32°C

Editor

வேளாண் எந்திரங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் செய்திகள்

வேளாண் எந்திரங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும்

விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் வேளாண் எந்திரங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்கம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிளை தொடக்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட துணைத் தலைவர் அஸ்வத் நாராயணன் தலைமை தாங்கினார். கிளை சங்க நிர்வாகிகள் பசவராஜ், ரகுநாதன், சின்னசாமி, ஒன்றிய செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் வெங்கடேசன் […]

September 22, 2016 Editor
பஞ்சகவ்யாவில் பப்பாளி! இயற்கை உரம்

பஞ்சகவ்யாவில் பப்பாளி!

பஞ்சகவ்யாவில் பப்பாளி சேர்ப்பது குறித்து, ’கொடுமுடி டாக்டர்’ நடராஜனிடம் கேட்டபோது, ”செலவைக் குறைக்க சர்க்கரைக்கு பதிலாக அவரோட தோட்டத்தில் விளையும் பப்பாளியைச் சேர்க்க ஆரம்பித்தார் பழனிச்சாமி. இதில் தவறு ஏதும் இல்லை. கனிந்த பழங்களில் இருந்து இனிப்புத்தன்மை பஞ்சகவ்யாவுக்குக் கிடைத்து விடுகிறது. அதே மாதிரி அவர் நுண்ணுயிரிகளுக்கு தீனியாக சத்துமாவு கலப்பார். இதிலும் தவறு இல்லை. நாளுக்கு நாள் பஞ்சகவ்யா பரிணாம வளர்ச்சி அடைவது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் அதே நேரத்தில் இப்படி ஆராய்ச்சி செய்பவர்கள் பயிர்களுக்கு […]

September 21, 2016 Editor
தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,? தொடர்ச்சி -2 செய்திகள்

தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,? தொடர்ச்சி -2

தண்ணீர் தொடர்பான இந்திய அரசியலமைப்புச் சட்ட அம்சங்கள் அனைத்தும் மாநிலப்பட்டியலில் உள்ள 17 ஆவது இனம், மத்தியப் பட்டியலில் உள்ள 56 ஆவது இனம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 262 ஆவது பிரிவு ஆகியவற்றின் அடிப்படையிலானவை ஆகும் அவற்றைப் பற்றி பார்ப்போம்… அ) ஏழாவது அட்டவணையில் இரண்டாவது பட்டியலில் (மாநிலப் பட்டியல்) 17-ஆவது இனம் தண்ணீர் என்பது மாநிலம் சார்ந்த பொருள் என்பதால் மாநிலப்பட்டியலில் உள்ளது. எனினும், அது மத்தியப் பட்டியலில் உள்ள 56-ஆவது இனத்தின் அம்சங்களுக்கு […]

September 19, 2016 Editor
பஞ்சகவ்யாவில் நாட்டுச் சர்க்கரைக்கு பதில் கரும்புச்சாறு இயற்கை உரம்

பஞ்சகவ்யாவில் நாட்டுச் சர்க்கரைக்கு பதில் கரும்புச்சாறு

பசு மாட்டுச்சாணம் – 5 கிலோ, மாட்டுச்சிறுநீர் – 2 லிட்டர், பால் – 2 லிட்டர், நெய் – 1 லிட்டர், நாட்டுச்சர்க்கரை – 1 கிலோ ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் ஆரம்ப காலத்தில் மருத்துவர் நடராஜன் பஞ்சகவ்யா தயாரித்துள்ளார். இருந்தாலும், பயிர்களைப் பொறுத்து மூலப்பொருட்களின் அளவுகளைக் கூட்டிக் குறைத்தும் சில பொருட்களை புதிதாகச் சேர்த்தும் ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டுள்ளார், செல்லமுத்து. “சர்க்கரைக்கு பதிலாக 3 லிட்டர் கரும்புச்சாறு சேர்த்துக்கிட்டு இலைவழித் தெளிப்பாகக் கொடுக்கும்போது, நல்ல […]

September 17, 2016 Editor
தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,? செய்திகள்

தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,?

இந்திய நிலபரப்பில் ஆண்டுதோறும் நான்கு லட்சம் கோடி கனமீட்டர் அளவிற்கு மழை பெய்கிறது. ஆண்டுதோறும் நதிகளில் நீரோட்டம் 1,95,300 கோடி கனமீட்டர் அளவுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள நீர் பூமியை ஈரப்படுத்தவும், வெப்பத்தாலும் காய்ந்துவிடுகிறது. இந்திய நதிகளில் ஓடும் நீர் 80 முதல் 90% வரை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள் மட்டுமே கிடைக்கிறது. இதில் உண்மை என்னவென்றால் கிடைக்கும் நீரில், 75% நீர் பாசன நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அரசாங்க கணக்கீடுகளின் படி நம்நாட்டில் […]

September 16, 2016 Editor
இயற்கை முறை பந்தல் சாகுபடி இயற்கை விவசாயம்

இயற்கை முறை பந்தல் சாகுபடி

இயற்கை முறையில் பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விதம் குறித்து பந்தல் சாகுபடியில் நெடிய அனுபவம் வாய்ந்த கேத்தனூர் பழனிச்சாமியிடம் கேட்டோம். புடலையில் பீர்க்கனை சேர்த்து சாகுபடி செய்றது சரியான முறையில்லை. பீர்க்கனுக்கு அடி சாம்பல், மேல் சாம்பல், வைரஸ்னு பல பிரச்சனை வரும். அது பக்கத்து பயிரையும் பாதிச்சுடும். அதனால பந்தல்ல தனியா ஒரு மூலையில பீர்க்கன் சாகுபடி செய்றதுதான் சரியான முறை. வைரஸ் நோய்க்கு 250 மில்லி புளிச்ச மோர், 100 கிராம் சூடோமோனஸ், […]

September 15, 2016 Editor
காளான் வளர்ப்பு அறைகள் ! செய்திகள்

காளான் வளர்ப்பு அறைகள் !

காளான் வளர்ப்புக்கு படுக்கைகள் தொங்க விட ஓர் அறை (ரன்னிங் ஷெட்); காளான் வளர ஓர் அறை; மற்ற வேலைகள் செய்வதற்கு ஓர் அறை என மூன்று அறைகள் தேவை. படுக்கைகளைத் தொங்க விடுவதற்கான அறை, 10 அடி அகலம், 30 அடி நீளம் இருக்க வேண்டும். கூரை 15 அடி உயரத்தில் இருக்க வேண்டும். கூரைக்குக் கீழே காளான் படுக்கைகளை உரி போல தொங்க விடுவதற்கான அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 300 சதுரடி அளவு […]

September 13, 2016 Editor
உயர்வுக்கு வழிவகுக்கும் இயற்கை பண்ணையம் இயற்கை விவசாயம்

உயர்வுக்கு வழிவகுக்கும் இயற்கை பண்ணையம்

படிக்கவேண்டும், படித்து முடித்து நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து செட்டிலாக வேண்டும் என்பதுதான் இன்றைய இளைஞர்களின் கனவு, குறிக்கோள் எல்லாமே. ஆனால் விவசாயத்தில் பட்டம் பெற்று சென்னையில் உலகத்தரமான தனியார் பள்ளியொன்றில் நல்ல ஊதியம் பெற்று வந்த இளைஞர் ஒருவர் அதையெல்லாம் ஒரேநாளில் உதறித் தள்ளிவிட்டு விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு களமிறங்கி, அதிலும் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வெற்றிமேல் வெற்றி பெற்று வருகிறார். அந்த சாதனை இளைஞரின் பெயர் கு.ஜெயக்குமார். […]

September 12, 2016 Editor
பசுமைக்குடில் தொழில்நுட்பம் இயற்கை விவசாயம்

பசுமைக்குடில் தொழில்நுட்பம்

இன்று எங்கு பார்த்தாலும் பசுமைக்குடில் மூலம் விவசாயம் நடக்கிறது. வருடம் முழுவதும் காய்கறிகள், காளான் வளர்ப்பு, நாற்று உற்பத்தி செய்து சம்பாதிக்கின்றனர். அது பற்றி அறிவோம். எதையும் உயர்த்திட, தரமான தொழில்நுட்பம் தேவை. கிணற்றில் நீர் இறைக்க மாட்டை பயன்படுத்தினர். மோட்டார் தொழில்நுட்பம் வந்து 300 அடிகளில் இருந்து கூட நீரை இறைத்து விவசாயம் செய்கின்றனர். அப்படிப்பட்ட தொழில்நுட்பம் தான் பசுமை கூடாச விவசாயம் ஆகும். 90 முதல் 95% பயிர்கள் வயல்வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் வருடம் […]

September 12, 2016 Editor
பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு மூன்று எண்ணெய் கரைசல் இயற்கை உரம்

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு மூன்று எண்ணெய் கரைசல்

பப்பாளி சாகுபடியில் இரண்டாவது மாதத்தில் இருந்தே உற்று கவனிக்க வேண்டும். இலைக்கு மேல்புறம், இலைக்கு பின்புறம் என வெள்ளை நிறத்தில் மாவுப்பூச்சி தென்படும். மாவுப்பூச்சி எப்போது தென்பட்டாலும் தண்ணீரை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். தண்ணீர் தெளித்த இரண்டு மணி நேரத்துக்குள், 10 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 50 மில்லி, புங்கன் எண்ணெய் 50 மில்லி, இலுப்பை எண்ணெய் 50 மில்லி ஆகியவற்றைக் கலந்து, இதோடு சிறிதளவு காதி சோப் சேர்த்து கைத்தெளிப்பானால் தெளித்துவிட வேண்டும். நன்றி […]

September 6, 2016 Editor