32°C

விவசாய கட்டுரைகள்

இ.எம் தயாரிக்கும் முறை ! இயற்கை உரம்

இ.எம் தயாரிக்கும் முறை !

20 லிட்டர் கொள்ளளவுள்ள மூடியுள்ள டிரம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், 17 லிட்டர் குளோரின் கலக்காத தண்ணீர் (போர்வெல் தண்ணீர்) ஊற்றிக்கொள்ள வேண்டும். 2 கிலோ கருப்பட்டியைக் காய்ச்சி பாகு பதத்துக்கு மாற்றி, தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு லிட்டர் இ.எம் கரைசலை (முதல்முறை தயாரிக்கும் போது, வெளியில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். அடுத்த முறை நாம் தயாரிக்கும், இ.எம் கரைசலையே பயன்படுத்திக் கொள்ளலாம்) கலந்து.. மூடியால் மூடி, வெயில் படாத […]

July 23, 2016 Editor
தக்காளி பயிருக்கு சோதனை அவசியம் செய்திகள்

தக்காளி பயிருக்கு சோதனை அவசியம்

தக்காளி ஊசிப்புழு மேலாண்மையில் இனக்கவர்ச்சிப்பொறிகளைப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இனக்கவர்ச்சிப்பொறிகள் ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான ஆண் அந்துப்பூச்சிகளைக் கூட கவர்ந்து கொன்று விடுகின்றன. இருப்பினும், இதனால் தக்காளியில் ஏற்படும் ஊசிப்புழுக்களின் சேதாரம் குறைவதில்லை. ஒருவேளை, இனக்கவர்ச்சிப்பொறிகளில் கவரப்படும் ஆண் அந்துப்பூச்சிகள் ஏற்கனவே கலவியை முடித்தவையாகக் கூட இருக்கலாம். அதனால்தான் சேதம் குறைவதில்லை. ஆனாலும், இன்னொன்றையும் இந்த இடத்தில் கருத்தில் கொள்ளவேண்டும், இனக்கவர்ச்சிப் பொறிகளின் செயல்திறன், அங்குள்ள தட்பவெப்பநிலை, பருவகாலம், பயிரிடும் முறைகள் ஆகியவற்றைப் […]

July 20, 2016 Editor
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை ! இயற்கை உரம்

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !

10 கிலோ பசுஞ்சாணம், 10 லிட்டர் நாட்டு பசு மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ பயறு மாவு (கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பயறு) ஆகியவற்றில் ஏதாவதொன்றின் மாவு, ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை, சாகுபடி செய்துவரும் வயலில் உள்ள மண் கைப்பிடி அளவு ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இட்டு.. 200 லிட்டர் தண்ணீர் ஊற்றி இரண்டு நாட்கள் நிழலில் வைக்க வேண்டும். காலை மதியம் மற்றும் மாலை என மூன்று வேலையும், கடிகாரச் சுற்றுப்படி […]

July 16, 2016 Editor
மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை ! இயற்கை உரம்

மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை !

ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் 5 கிலோ மீன் கழிவுவைப் போட்டு அதனுடன் 5 கிலோ நாட்டுச் சர்க்கரையை இட்டு.. காற்றுப் புகாதவாறு இறுக்கமான மூடி நிழலில், 45 நாட்கள் வைக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தால், பழ வாசனை அடிக்கும். நாட்டுச்சர்க்கரையும், மீன்கழிவும் கலந்து பிசுபிசுப்பான திரவமாக மாறியிருக்கும். இதை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற கணக்கில் கலந்து பயிர்களுக்கு தெளிக்க வேண்டும். நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 16, 2016 Editor
அக்னி அஸ்திரம் தயாரிக்கும் முறை ! இயற்கை உரம்

அக்னி அஸ்திரம் தயாரிக்கும் முறை !

தேவையானவை: சோற்றுக்கற்றாழை – 3 கிலோ பிரண்டை – 3 கிலோ வேப்பிலை – 2 கிலோ பப்பாளி இலை – 2 கிலோ நொச்சி இலை – 2 கிலோ ஆமணக்கு இலை – 2 கிலோ ஊமத்தை இலை – 2 கிலோ எருக்கு இலை – 2 கிலோ ஆவாரை இலை – 2 கிலோ சுண்டைக்காய்ச் செடி இலை – 2 கிலோ ஆடு தீண்டா பாலை இலை – 2 […]

July 15, 2016 Editor
இலவச பயிற்சி வகுப்பு: மானாவாரி பயிர் சாகுபடி ! செய்திகள்

இலவச பயிற்சி வகுப்பு: மானாவாரி பயிர் சாகுபடி !

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, புலிப்பாறைப்பட்டியில் தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பு மற்றும் புலிப்பாறைப்பட்டி இளைஞர்கள் இணைந்து வருகிற ஜூலை 23-ம் தேதி ‘மானாவாரி பயிர்களுக்கான விதைப்பு முதல் மதிப்புக்கூட்டல் வரை அனுபவ விவசாயிகளின் பயிற்சி’, ‘இயற்கை உரங்கள் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்னோடி இயற்கை விவசாயிகளும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும். தொடர்புக்கு, செல்போன் : 94435-75431 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 13, 2016 Editor
சவுக்கு சாகுபடி செய்யும் முறை மரங்கள்

சவுக்கு சாகுபடி செய்யும் முறை

சவுக்கு சாகுபடி செய்யும் முறை எப்படி என்று பார்ப்போம். சவுக்கு சாகுபடிக்காக தேர்வு செய்யும் நிலத்தை ஐந்து மாதங்கள் காயப்போட வேண்டும். பிறகு ஏக்கருக்கு இரண்டு டன் அளவில் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி, எட்டு சால் உழவு செய்ய வேண்டும். பிறகு, 3 அடி இடைவெளியில் இரண்டு அங்குல அளவுக்கு குழி எடுத்து சவுக்குக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 4 ஆயிரத்து 800 கன்றுகள் வரை நட முடியும். நடவு செய்து ஓர் ஆண்டு […]

July 13, 2016 Editor
ஆடிப்பட்டத்துக்கு குறுகியகால ரகமா..? நீண்டகால ரகமா..? இயற்கை விவசாயம்

ஆடிப்பட்டத்துக்கு குறுகியகால ரகமா..? நீண்டகால ரகமா..?

தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 7 மாதங்கள் மழைப்பொழிவுள்ள மாதங்கள். தென்மேற்குப் பருவமழை காலத்தில் வரும் ஆடிப்பட்டத்தில் குறுகிய கால ரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்து நடவு செய்வது நல்லது. தற்போது ஆண்டு முழுவதுமே அனைத்து வகையான பயிர்களும் விதைக்கப்பட்டாலும்.. அந்தந்தப் பருவத்துக்கான தனித்தன்மை உண்டு. ஆடிப்பட்டத்தின்போது, சுமாரான மழையே கிடைப்பதால், குறுகியகால ரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்வது நல்லது. நெல்லில் 100-110 நாட்கள் வயதுடைய ரகங்களைத் தேர்வு செய்யலாம். சோளம், நிலக்கடலை, […]

July 11, 2016 Editor
பயிர்களுக்கான உழவுமுறை ! இயற்கை விவசாயம்

பயிர்களுக்கான உழவுமுறை !

கேழ்வரகு : இரண்டு அல்லது மூன்று முறை இயந்திரக் கலப்பையால் உழ வேண்டும். நாட்டு கலப்பை என்றால், ஐந்து முறை உழ வேண்டும். மக்காச்சோளம் : சட்டிக் கலப்பையால் ஒரு முறை உழுது, கொத்துக்கலப்பையால் இரண்டு முறை உழ வேண்டும். நிலக்கடலை : கொத்துக் கலப்பையால் இரண்டு அல்லது மூன்று முறை உழ வேண்டும். நாட்டுக் கலப்பை என்றால், மூன்று அல்லது 4 முறை உழ வேண்டும். பொதுவாக, நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற பருமனான விதைகளுக்கு குறைந்த […]

July 11, 2016 Editor
செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை ! இயற்கை விவசாயம்

செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை !

25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் இட வேண்டும். இதன் மீது கொஞ்சம் மண்ணைத் தள்ளி, ஒன்றரை அங்குலம் ஆழத்தில் ஒரு விதை ஊன்ற வேண்டும். […]

July 9, 2016 Editor