32°C

செய்திகள்

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன? செய்திகள்

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து  தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு, இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதிதான் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிவிக்கையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 106 […]

January 19, 2018 Editor
பெரிய வெங்காயம் விலை உயர்வு, ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லெட்! செய்திகள்

பெரிய வெங்காயம் விலை உயர்வு, ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லெட்!

தமிழகத்தின் வெங்காய தேவையை பெரிதும் பூர்த்தி செய்யும் கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக, பெரிய வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வரத்து குறைந்ததால், இரு மாதங்களாக, விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில், பெரிய வெங்காயம் விலை, ஒரு கிலோ, 14 ரூபாயில் இருந்தது, தற்போது, 55 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதே கால கட்டத்தில், சின்ன வெங்காயம் விலை, 150 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. தற்போது, […]

January 17, 2018 Editor
விடைபெற்றது பருவ மழை! செய்திகள்

விடைபெற்றது பருவ மழை!

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை, 2017 அக்., 27ல் துவங்கியது. இறுதியாக, நவ., 30ல், ‘ஒக்கி’ புயலாக மாறி, கன்னியாகுமரி முதல் குஜராத் வரை,  கன மழை கொட்டியது. இந்நிலையில், 80 நாட்களாக நீடித்த, வட கிழக்கு பருவ காற்றும், பருவ மழையும், நேற்று விடை பெற்றது. இது குறித்து, வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளதாவது: வட கிழக்கு பருவ மழை, ஆண்டுதோறும், 44 செ.மீ., பெய்ய வேண்டும். இந்த ஆண்டு, 40 செ.மீ., மழை பெய்துள்ளது. அதாவது, இயல்பை […]

January 17, 2018 Editor
தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் செய்திகள்

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

அன்பார்ந்த விவசாய நண்பர்களுக்கு இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் இத்தரணியில் தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் இவ்வருடம் எந்த வித விவசாயிகளும், கால்நடைகளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லா இறை அருள் புரியட்டும் நன்றி!

January 14, 2018 Editor
சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,660 நிர்ணயம்: முதல்வர் அறிவிப்பு செய்திகள்

சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1,660 நிர்ணயம்: முதல்வர் அறிவிப்பு

நடப்பு கொள்முதல் ஆண்டில் சன்ன ரக நெல்லுக்கான விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,660 மற்றும் சாதா ரகம் ரூ.1,600 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் நெல்லுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை ஆதார விலையாக அறிவிக்கிறது. இதனுடன் தமிழக அரசு ஊக்கத் தொகையை அளித்து, விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் சன்ன ரகம், சாதா ரக நெல்லுக்கு உரிய விலையை நிர்ணயித்து முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். […]

December 30, 2017 Editor
முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் உரம் வாங்க ஆதார் கட்டாயம்! செய்திகள்

முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் உரம் வாங்க ஆதார் கட்டாயம்!

விவசாயிகள் உரம் வாங்க ஜனவரி 1-ம் தேதிமுதல் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ரபி பருவமான அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் 12 லட்சத்து 95 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு மழைப்பொழிவு எதிர்பார்த்தபடி இல்லாததால் இதுவரை 10 லட்சத்து 47 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சிறுதானியங்கள், பயறு வகைகள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துக்களும் குறைவாகவே சாகுபடி […]

December 30, 2017 Editor
நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி.. செய்திகள்

நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி..

இந்த vivasayam.org இணையதளம் உருவாக காரணமான இயற்கை வேளாண் போராளி நம்மாழ்வார் அவர்களுக்கு நமது அக்ரிசக்தியின் நினைவஞ்சலி.. இந்த செயலியை, இணையத்தளத்தில் நீங்கள் அனைவருக்கும் காண காரணமானவர் திரு.நம்மாழ்வார் அவர்களுக்கு அனைவரும் நினைவஞ்சலி செலுத்துவோம்

December 30, 2017 Editor
விவசாயிகள் தின நாளில், விவசாய திட்டக்குழு அமைப்போம்! செய்திகள்

விவசாயிகள் தின நாளில், விவசாய திட்டக்குழு அமைப்போம்!

விவசாயம் செய்யும், மனதால் விவசாயம் செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி ‘தேசிய விவசாயிகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 16 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, இந்தியாவின் 5-வது பிரதமராக பதவியேற்ற சரண் சிங். 7 மாதங்கள் ஆட்சியில் இருந்தபோது  ‘ஜமீன்தாரி ஒழிப்புமுறை,  நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு […]

December 23, 2017 Editor
மேம்படுத்தப்பட்டுள்ள அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி செய்திகள்

மேம்படுத்தப்பட்டுள்ள அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி

அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தியின் விவசாயம் செயலி ஜூலை மாதத்திற்குப் பிறகு நேற்று மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நம்மாழ்வாரை சந்தித்தபின் கருவாகி, உருவான செயலி இப்போது பெரிய மாற்றத்தினை ஏற்படுத்திவருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மேம்படுத்தப்பட்டுள்ள புதிய செயலியில் நீங்கள் பதிவு செய்தபின்னரே செயலியில் உள்ள செயலிகளைபார்க்க முடியும். ஆனால் இதனை நாங்கள் வெளியில் யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம். காணொளி வசதி செய்தியில் இனி குரல், காணொளி வசதியையும் பயன்படுத்தலாம். விவசாயம் செயலியை இனி […]

December 4, 2017 Editor
காஞ்சிபுரத்தில் 359 ஏரிகள் நிரம்பின செய்திகள்

காஞ்சிபுரத்தில் 359 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 924 ஏரிகளில் 359 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் கனமழை காரணாக காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இவற்றில் 359 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 266 ஏரிகள் 75 சதவீதமும், 178 ஏரிகள் 50 சதவீதமும், 121 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் குறைவாக நிரம்பி உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் […]

December 3, 2017 Editor