32°C

கீரை வகைகள்

கீரை வகைகள் பற்றிய செய்திகள்….

செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை ! இயற்கை விவசாயம்

செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை !

25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் இட வேண்டும். இதன் மீது கொஞ்சம் மண்ணைத் தள்ளி, ஒன்றரை அங்குலம் ஆழத்தில் ஒரு விதை ஊன்ற வேண்டும். […]

July 9, 2016 Editor
மணத்தக்காளி சாகுபடி இயற்கை விவசாயம்

மணத்தக்காளி சாகுபடி

மணத்தக்காளி விதைக்காக அலையத் தேவையில்லை. சில செடிகளை அறுக்காமல் விட்டால், காய் பிடித்து, பழம் வைக்கும். அந்தப் பழங்களைப் பறித்து, விதைகளை எடுத்து, சாம்பலில் புரட்டி காய வைத்து, பயன்படுத்தலாம். மணத்தக்காளி, களர்நிலம் தவிர மற்ற அனைத்து வகை மண்ணிலும் வளரும். செம்மண் மற்றும் மணல் கலந்த செம்மண் நிலங்களில் சிறப்பாக வளரும். சாகுபடிக்கு தனியாக பட்டம் இல்லை. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். நிலத்தை புழுதியாக உழவு செய்து, 8 அடிக்கு 8 அடி இடைவெளியில் […]

June 23, 2016 Editor
மணத்தக்காளிக் கீரையின் மருத்துவ பயன்கள் கீரை வகைகள்

மணத்தக்காளிக் கீரையின் மருத்துவ பயன்கள்

கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்கவைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவை குணமாகும். மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள் தீரும். ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும். ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளிக் கீரையுடன், ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாகச் […]

June 20, 2016 Editor
பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள் கீரை வகைகள்

பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள்

தமிழகத்தில் நிலவும் தட்பவெப்ப நிலையை, சித்தர்களும், முன்னோர்களும் 6 வகைப் பருவங்களாகப் பிரித்துள்ளனர். கீரைகள் பற்றிய இந்தப் புத்தகத்தில் பருவ காலங்களுக்கு என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். இருக்கிறது, மற்ற உணவுகளைப் போல் கீரை உணவுகள் கிடையாது. மற்றவற்றில் இல்லாத, கிடைக்காத பல ‘நல்ல விஷயங்கள்’ கீரைகளில் உள்ளன. அவற்றை, எந்தவித தடங்கல்களோ, குறைபாடுகளோ இல்லாமல் ‘அனுபவிக்க’ வேண்டும் என்றால், தட்பவெப்ப நிலைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சித்தர்களும், இதைக் கருத்தில் கொண்டுதான் பருவ காலங்களுக்கு […]

June 15, 2016 Editor
கீரைகளைப் பயன்படுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டியவை கீரை வகைகள்

கீரைகளைப் பயன்படுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

கடைக்குப் போகிறோம், கீரைக்கட்டு வாங்கி வருகிறோம் அல்லது தோட்டத்தில் இருக்கும் கீரையைக் கிள்ளி வருகிறோம் அல்லது மரத்தில் இருந்து ஒடித்துக்கொள்கிறோம். வீட்டுக்குக் கொண்டு வந்த உடனேயே அதை அப்படியே சமைத்துச் சாப்பிட்டு விட முடியாது. கீரை என்பது மிகவும் எளிமையான உணவுதான் என்றாலும், அதைச் சமைத்துச் சாப்பிடுவதற்கு முன் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கீரைக்கட்டு என்றால், அதில் கீரை மட்டும் இருக்காது. அதோடு புல், பூண்டு என்று தேவையற்ற செடி, கொடிகளும் இருக்கும். முதலில் […]

June 13, 2016 Editor
அகத்திக் கீரை (Sesbania grandiflora) கீரை வகைகள்

அகத்திக் கீரை (Sesbania grandiflora)

சித்தர் பாடல் மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி வாய்வாம் திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச் சகத்திலெலு பித்தமது சாந்தியாம் நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு                             (அகத்தியர் குணபாடம்) பொருள் உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை முறிக்கும். நிறைய சாப்பிட்டால் வாயுப் பிரச்னை உருவாகும். அகத்திக் கீரையின் தன்மை விஷநாசினி – Antidote குளிர்ச்சி உண்டாக்கி – Refrigerant மலமிளக்கி – Laxative புழு அகற்றி – […]

June 9, 2016 Editor
புதினா (Mentha Arvensis) கீரை வகைகள்

புதினா (Mentha Arvensis)

சித்தர் பாடல் அருசி யொடுவாந்தி யக்கினி மந்தங் குருதி யழுக்குமலக் கொட்ட – விரியுந் துதியதன்று சோறிறங்குத் தொல்லுலகில் நாளும் புதியனல் மூலி புகல். (அகத்தியர் குணபாடம்) பொருள் ருசியின்மை, வாந்தி மற்றும் உஷ்ண நோய்களை நீக்கும். ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும். வாயுப் பிரச்னையைத் தீர்ப்பதுடன், மலச்சிக்கலையும் போக்கும். புதினா கீரையின் தன்மை பசித்தூண்டி = Stomachic சிறுநீர்ப்பெருக்கி = Diuretic வெப்பம் உண்டாக்கி = Stimulant அகட்டுவாய் அகற்றி = Carminative இசிவு அகற்றி = Anti […]

June 6, 2016 Editor
கறிவேப்பிலை  (Murraya Koenigii) கீரை வகைகள்

கறிவேப்பிலை (Murraya Koenigii)

சித்தர் பாடல் வாயினருசி வயிற்றுளைச்ச னீடுசுரம் பாயுகின்ற பித்தமென் பண்ணுங்கான் – தூய மருவேறு காந்தளங்கை மாதே! உலகிற் கறிவேப் பிலையருந்திக் காண். (அகத்தியர் குணபாடம்) பொருள்: ருசியின்மை, வயிற்றுப் பிரச்னை, காய்ச்சல், பித்த நோய்கள் போன்றவை தீரும். கறிவேப்பிலையின் தன்மை உரமாக்கி = Tonic பசித்தூண்டி = Stomachic கறிவேப்பிலை தானே என்று நினைக்காதீர்கள். கறிவேப்பிலை சேர்த்த எந்த உணவும் உடலுக்கு மிகவும் நல்லது. உடலை இரும்புபோல் வலுவாக்கக்கூடிய சக்தி கறிவேப்பிலை உண்டு. கறிவேப்பிலையில் வைட்டமின் […]

June 4, 2016 Editor
கொத்தமல்லி (Coriandrum Sativum) கீரை வகைகள்

கொத்தமல்லி (Coriandrum Sativum)

சித்தர் பாடல் கொத்தமல்லி வெப்பம் குளிர்காய்ச்சல் பித்தமந்தஞ் சர்த்திவிக்கல் தாகமொரு தாதுநட்டம் – கத்தியெழும் வாத விகார்மடர் வன்கர்த்த பிவிரணம் பூதலத்தில் லாதகற்றும் போற்று. கொத்தமல்லிக் கீரையுண்ணில் கோரவ நோசகம்போம் பித்தமெல்லாம் வேருடனே பேருங்கான் – சத்துவமாம் கச்சுமுலை மாதே! நீ காண். (அகத்தியர் குணபாடம்) பொருள் உடல் சூடு, குளிர்க் காய்ச்சல், பித்த நோய்கள், விக்கல், தாகம், வாத நோய்கள், புண்கள் போன்றவை குணமாகும். கொத்தமல்லிக் கீரையின் தன்மை பசித் தூண்டி = Stomachic அகட்டுவாய் […]

June 2, 2016 Editor
புளிச்சக் கீரை (Hibiscus Cannabinus) கீரை வகைகள்

புளிச்சக் கீரை (Hibiscus Cannabinus)

சித்தர் பாடல் தேகசித்தி யாகுஞ் சிறுகாசம் மந்தமறும் போகமுறும் விந்துவுநற் புஷ்டியுண்டாம் – வாகாம் வெளிச்சிறுமான் நோக்குவிழி மென்கொடியே! நாளும் புளிச்சிறு சீரையுண்ணும் போது. (அகத்தியர் குணபாடல்) பொருள் ஆரம்ப நிலை காச நோய் குணமாகும். உடலின் மந்தத்தன்மை விலகும். வறட்சி அகற்றி –  Emollient மலம் போக்கி –  Laxative இன்பம் பெருக்கி – Aphrodisiac புளிச்சக் கீரையை கோங்குரா என்று தெலுங்கில் சொல்வார்கள். அரைக் கீரையைக் கடையும்போது தக்காளிக்குப் பதில் இந்தக் கீரையை பக்குவப்படுத்தி […]

May 28, 2016 Editor