32°C

Editor

பன்றி வளர்ப்பில் லாபம் அடைய கவனிக்க வேண்டிய விஷயங்கள்! கால்நடை

பன்றி வளர்ப்பில் லாபம் அடைய கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வெண்பன்றி வளர்ப்பு என்பது தற்போது பிரபலமடைந்து வருகிறது. அதற்கு காரணம் நம் நாட்டில் மாமிசத் தேவை அதிகமாக உள்ளது மற்றும் உணவுக் கழிவுகளை பன்றிகள் உட்கொள்வதால் உணவுக் கழிவுகள் வீணாக கொட்டப்படுவது தடுக்கப்படுகிறது. பன்றி வளர்ப்புத் தொழிலில் நாம் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் நஷ்டமின்றி தொழிலில் முன்னேற முடியும்.  பன்றி வளர்ப்புத் தொழிலில் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிக் கீழே பார்ப்போம். முதலில் பன்றிப் பண்ணை ஆரம்பிக்கும் […]

May 31, 2020 Editor
நெற்பழ நோய்  விவசாயிகளுக்கு வரமா? சாபமா? பயிர் பாதுகாப்பு

நெற்பழ நோய்  விவசாயிகளுக்கு வரமா? சாபமா?

உலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2018-19 பயிர் ஆண்டில் 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 1.05 மில்லியன் டன் அதிகரித்து 2019-20 பயிர் ஆண்டில் 117.47 மில்லியன் டன்னாக உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை காவிரி டெல்டா பகுதிகளில் நெல் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது. நெல்பயிரை பொறுத்தவரை இலைப்புள்ளி நோய், குலை நோய், இலை உறை அழுகல் நோய், பாக்டீரிய வாடல் நோய் போன்ற நோய்கள் முதன்மையாக ஏற்படுகின்றன. இவற்றுள் விவசாயிகள் […]

May 30, 2020 Editor
திறன்மிக்க  நுண்ணுயிரிகள் இயற்கை உரம்

திறன்மிக்க  நுண்ணுயிரிகள்

மண்ணிற்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் கலவையே திறன்மிக்க நுண்ணுயிரிகள் (Effective Microorganism) என்றழைக்கப்படுகிறது . இதனை சுருக்கமாக ஈ.எம் (EM) எனவும் சொல்கிறார்கள். நன்மை தரும் நுண்ணுயிரிகளின் கலவை தான் இந்த ஈ.எம். 1982 இல் ஜப்பான் ஒகினாவா ரியுக்யஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். டெருவோ ஹிகா என்பவர் இதனை கண்டுபிடித்தார். இக்கலவையானது விவசாயம், கால்நடை, சுற்றுச்சூழல், மருத்துவம், நீர் நிலைச் சுத்திகரிப்பு போன்ற அனைத்து துறைகளிலும் பயன்படுத்தபடுகிறது. இதனை வணிகமுத்திரையிட்ட தயாரிப்பாக  ஈ.எம்-1 நுண்ணுயிரி உருகற்மிகைப்பி […]

May 30, 2020 Editor
பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம் விவசாய கட்டுரைகள்

பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்

பயிர் உற்பத்திக்கான காலநிலை பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்: பயிர் வளர்ச்சிக்கு மண்ணின் வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாகும். மண்ணின் வெப்பநிலை மாற்றங்கள் அதன் தன்மையை அதிக அளவில் பாதிக்கின்றன. மண்ணின் வெப்பநிலையும் பயிரும்: மண்ணிண் வெப்பநிலையானது விதையின் முளைப்புத்திறன் மற்றும் வேரின் செயல்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. (நெல் –10o C , கோதுமை – 30C ) அதிக வெப்பநிலை வேரின் வளர்ச்சியைத் தடைப் படுத்துவதோடு , தண்டில் சிறு […]

May 29, 2020 Editor
குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி விவசாய கட்டுரைகள்

குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி

விவசாயிகள் குறைவில்லா வருமானம் பெற ஒரு முக்கிய பயிர், அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம் பெற முடியும்.  தற்பொழுது மானாவாரி நிலங்களில் விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நிலக்கடலையில் நான்கு வரிசைக்கு ஒரு வரிசை ஆமணக்கு பயிர் செய்கிறர்கள். இதனால் நிலக்கடலையில் வரக்கூடிய அனைத்து பூச்சிகளும் முதலில் ஆமணக்கு பயிரைத் தாக்குகிறது. அதனால் நிலக்கடலை பயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. […]

May 29, 2020 Editor
இயற்கை உரம் (பகுதி – 2)  பருமனனான அங்ககப் பொருட்கள் இயற்கை உரம்

இயற்கை உரம் (பகுதி – 2) பருமனனான அங்ககப் பொருட்கள்

பருமனனான அங்ககப் பொருட்கள் குறைவான சதவீதம் கொண்ட ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது மற்றும் இதனை அதிக அளவில் பயிர்களுக்கு இட வேண்டும். பண்ணை உரம், மட்கிய உரம், பசுந்தாள் உரங்கள் பருமனனான அங்ககப் பொருட்களின் ஆதாரங்கள் ஆகும். இதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்: நுண் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய தாவர ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது. மண் இயல் நிலைக் குணங்களான மண் அமைப்பு, நீர் பிடிப்புக் கொள்ளளவு மற்றும் பல குணங்களை மேம்படுத்துகிறது. சிதைவுறுதலின் போது கரியமிலவாயுவை வெளிவிடுவதால் கரியமில […]

May 29, 2020 Editor
அக்ரிசக்தியின் வைகாசி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? மின்னிதழ்

அக்ரிசக்தியின் வைகாசி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இந்தியாவிற்குள் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள், உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க உதவும் வழிமுறைகள், பழுப்பு உரம், ஆனைக்காெம்பன் ஈ, விவசாயிகளின் குறை தீர்க்கும் கிசான் சேவை மையம், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய  மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற […]

May 29, 2020 Editor
புதினாக்கீரை பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள் பயிர் வகைகள்

புதினாக்கீரை பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்

கீரை வகைகளில் ஒன்றான புதினா நல்ல நறுமணம் கொண்ட ஒரு மருத்துவ மூலிகையாகும். கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யக்கூடிய பயிர்களில் ஒன்றாகும். இதற்கு காலநிலை எதுவும் கிடையாது. ஆனால் ஜூன் – ஜூலை மாதங்களில் நடவு செய்ய சிறந்த பருவம் ஆகும். பயிரிடும் முறை: நிலத்தை நன்கு பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட வேண்டும். பின்பு சாகுபடிக்கு ஏற்றவாறு பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும். […]

May 28, 2020 Editor
கோடை உழவு– கோடி நன்மை  ( பொன் ஏர் கட்டுதல் ) பகுதி-2 இயற்கை விவசாயம்

கோடை உழவு– கோடி நன்மை ( பொன் ஏர் கட்டுதல் ) பகுதி-2

உழவு   இயற்கை விவசாயம், செயற்கை விவசாயம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது மண். அந்த மண்ணைக் கிளறிவிடுவதுதான் உழவு மற்றும் விவசாயத்தின் அடிப்படை ஆகும். சம்பா முடிந்ததும் அவசியம் கோடை உழவு செய்ய வேண்டும். தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று மழைபெய்யும் மானாவாரி மற்றும் புஞ்சை நிலங்களில் பயிர்சாகுபடி நடைமுறையில் உள்ளது. முதற்பயிர் சாகுபடி ஆனி-ஆடி மாதங்களில் துவங்கி, இரண்டாவது பயிர் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. இடைப்பட்ட காலமான மாசி முதல் வைகாசி மாதம் […]

May 28, 2020 Editor
அக்ரிசக்தியின் வைகாசி மாத இரண்டாவது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் வைகாசி மாத இரண்டாவது மின்னிதழ்

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தேன் மற்றும் அதன் பயன்கள், உழவு, இயற்கை உரங்கள், புதினா சாகுபடி, வெண்பன்றி வளர்ப்பு போன்ற தொகுப்புகளை அடங்கிய  மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். புதிதாக விவசாயிகளுக்கான கேள்வி-பதில் பகுதி துவங்கப்பட்டுள்ளது. கடந்த இதழைக் காட்டிலும் இந்த இதழை மேம்படுத்தி இருக்கிறோம். மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். […]

May 22, 2020 Editor