32°C

Editor

எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா ! இயற்கை விவசாயம்

எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா !

பத்து ஏக்கர் தென்னை தவிர, இரண்டு ஏக்கர் நிலத்தில் இளநீர்த் தென்னை மற்றும் இரண்டு ஏக்கர் 70 சென்ட் நிலத்தில் எலுமிச்சையும் அதற்கு ஊடுபயிராகக் கொய்யாவும் சாகுபடி செய்துள்ளார். ரசூல். ”சவுக்காட் ரகத்துல ஆரஞ்சு, பச்சை இரண்டு ரக இளநீர் மரங்களையும் நடவு செஞ்சிருக்கேன். இதுக்கும் 25 அடி இடைவெளிதான். சொட்டுநீர் பாசனம்தான் போட்டிருக்கேன். ஆறு வயசாச்சு, வழக்கமாக தென்னையைப் பராமரிக்கிறது மாதிரிதான் இதையும் பராமரிக்கிறேன். ஏக்கருக்கு 80 மரங்கள் வீதம் 160 மரங்கள் இருக்கு. அதில் […]

December 24, 2016 Editor
விவசாயிகள் தினம் ! செய்திகள்

விவசாயிகள் தினம் !

விவசாயம் செய்யும், மனதால் விவசாயம் செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். மற்ற நாளாக இருந்தால் இன்னேரம் பெரிய தொலைக்காட்சி  நிறுவனங்கள் எல்லாம், இந்த நாளை முன்னிட்டு இந்த படம் திரையிடுகிறோம். கண்டு மகிழுங்கள் என்றே விளம்பரபடுத்தியிருப்பார்கள். ஆனால் இது கோவணம் உடுத்துபவர்களின் நாள் என்பதால் யாருக்கும் இது சிறப்பா நாள் என்றே தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி ‘தேசிய விவசாயிகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த […]

December 23, 2016 Editor
நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பு முறை ! செய்திகள்

நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பு முறை !

நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சைவேர், கோரைக்கிழங்கு, பற்படாகம், சந்தனச்சிறாய், பேய்ப்புடல், சுக்கு, மிளகு ஆகிய ஒன்பது சரக்குகளும் வகைக்கு 100 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து, ஒன்றிரண்டாக அரைத்து வெயிலில் 3 மணி நேரம் காய வைக்க வேண்டும். பிறகு, காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்த வேண்டும். இதை 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை பயன்படுத்தலாம். இச்சரக்குகள் எல்லாமே நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும். மேலே சொன்ன கலவையில் 30 கிராம் எடுத்து, 1 லிட்டர் தண்ணீரில் […]

December 23, 2016 Editor
மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி ! இயற்கை விவசாயம்

மேட்டுப்பாத்தி நாற்றங்கால் உற்பத்தி !

தேர்வு செய்த நிலத்தில் சேற்றுழவு செய்து 12 நாட்கள் ஆறவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்து 3 நாட்கள் ஆறவிட வேண்டும் பிறகு 72 அடி நீளம், மூன்றரையடி அகலம், 3 அங்குல உயரத்தில் மேட்டுப்பத்தி அமைத்து அதில் 50 கிலோ கனஜீவாமிர்தத்தை (பவுடர் வடிவில் இருக்கும்) தூவ வேண்டும். பின்னர், 15 கிலோ கிச்சலிச்சம்பா விதையைப் பாத்தியில் பரவலாகத் தூவ வேண்டும். பிறகு 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி வைக்கோலைப் பரப்பி விதைகளை மூட வேண்டும். […]

December 22, 2016 Editor
இரண்டு வகை பஞ்சகவ்யா ! இயற்கை உரம்

இரண்டு வகை பஞ்சகவ்யா !

பஞ்சகவ்யாவில், சிருஷ்டி கிரமா (வளர்ச்சி ஊக்கி கலவை) மற்றும் சம்ஹார கிரமா (எதிர்ப்பாற்றல் கலவை) என இரண்டு வகைகள் உள்ளன. பால் 1 பங்கு, தயிர் அரைப் பங்கு, நெய் கால் பங்கு, சிறுநீர் எட்டில் ஒரு பங்கு, சாணம் பதினாறில் ஒரு பங்கு என்று நாட்டுப்பசுவின் ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிப்பது சிருஷ்டி கிரமா. சாணம் ஒரு பங்கு, சிறுநீர் அரைப் பங்கு, பால் கால் பங்கு, தயிர் எட்டில் ஒரு பங்கு, நெய் பதினாறில் […]

December 21, 2016 Editor
ஜாதிக்காய் சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

ஜாதிக்காய் சாகுபடி செய்யும் முறை

ஜாதிக்காய் நன்கு படர்ந்து வளரும் மரம். அதனால், 25 அடி இடைவெளி கொடுக்க வேண்டும். இதற்கு மிதமான சீதோஷ்ண நிலை தேவை. ஆனால், அதிகப் பனி கொட்டும் பகுதியில் வளராது. ஈரக்காற்று வீசும் பகுதிகளில் வளரும். அதே போல உப்புத்தண்ணீரில் வளர்ச்சி சரியாக இருக்காது; அதனால் உப்புத்தண்ணீர் நிலம் கொண்டிருப்பவர்கள் இதனை தவிர்த்து விட வேண்டும். 3 அடி சதுரம் 3 அடி ஆழம் என்ற அளவில் குழியெடுத்து, அதில், ஒரு கூடை அளவு ஊட்டமேற்றிய தொழுவுரத்தை […]

December 17, 2016 Editor
காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்றும் சாணக்கரைசல் ! பயிர் பாதுகாப்பு

காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்றும் சாணக்கரைசல் !

மருதாநதி அணைப்பகுதியில் உள்ள தோப்பு, வனப்பகுதி அருகே இருப்பதால் காட்டு மாடு, மான் ஆகியவை அடிக்கடி ரசூலின் தோட்டத்துக்குள் வந்து போகின்றன. இதனால், இளஞ்செடிகளைக் காப்பாற்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார், ரசூல். “மான் வரும் இடத்தில் புதிதாக எந்த செடிகளையும் நட்டு வைக்க முடியாது. அதற்கு தேவையில்லை என்றாலும் சும்மா கடித்துவிட்டு போய்விடும் அதனால், நிறைய செடிகள் வீணாகும். மான்களையும் தொந்தரவு செய்யாமல், செடிகளையும் பாதுகாக்கிறதுக்காக மாட்டுச் சாணியைக் கெட்டியான பதமாகக் கரைத்து செடிகள் மேலே தெளித்துவிடுவோம். […]

December 17, 2016 Editor
உண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா? இயற்கை விவசாயம்

உண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா?

சமீபத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இயற்கை உணவை உட்கொள்வதால் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் கிடைப்பதாக நம்புகின்றனர் என தெரியவந்துள்ளது. 55 சதவீத அமெரிக்கர்கள், மற்ற உணவு வகைகளை காட்டிலும், இயற்கை உணவுகள் அதிக சத்தானவை என நம்புகின்றனர். 40 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் வாங்கும் உணவு வகைகளில் சிலவற்றை இயற்கை உணவாக தேர்ந்தெடுப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு சராசரி விற்பனையைக் காட்டிலும் இயற்கை உணவுகளின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. […]

December 9, 2016 Editor
கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..! கால்நடை

கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..!

சேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக, ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த சீனுவை நமக்குப் பரிந்துரைத்தார், டாக்டர் நடராஜன். சீனுவின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம். ”டாக்டரோட சிஷ்யர் புரவிமுத்து என்னோட நண்பர். அவர் மூலமாகத்தான் சேவல்களுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு தெரிஞ்சிகிட்டேன். டாக்டர்தான் பஞ்சகவ்யாவை தயாரிக்கும் முறை, மற்றும் பயன்படுத்தும் முறைகளை சொல்லிக் கொடுத்தார். எங்கிட்ட கீரி, மயில், காகம், வல்லூறு, ஆந்தை, பொன்னிறம்னு பல ரகங்களில் 150 சண்டைச் சேவல்கள் இருக்கு. வெள்ளைக்கழிச்சல் […]

December 3, 2016 Editor
வறட்சியில் தென்னிந்தியா : இடம்பெயரும் மக்கள்..! செய்திகள்

வறட்சியில் தென்னிந்தியா : இடம்பெயரும் மக்கள்..!

மழை பொய்த்துப் போனதால் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளாவைவில் உள்ள 76 மாவட்டங்களில் 54 மாவட்டங்கள் வறட்சியில் சிக்கியுள்ளன. பயிர் சாகுபடிக்கு தேவையான நீர் கிடைக்காததால், மூன்று மாநில விவசாயிகளும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கர்நாடகாவில் வட கிழக்கு பருவ மழையானது 79 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் பாதியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் காணப்படுகிறது. இதன் காரணமாக […]

November 30, 2016 Editor