32°C

Editor

இந்தியாவின் 63 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை! விவசாய கட்டுரைகள்

இந்தியாவின் 63 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை!

வைல்ட் வாட்டர் என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, உலகிலேயே சுத்தமான குடிநீர் வசதியில்லாமல் இந்தியாவில்தான் அதிகமான மக்கள் (63.4 மில்லியன்) கிராமப் புறங்களில் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது பஞ்சாப்,ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மொத்த மக்கள் தொகையை விட அதிகமாகும் .உலகளவில் எடுத்துக் கொண்டால், ஆஸ்திரேலியா,ஸ்வீடன் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் வாழும் மக்களை விட அதிகமாகும். ”இந்தியாவில் உள்ள 35 மாநிலங்களில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அழிவைச் சந்தித்து […]

April 1, 2017 Editor
செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா? செய்திகள்

செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

கோயம்புத்தூர் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நாராயணசாமி, பதில் சொல்கிறார். “செம்மரம் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகள் இருப்பது உண்மைதான். உங்கள் நிலத்தில் செம்மரம் நடவு செய்தவுடன், கிராம நிர்வாக அலுவலரிடம், கிராமப் பதிவேட்டில் அதைப் பதிவு செய்யும்படி சொல்ல வேண்டும். பொதுவாக வெட்டப்பட்ட மரங்களைத் தடி மரங்கள் என்கிறோம். விவசாயி தனது பட்டா நிலத்திலுள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு வன அலுவலரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். வெட்டிய மரங்கள் இருப்பு […]

March 24, 2017 Editor
மின்சாரம் இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவி..! செய்திகள்

மின்சாரம் இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவி..!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி சரண்யா எரிசக்தி இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை வடிவமைத்துள்ளார். இந்த கருவி ஏழ்மையான விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நன்றாக உழவு செய்யப்பட்டு நடுவதற்கு ஏற்ற வகையில் உள்ள வயலில் சரியான இடைவெளியில் இந்த கருவியை இழுத்து சென்றால் நாற்றுகளை யாருடைய உதவியும் இன்றி நடமுடியும். இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் குறைந்த செலவில் நாற்றுகளை நட்டு […]

March 24, 2017 Editor
கோடை உழவு..! இயற்கை விவசாயம்

கோடை உழவு..!

பொதுவாக சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தை சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காய விட வேண்டும். இதனால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொலபொலப்பாகும். அதோடு, மண்ணில் இருக்கும் பூச்சிகள், முட்டைகள், களைகள் ஆகியவையும் அழிந்துவிடும். ஆனி மாதம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஐந்து நாட்கள் வீதம் செம்மறியாடுகளைக் கிடை அடைக்க வேண்டும். பிறகு, ஒருமுறை உழுது வைக்க வேண்டும். ஆடி மாதம் மழை கிடைத்தவுடன், உடனடியாக ஓர் உழவு ஓட்டி விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் […]

March 21, 2017 Editor
பாரம்பரியத்திற்கு மாறும் விவசாயிகள், மாண்சாண்டோவிற்கு இழப்பு..! செய்திகள்

பாரம்பரியத்திற்கு மாறும் விவசாயிகள், மாண்சாண்டோவிற்கு இழப்பு..!

மாண்சாண்டோவின் மரபணு மாற்று பி.டி பருத்தி விதைகளை வாங்க மறுத்து, பாரம்பரிய நாட்டு விதைகளுக்கு இந்திய விவசாயிகள் திரும்பி வருவதால், மாண்சாண்டோ நிறுவனம் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மாண்சாண்டோ நிறுவனம், பி.டி எனப்படும் மரபணு மாற்று விதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தையில் நுழைவதற்காக அந்த நிறுவனம் பல சட்ட விதிமுறைகளை மீறியதாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது. இருப்பினும் தனது பண, அதிகார பலத்தை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்தது. […]

March 20, 2017 Editor
கருங்குறுவை சாகுபடி..! இயற்கை விவசாயம்

கருங்குறுவை சாகுபடி..!

நாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி.. கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலுக்கான நிலத்தில் 2 சால் சேற்றுழவு செய்து எருக்கன், ஆடாதொடை, புங்கன், வேம்பு நொச்சி இலைகள் ஆகியவற்றைக் கலந்து 50 கிலோ அளவில் போட்டு காலால் மிதிக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி நிலத்தைச் சமப்படுத்த […]

March 18, 2017 Editor
அறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..! இயற்கை விவசாயம்

அறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..!

செண்டுமல்லிக்குப் பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். தேர்வு செய்த 60 சென்ட் நிலத்தை ஓர் உழவு செய்து மூன்று நாட்கள் காயவிட வேண்டும். பிறகு, இரண்டு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைப் பரவலாகக் கொட்டி ஓர் உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, 10 அடி சதுரத்தில் பாத்திகள் எடுத்து வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். பாத்திகளில் செடிக்குச்செடி ஒன்றரை அடி இடைவெளி, வரிசைக்கு வரிசை இரண்டு அடி இடைவெளி என இருக்குமாறு ஒரு அங்குல ஆழத்தில் […]

March 17, 2017 Editor
தென்னை மரம் ஏற உதவும் கருவி..! செய்திகள்

தென்னை மரம் ஏற உதவும் கருவி..!

”தென்னை விவசாயிகளுக்குக் காய்கள் பறிப்பது முக்கியமான வேலை. தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்தால், காய் பறிக்க ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் நஷ்டம் ஏற்படும். சில விவசாயிகள் உயரமான மரங்களை அழித்துவிட்டு, குட்டை ரகக் கன்றுகளை நடுகிறார்கள். ஆனால், உயரமான மரங்களை அறுத்து எறிய வேண்டாம். இதற்கு எளிய தீர்வு உண்டு. தென்னை மரத்துடன் இணைத்துக்கொண்டு ஏறும் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இதன் மூலம், 60 அடி உயரம் கொண்ட மரத்தில்கூட ஐந்து நிமிடத்தில் ஏறிவிட முடியும். […]

March 16, 2017 Editor
நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம்..! செய்திகள்

நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம்..!

இந்த இயந்திரம் பற்றி திரு.விவேக் அவர்கள் கூறியவை. “நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரம் எங்கள் துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலக்கடலைச் செடியிலிருந்து காய்களைப் பிரித்தெடுப்பதற்கு அதிக மனித உழைப்பும் நேரமும் செலவாகிறது. தற்போது கிராமங்களில் நிலக்கடலையைக் கையால் பிரித்தெடுக்கிறார்கள். இம்முறையினால் ஓர் ஆள், ஒரு நாளில் 10 முதல் 15 கிலோ அளவே பிரித்தெடுக்க முடிகிறது. ஆகவே, அறுவடைக் காலங்களில் வேலையாட்கள் பற்றாக்குறையினால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். இச்சிரமத்தைப் போக்க நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் […]

March 14, 2017 Editor