32°C

editor news

தேனீ வளர்ப்பு பகுதி – 8 தொடர்

தேனீ வளர்ப்பு பகுதி – 8

தேனீக்களின் கோடை கால மேலாண்மை பெரும்பாலான பகுதிகளில் தேன் ஓட்ட (honey flow) காலமானது, கோடை காலத்தைத் தொடர்ந்து வருகிறது. கோடை காலமானது பொதுவாக அதிக வெப்பம் மற்றும் வெப்ப காற்றால் குறிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை பெரும்பாலும் 40oC ஐ விட அதிகமாக இருக்கும். எனவே தேன் ஓட்டம் பருவத்தில் கடினமாக உழைத்த பழைய தேனீக்கள் இறப்பு மற்றும் தேனீ எதிரிகளின் தாக்குதலால் தேனீக்களின் எண்ணிக்கை குறைகின்றது. மேலும் உணவு பற்றாக்குறையால் வேலைக்கார தேனீக்கள் ஆண் […]

September 16, 2020 editor news
பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-5 தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-5

1950களில் இருந்தே அனைத்து நாடுகளிலும் உணவு தட்டுப்பாடு வந்துவிட்டது. எந்த நாடும் வளரும் மக்கள்தொகைக்கு இணையான உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவாக வந்தது தான் பசுமைப் புரட்சி. என்னதான் கோதுமையில் அதிக உற்பத்தி செய்யும் ரகங்களை போர்லாக் கொண்டு வந்தாலும், பல ஆசிய நாடுகளில் அரிசியே அடிப்படை உணவாக இருந்துவந்தது. எனவே அரிசிக்கும் ஒரு வழி பிறக்க வேண்டும் என்று அனைவரும் காத்திருந்தனர். பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருந்தது. 1960ஆம் நெல்லில் புதிய ரகங்கள் […]

September 16, 2020 editor news
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-11) தொடர்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-11)

அமிலமா! அமிர்தமா! 2015இல் படித்து அதிர்ந்த செய்தி, தாய்ப்பாலில் விஷம் என்பது தான் அதன் தலைப்பு. அதாவது நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி நம் உணவில் கலந்து, கடந்து தாய்ப்பால் வரை சென்றடைவதாக இருந்தது அந்தக் கட்டுரை. எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான் இப்படி நமக்கு மூலமான ஒன்று நிர்மூலம் ஆனால், இது தான் பிரதானம் என்று எண்ணிய ஒன்று நாம் எடுக்க முடியாமல் போனால்… அப்படித்தான் நாம் அமிர்தமாய் கருதுகின்ற மழையும் இன்று பெரும் […]

September 16, 2020 editor news
இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை!! இயற்கை விவசாயம்

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை!!

தக்காளி ஒரு முக்கிய காய்கறிப் பயிராக பயிரிடப்படுகிறது. தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடி செய்வதில் ஒரு முதன்மை பயிராக உள்ளது. இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம். பருவம் மற்றும் விதை அளவு ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச், மாதங்கள் தக்காளி சாகுபடிக்கு ஏற்ற பருவங்கள் ஆகும். வண்டல் மண்ணில் நல்ல மகசூலை தரும். […]

August 31, 2020 editor news
கழிவு சிதைப்பான் (Waste Decomposer) – ஒரு பன்முக நுண்ணுயிர் கூட்டமைப்பு சந்தை

கழிவு சிதைப்பான் (Waste Decomposer) – ஒரு பன்முக நுண்ணுயிர் கூட்டமைப்பு

அறிமுகம் கழிவு சிதைப்பான் என்பது உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கரிம வேளாண்மை தேசிய மையத்தால் (National Centre of Organic Farming) தயாரிக்கப்பட்ட ஒரு நுண்ணுயிர் கூட்டமைப்பு  ஆகும். இது பலவகை  நற்பயனுள்ள நுண்ணுயிரிகளின் கூட்டமைப்பு ஆகும்.  இதை முதன்முதலாக 2004 ஆம் ஆண்டில் க்ரிஷன் சந்திரா என்ற அறிவியலாளர், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மாட்டின் சாணத்திலிருந்து நுண்ணுயிரிகளைப் பிரித்தெடுத்து உருவாக்கினார். கழிவு சிதைப்பான் ஒரு பாட்டில் (30 கிராம்) ரூ. 20 என்ற அளவில் […]

August 31, 2020 editor news
கரும்பு பயிரைத் தாக்கும் இளங்குருத்துப் புழுவின் மேலாண்மை பயிர் பாதுகாப்பு

கரும்பு பயிரைத் தாக்கும் இளங்குருத்துப் புழுவின் மேலாண்மை

கரும்பு, இந்தியாவின் மிக முக்கியமான பண‌ப்பயிராகும். கரும்பில் இளம் பருவத்தில் (3 மாதங்களுக்குள்) தாக்க கூடிய பூச்சிகளில் இளங்குருத்து புழு மிகவும் முக்கியமான பூச்சியாகும். கரும்பில், இளங்குருத்துப் புழுவானது 25 முதல் 30 விழுக்காடு அளவிற்கு சேதம் விளைக்கும்.    தாக்குதலின் அறிகுறிகள்:         இப்பூச்சியானது 1-3 மாத வயதுடைய இளம் பயிர்களை அதிகமாகத் தாக்கும். நிலமட்டத்திற்கு மேலே இளந்தண்டுகளில் பல சிறு துளைகள் குருத்தில் காணப்படும்.         புழுக்கள் […]

August 31, 2020 editor news
சேறு இல்லாத நெல் நடவு – நெல் சாகுபடியில் ஒரு புதிய முன்னேற்றம் தொழில்நுட்பம்

சேறு இல்லாத நெல் நடவு – நெல் சாகுபடியில் ஒரு புதிய முன்னேற்றம்

தமிழ்நாட்டில் நெல் 2.04 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 9.98 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நெல் ஒரு முக்கிய உணவுப் பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் அரிசி தமிழ் நாட்டின் ஒரு பிரதான உணவு. நெல் வளர்ப்பிற்கு மழைபொழிவே  முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குகிறது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்லும் மழைபொழிவால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தே உள்ளது. மேலும் பயிருக்கு பிந்தைய வறட்சி காரணமாக பயிர் பாதியிலேயே கருகும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பருவ நிலை […]

August 31, 2020 editor news
மானாவாரி கேழ்வரகும் பழங்கால விதை விதைப்புமுறையும் தானியங்கள்

மானாவாரி கேழ்வரகும் பழங்கால விதை விதைப்புமுறையும்

உலகின் வறண்ட மற்றும் மானாவாரி சாகுபடியில் கேழ்வரகு, குறிப்பாக சிறுதானியங்களில் முதல் நிலை வகிக்கிறது. ஏனெனில் தற்போது காணப்படும் மோசமான காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சுழல் மற்றும் வேறுபட்ட கலாச்சார நிலைக்கு தகுந்த தன்மையை இப்பயிர் அடிப்படையாகவே பெற்றிருக்கின்றன. அதனால் இப்பகுதி மக்களின் உடல், ஆரோக்கியம் மற்றும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியும் இதனை சார்ந்தே அமைகின்றன. குறிப்பாக ஏழை, எளிய மக்களின் வாழ்வில் கேழ்வரகு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்பயிர் மிகவும் கடுமையான வறட்சி, வெப்பம், உவர், […]

August 31, 2020 editor news
கத்தரியில் நாற்றழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

கத்தரியில் நாற்றழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கத்தரி இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் பெருமளவில் பயிரிடப்படும் காய்கறியாகும். கத்தரி உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் ஆண்டுக்குத் தோராயமாக 128.13 லட்சம் டன்கள் கத்தரி உற்பத்தி செய்யப்படுகிறது. கத்தரியில் பல்வேறு வகையான நோய்கள் தோன்றினாலும் நாற்றழுகல் நோய் மிக முக்கியமான ஒன்றாகும். இந்நோயானது பலவகை காய்கறிப் பயிர்கள், தோட்டப் பயிர்கள், அலங்காரச் செடிகள், காட்டுவகை மரங்கள் போன்றவற்றின் நாற்றாங்கால்களில், இளம் நாற்றுகளைத் தாக்கி, அதிக சேதம் விளைவிக்கக்கூடியது. கத்தரியில் […]

August 31, 2020 editor news
இமாச்சல பிரதேச பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய பக்ஹார்ன் பழ சாகுபடி தொழில்நுட்பம்

இமாச்சல பிரதேச பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய பக்ஹார்ன் பழ சாகுபடி

கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் நமது நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (Defence Research and Development Organisation) இணைந்து இமாச்சல பிரதேச பெண்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மதிப்புக்கூட்டு முறைகளை வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய மதிப்புக்கூட்டு முறை வாயிலாக அங்கு சாகுபடி செய்யப்படும் கடல் பக்ஹார்ன் சாகுபடி வாயிலாக வருடம் முழுவதும் வருமானம் பெறும் வகையில் மதிப்புக்கூட்டிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு […]

August 31, 2020 editor news