில் நெருக்கமாக மரங்களை நட்டு காடு அமைக்கும் முறையே மியாவாக்கி காடுகள் எனப்படும். ஜப்பான் நாட்டை சேர்ந்த அகிரா மியாவாக்கி என்ற தாவரவியல் வல்லுநரால் கண்டுபிடிக்கப்பட்டது. இடைவெளி இல்லாமல் நெருக்கமாக வளர்வதால் மரங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு, 10 ஆண்டுகளில் பெறும் வளர்ச்சியை […]

November 10, 2020 editor news
விதை சேமிப்பில் பராம்பரிய தொழில் நுட்ப அறிவும் அறிவியலும் தொழில்நுட்பம்

விதை சேமிப்பில் பராம்பரிய தொழில் நுட்ப அறிவும் அறிவியலும்

விதை சேமிப்பு அடுத்த பருவத்திற்கான விதைத் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த முறை பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. இதற்கான தேவை வீரியமுள்ள விதை மற்றும் சேமிக்கப்படும் முறை இரண்டே ஆகும். இதன்மூலம் விதைகளுக்கான செலவு குறைகிறது. மேலும்  நம் நில வெட்பநிலைக்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருக்கும் நல்ல விளைச்சல் தரும் விதை௧ளை சேமிப்பதால் முளைப்புத்திறன் அதி௧மா௧ இருக்கும். பாரம்பரிய விதை சேமி்க்கும் முறைகள்: வெயிலில் உலர்த்துவது: அறிவியல்:  வெப்பத்தால் பூச்சி௧ளின் எல்லா வளர்ச்சிநிலைகளும் பாதிக்கப்படுகின்றன. விதையில் உள்ள ஈரப்பதத்தை […]

November 10, 2020 editor news
பசுந்தீவனம்  பதப்படுத்தும் முறைகள் கால்நடை

பசுந்தீவனம் பதப்படுத்தும் முறைகள்

கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை ஆண்டு முழுவதும் தொடர்ந்து அளிப்பதன் மூலம் சீரான உற்பத்தியினை பெறலாம். பசுந்தீவனத்தில் ஊட்டச் சத்துக்கள் இயற்கையான தன்மையிலேயே உள்ளதால் அவற்றின் செரிமானத் தன்மை அதிகம். மழைக்காலங்களில் தேவைக்கு மேல் கிடைக்கும் பசுந்தீவனத்தை பதப்படுத்தி கோடையில் கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் பசுந்தீவனப் பற்றாக்குறையையும் கால்நடைகளின் உற்பத்தி இழப்பையும் தவிர்க்கலாம். பசுந்தீவனத்தை இரண்டு முறைகளில் பதப்படுத்தி சேமித்துக் கொள்ளலாம். (i) காய்ந்த புல் அல்லது உலர் புல் (ii) சைலேஜ் அல்லது ஊறுகாய்ப்புல் உலர் புல் தயாரிப்பு […]

November 10, 2020 editor news
நெல் தரிசு பருத்தியில் இலைவழி ஊட்டச்சத்து மற்றும் ஹார்மோன் பயன்பாடு மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்தல் குறித்த ஆய்வு தொழில்நுட்பம்

நெல் தரிசு பருத்தியில் இலைவழி ஊட்டச்சத்து மற்றும் ஹார்மோன் பயன்பாடு மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்தல் குறித்த ஆய்வு

உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் நார்ப் பயிராக பருத்தி விளங்குகிறது. நார்ப் பயிர்களின் இராணி எனவும் வெள்ளைத் தங்கம் எனவும் பெருமையாக அழைக்கப்படுகிறது. தொழிற்சாலை வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பு தருவதிலும் நாட்டின் வருமானத்திலும் பருத்தியின் பங்கானது இன்றியமையாதது. பருத்தி உற்பத்தியில் உலக அளவில் இந்தியாதான் முதலிடம் வகிக்கின்றது. எனினும், உற்பத்தித்திறனானது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. குறைவான உற்பத்திக்கு எண்ணற்ற காரணிகள் இருந்தாலும் சப்பைகள் உதிர்வதும், பூக்கள் கொட்டுவதும் முக்கிய காரணிகளாய் உள்ளன. மண்ணில் இடும் உரங்களில் இருந்து சத்துக்கள் […]

November 10, 2020 editor news