32°C

செய்திகள்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி செய்திகள்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. விவசாயிகளின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் பதிலளித்த விபரம்: ராமகவுண்டர்: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், 40 அடி தண்ணீர் உள்ளது. கால்வாயில் தற்போது, 153 கன அடிநீர் மட்டுமே செல்கிறது. ஏரிகளில் தண்ணீரை நிரப்ப, 195 கனஅடி நீர் திறக்க வேண்டும். கலெக்டர்: 195 கனஅடி நீர் திறக்கப்படும். சென்னையநாயுடு: குள்ளம்பட்டி ஏரியில் இருந்து, களர்பதி வரை, ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு […]

January 27, 2018 Editor
வேளாண்மை துறையில் முறைகேடு : விவசாயிகள் குற்றச்சாட்டு காணொளி

வேளாண்மை துறையில் முறைகேடு : விவசாயிகள் குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரத்தில் மானாவரி பயிர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். https://youtu.be/9fgmJ1W-RYA

January 25, 2018 Editor
அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் செய்திகள்

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல்

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.மாஃபா பாண்டியராஜன் மற்றும் திரு.ராஜன் நடராஜன் ஆகியோர் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் திருமதி.பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தை பொங்கலைக் கொண்டாடி மகிழ்வும், தமிழர்களின் சிறப்புகளைச் சொல்லி, ஆடிப்பாடி  துள்ளல் நடனமாடி மகிழ ஒரு பாடல் இல்லை என்ற குறையை போக்கும் வகையில்,  அமெரிக்காவின் நியுஜெர்சி வசந்த் வசீகரனின் VSharp  இசைக்குழு இசையமைத்து வலைத்தமிழ்.காம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் […]

January 25, 2018 Editor
அரூர் புளுதியூர் புதன் சந்தையில் மாடுகள் விற்பனை ஜோர்! செய்திகள்

அரூர் புளுதியூர் புதன் சந்தையில் மாடுகள் விற்பனை ஜோர்!

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொக்கரப்பட்டி பஞ்., புளுதியூரில், புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இதில், மாடு, ஆடு, நாட்டுக்கோழிகள் அதிகளவில் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று சந்தைக்கு கலப்பின மற்றும் ஜெர்சி வகையைச் சேர்ந்த, 200 மாடுகள் மற்றும் கன்றுகள் விற்பனைக்கு வந்தன. கலப்பின மாடு ஒன்று, 25 ஆயிரம் ரூபாய் முதல், 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அதே போல், கன்று ஒன்று, 3,000 ரூபாய் முதல், 7,500 ரூபாய் வரை […]

January 25, 2018 Editor
கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை: எம்.பி., சிவா செய்திகள்

கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை: எம்.பி., சிவா

மத்திய, மாநில அரசு கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை, இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” என, இந்திய உணவு கழகத்தின் மாநில ஆலோசனை குழு தலைவர் எம்.பி., சிவா கூறினார். மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள கிடங்குகளில் இருந்து, உணவு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களில், பூச்சி தொல்லையை தடுக்க, ரசாயன மருத்து அடிக்கப்படுகிறது. விளைச்சலின் போதே பல ரசாயன […]

January 25, 2018 Editor
ஓசூர் பகுதியில்முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி! செய்திகள்

ஓசூர் பகுதியில்முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி!

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட, ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில், 200 ஹெக்டேர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு, முள்ளுங்கி அனுப்பி வைக்கப்படுகிறது. 60 நாட்களில் பலன் தரும் முள்ளங்கியை, ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய, 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு, பத்து டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ முள்ளங்கி, ஐந்து ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டால், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். […]

January 25, 2018 Editor
கோவையில் தென்னை திருவிழா : ஜன 27ம் தேதி துவக்கம் செய்திகள்

கோவையில் தென்னை திருவிழா : ஜன 27ம் தேதி துவக்கம்

கோவை;இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், இரு நாட்கள் நடக்கும் தென்னை திருவிழா, கோவையில், வரும் 27ல் துவங்குகிறது. இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் நாராயணன் கூறியதாவது:கோவை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், வரும், 27ம் தேதி, தென்னை திருவிழா நடக்கிறது. தென்னை மேம்பாட்டு வாரியம், கயிறு வாரியம், இந்தோனேஷியாவில் உள்ள, ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமுதாயம், காசர்கோடு இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம், மத்திய பயிர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை ஆகிய நிறுவனங்கள் […]

January 24, 2018 Editor
காவிரி விவசாயிகள் ரயில் மறியல் : மதிமுக ஆதரவு செய்திகள்

காவிரி விவசாயிகள் ரயில் மறியல் : மதிமுக ஆதரவு

காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட  மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்கங்களும், வரும் ஜனவரி 28-ம் தேதி நடத்தும் ரயில் மறியல் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும், தஞ்சாவூரில் நடைபெறவுள்ள போராட்டத்தில் தான் பங்கேற்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் […]

January 24, 2018 Editor
செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம் செய்திகள்

செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம்

செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட […]

January 22, 2018 Editor
10 ஆயிரம் ஆண்டு பழமையான நிலத்தடி ஏரி செய்திகள்

10 ஆயிரம் ஆண்டு பழமையான நிலத்தடி ஏரி

ஆப்ரிக்க நாடான நமீபியாவில் 10 ஆயிரம் ஆண்டு பழமையான பிரமாண்ட நிலத்தடி நீர்நிலை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தென்மேற்கு ஆப்ரிக்க நாடான நமீபியா அட்லான்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு குடிநீர் ஆதாரம் தொடர்பாக ஜேர்மனி புவி அறிவியல் மற்றும் இயற்கை வளங்கள் நிறுவனத்தின் திட்ட மேலாளர் மார்ட்டின் கிங்கர் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், மிகமிக பழமையான பிரமாண்ட நீர்நிலை ஒன்று தரைக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மார்ட்டின் கிங்கர் கூறுகையில், ஆப்ரிக்காவின் […]

January 22, 2018 Editor