32°C

Editor

ஓசூர் பகுதியில்முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி! செய்திகள்

ஓசூர் பகுதியில்முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி!

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட, ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில், 200 ஹெக்டேர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு, முள்ளுங்கி அனுப்பி வைக்கப்படுகிறது. 60 நாட்களில் பலன் தரும் முள்ளங்கியை, ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய, 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு, பத்து டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ முள்ளங்கி, ஐந்து ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டால், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். […]

January 25, 2018 Editor
புவி வெப்பமடைதல்-  தெரிஞ்சுக்கலாமா? விவசாய கட்டுரைகள்

புவி வெப்பமடைதல்- தெரிஞ்சுக்கலாமா?

குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்பது போன்ற வார்த்தைகள் நமக்கு செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. முதலில் நாம் கேட்டது ஓசோன் படலம் ஓட்டை என்பதைத்தான், ஆனால் இன்றோ உலகம் அழிவின் விளிம்பை நோக்கிச் செல்கிறது. புயல், வெள்ளம் தாறுமாறாக அதிகரித்திருப்பதற்கும், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் இவைதான் காரணம் என்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தை உருவாக்கும் குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்றால் என்ன? சிக்கலான அறிவியல், சுற்றுச்சூழல் விஷயங்களாகக் கருதப்படும் புவிவெப்பமடைதல், பருவநிலை மாற்றம் […]

January 24, 2018 Editor
கோவையில் தென்னை திருவிழா : ஜன 27ம் தேதி துவக்கம் செய்திகள்

கோவையில் தென்னை திருவிழா : ஜன 27ம் தேதி துவக்கம்

கோவை;இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், இரு நாட்கள் நடக்கும் தென்னை திருவிழா, கோவையில், வரும் 27ல் துவங்குகிறது. இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் நாராயணன் கூறியதாவது:கோவை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், வரும், 27ம் தேதி, தென்னை திருவிழா நடக்கிறது. தென்னை மேம்பாட்டு வாரியம், கயிறு வாரியம், இந்தோனேஷியாவில் உள்ள, ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமுதாயம், காசர்கோடு இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம், மத்திய பயிர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை ஆகிய நிறுவனங்கள் […]

January 24, 2018 Editor
காவிரி விவசாயிகள் ரயில் மறியல் : மதிமுக ஆதரவு செய்திகள்

காவிரி விவசாயிகள் ரயில் மறியல் : மதிமுக ஆதரவு

காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட  மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்கங்களும், வரும் ஜனவரி 28-ம் தேதி நடத்தும் ரயில் மறியல் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும், தஞ்சாவூரில் நடைபெறவுள்ள போராட்டத்தில் தான் பங்கேற்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் […]

January 24, 2018 Editor
சீனர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்த பாசனம் தொழில்நுட்பம்

சீனர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்த பாசனம்

சீனாவின் தென்மேற்கில் பகுதியில் உள்ள யுன்னான் மகாணத்தில் உள்ளது. , இம்மாகாணத்தின் தலைநகர் குன்மிங். கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இது ஹன் அரச வம்சத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இம்மகாணத்தின் தெற்குப்பகுதியில் உள்ள ஹோங்கே ஹானி நெல் மலைச்சரிவுப் பகுதியை வெறும் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. கடந்த 1,300 ஆண்டுகளில் ஹானி மக்கள், மிகவும் சிக்கலான ஒரு பாசன நடைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். காடுகளைக் கொண்ட மலைச்சரிவில் இருந்து இறங்கி வரும் தண்ணீர் வாய்க்கால்கள், ஆழமற்ற வயல்வெளிகள் வழியாக […]

January 23, 2018 Editor
நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு! தொழில்நுட்பம்

நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு!

பிலாஸ்டிக் பாட்டில்களின் அடியில் முக்கோன வடிவமிட்டு அதன் உள்ளே ஒரு எண் இருக்கும். (“Resin identification code” – 1 முதல் 7 வரை) இந்த எண் அந்த பிலாஸ்டிகின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமர்(Type of polymer) தரத்தை குறிக்கும். தண்ணீர் கொண்டு செல்ல நாம் வாங்கும் பிலாஸ்டிக் பாட்டில்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை? நீங்கள் தண்ணீர் கொண்டு செல்லும் பிலாஸ்டிக் பாட்டிலின் கீழே உள்ள எண் 5 முதல் 7 வரை (Food grade […]

January 22, 2018 Editor
செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம் செய்திகள்

செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம்

செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட […]

January 22, 2018 Editor
10 ஆயிரம் ஆண்டு பழமையான நிலத்தடி ஏரி செய்திகள்

10 ஆயிரம் ஆண்டு பழமையான நிலத்தடி ஏரி

ஆப்ரிக்க நாடான நமீபியாவில் 10 ஆயிரம் ஆண்டு பழமையான பிரமாண்ட நிலத்தடி நீர்நிலை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தென்மேற்கு ஆப்ரிக்க நாடான நமீபியா அட்லான்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு குடிநீர் ஆதாரம் தொடர்பாக ஜேர்மனி புவி அறிவியல் மற்றும் இயற்கை வளங்கள் நிறுவனத்தின் திட்ட மேலாளர் மார்ட்டின் கிங்கர் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், மிகமிக பழமையான பிரமாண்ட நீர்நிலை ஒன்று தரைக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மார்ட்டின் கிங்கர் கூறுகையில், ஆப்ரிக்காவின் […]

January 22, 2018 Editor
ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன? செய்திகள்

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து  தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு, இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதிதான் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிவிக்கையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 106 […]

January 19, 2018 Editor
பெரிய வெங்காயம் விலை உயர்வு, ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லெட்! செய்திகள்

பெரிய வெங்காயம் விலை உயர்வு, ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லெட்!

தமிழகத்தின் வெங்காய தேவையை பெரிதும் பூர்த்தி செய்யும் கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக, பெரிய வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வரத்து குறைந்ததால், இரு மாதங்களாக, விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில், பெரிய வெங்காயம் விலை, ஒரு கிலோ, 14 ரூபாயில் இருந்தது, தற்போது, 55 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதே கால கட்டத்தில், சின்ன வெங்காயம் விலை, 150 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. தற்போது, […]

January 17, 2018 Editor