32°C
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

விவசாய கட்டுரைகள்

நெற்பயிருக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தும் முறை இயற்கை உரம்

நெற்பயிருக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தும் முறை

10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்கிற விதத்தில் கலந்து விதைநேர்த்தி, நாற்றங்கால், நடவு, என ஒவ்வொரு பருவத்திலும் மற்ற இயற்கை இடுபொருட்களுடன் சேர்த்து 15 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா தெளித்து வரவேண்டும். கதிர் பிடித்தவுடன், பஞ்சகவ்யா தெளிக்கக் கூடாது. அப்படி தெளித்தால், சன்ன ரக நெல், மோட்டா ரக நெல்லாக கடினமாகிவிடும். பஞ்சகவ்யா பயன்படுத்துவதால், அதிக தூர்கள், அதிக கிளைகள், அதிக கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரிலும் அதிக நெல்மணிகள் பிடிப்பதுடன் நோய்த்தாக்குதலும் […]

July 8, 2016 Editor
நிலக்கடலை விதைகளை எவ்வாறு தேர்வு செய்வது..? இயற்கை விவசாயம்

நிலக்கடலை விதைகளை எவ்வாறு தேர்வு செய்வது..?

வெளிமாநிலங்களிலிருந்து பல நிலக்கடலை ரகங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தின் பாரம்பர்ய நிலக்கடலை ரகங்கள், 125 நாட்கள் 135 நாட்கள் கொண்ட கொடி, அடர்கொடி வகைகளைச் சேர்ந்தவை. தற்சமயம் நிலவி வரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக, 105 நாட்களில் வளரக்கூடிய கொத்து, அடர்கொடி ஆராய்ச்சி ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் கோ-6, கோ-7, டி.எம்.வி-13 (சிவப்பு நிற விதை), வி.ஆர்.ஐ-7 ஆகிய ரகங்கள் இருக்கின்றன. இவை தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற ரகங்கள். மானாவாரி, இறவை இரண்டிலும் பயிர் […]

July 6, 2016 Editor
முட்டை , வெங்காயக் கரைசல் தயாரிப்பு முறை! இயற்கை உரம்

முட்டை , வெங்காயக் கரைசல் தயாரிப்பு முறை!

தோலுரித்த ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை, ஓர் இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெங்காயத்தை எடுத்து அம்மியில் வைத்து நசுக்கி.. லேசான சணல் சாக்கு அல்லது வெள்ளைத்துணியில் வைத்து நன்கு முறுக்கினால், சாறு கிடைக்கும். 10 முட்டைகளை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் பிரித்து, அதில் வெங்காயச் சாற்றைச் சேர்த்துக் கலக்கினால்… கரைசல் தயார். இது ஒரு ஏக்கருக்கு போதுமானதாக இருக்கும். இதை ஒரு டேங்குக்கு (10 லிட்டர்) 50 மில்லி […]

July 5, 2016 Editor
மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் ! இயற்கை உரம்

மழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் !

மழைக்காலம், பூச்சிகளின் பெருக்கத்துக்கு ஏற்ற உகந்த சூழ்நிலையாக உள்ளது. இந்நிலையில் நெல்லில் இலைச்சுருட்டுப்புழு, இளம் நெற்பயிர், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களில், இலைகளில் உள்பக்கமாகச் சுருட்டி, உள்ளிருந்து பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். இதனால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் தண்டுத் துளைப்பான் தாக்கப்பட்ட பயிர்களில் தண்டுப் பகுதி பல இடங்களில் காய்ந்து காணப்படும். ஒற்றை நாற்று நடவு செய்த நிலங்களில், போதுமான அளவுக்குக் காற்று, சூரிய ஒளி கிடைப்பதால், புகையான் தாக்குதல் குறைவாகவே இருக்கும். ஆனால், […]

July 4, 2016 Editor
பட்டன் ரோஜா சாகுபடி ! இயற்கை விவசாயம்

பட்டன் ரோஜா சாகுபடி !

ஏக்கருக்கு 2,500 செடிகள் ! ”பட்டன் ரோஜா பதியன் (கன்று) ஊன்ற கார்த்திகைப் பட்டம் சிறப்பானது. களியும் மணலும் கலந்த இருமண் பாடு மற்றும் செம்மண் ஆகியவை ஏற்றவை. தேர்வு செய்த சாகுபடி நிலத்தில்.. 3 சால் உழவு ஓட்டி பிறகு, ஏக்கருக்கு 3 டன் மாட்டு எரு இட்டு ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். 8 அடி இடைவெளியில் ஓர் அடி அகலமும் அரையடி உயரமும் கொண்ட நீளமான பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்தியின் […]

July 1, 2016 Editor
எள் சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

எள் சாகுபடி செய்யும் முறை

எள், மணல் கலந்த நிலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும். நவம்பர், டிசம்பர், மார்ச், ஜூன் ஆகிய மாதங்களில் விதைக்கலாம். அனைத்துப் பட்டங்களுக்கும் விதைக்கக்கூடிய எள் ரகங்களும் இருக்கின்றன. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 2 டன் மாட்டு எருவைத் தூவ வேண்டும். பிறகு, 15 நாட்களுக்குள் இரண்டு உழவு ஓட்ட வேண்டும். நிலம் புழுதியான பிறகு, 10 அடிக்கு 8 அடி அளவில் பாத்தி எடுத்து, பாத்திகளில் எள்ளைத் தூவ வேண்டும். ஏக்கருக்கு அரைகிலோ விதை […]

June 30, 2016 Editor
கோடை உழவுதான் மகசூலுக்கு அடிப்படை ! இயற்கை விவசாயம்

கோடை உழவுதான் மகசூலுக்கு அடிப்படை !

இயற்கை முறையில் சிறுதானியங்களை சாகுபடி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்… “சித்திரை மாத ஆரம்பத்தில் இரண்டு நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, ஒரு வாரம் நிலத்தைக் காயவிட வேண்டும். பிறகு கோடை உழவு அடிக்க வேண்டும். கோடை உழவு அடிப்பதால் மண் இறுக்கம் நீங்கி பொலபொலப்பாக மாறி விடும். இதனால், மழை பெய்யும்போது நிலத்தில் விழும் மழை நீர் ஆவியாகாமல் தடுக்கப்படுவதோடு மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும். மண் இறுகலாக இருந்தால் மகசூல் குறையும். உளுந்து வைகாசி […]

June 29, 2016 Editor
உளுந்து சாகுபடி இயற்கை விவசாயம்

உளுந்து சாகுபடி

ஏக்கருக்கு 5 கிலோ விதை “உளுந்தை அனைத்துப் பட்டத்திலும் விதைக்கலாம். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். 200 கிலோ சலித்த சாணத்தூளுடன், 20 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைச் சேர்த்து பிசைந்து ஒரு நாள் முழுவதும் நிழலில் காய வைத்து அதை நிலத்தில் கொட்டிக் கலைத்து ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு, வசதிக்கேற்றவாறு பாத்திகள், வாய்க்கால்கள் அமைத்து, 5 கிலோ உளுந்தை உழவு ஓட்டிக்கொண்டே விதைக்க வேண்டும். […]

June 28, 2016 Editor
வீட்டுத்தோட்டத்தைக் காக்கும், பூண்டுக் கரைசல் ! இயற்கை உரம்

வீட்டுத்தோட்டத்தைக் காக்கும், பூண்டுக் கரைசல் !

கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் ஊறவைத்து, நன்றாக கொதிக்க வைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி […]

June 24, 2016 Editor
மணத்தக்காளி சாகுபடி இயற்கை விவசாயம்

மணத்தக்காளி சாகுபடி

மணத்தக்காளி விதைக்காக அலையத் தேவையில்லை. சில செடிகளை அறுக்காமல் விட்டால், காய் பிடித்து, பழம் வைக்கும். அந்தப் பழங்களைப் பறித்து, விதைகளை எடுத்து, சாம்பலில் புரட்டி காய வைத்து, பயன்படுத்தலாம். மணத்தக்காளி, களர்நிலம் தவிர மற்ற அனைத்து வகை மண்ணிலும் வளரும். செம்மண் மற்றும் மணல் கலந்த செம்மண் நிலங்களில் சிறப்பாக வளரும். சாகுபடிக்கு தனியாக பட்டம் இல்லை. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். நிலத்தை புழுதியாக உழவு செய்து, 8 அடிக்கு 8 அடி இடைவெளியில் […]

June 23, 2016 Editor

தனிப்பயனாக்கு

⭐ தீம்

இருண்ட தீமுக்கு மாற்றவும்

📐 தளவமைப்பு

முழு அகலம் அல்லது பெட்டி வடிவம்

🎨 முதன்மை நிறம்

🔤 எழுத்து அளவு

👁️ பகுதிகளை மறை/காட்டு

📊 விட்ஜெட் அமைப்புகள்

மேலே உள்ள விலைப் பெட்டியின் அகலம்
விலைப் பெட்டி மாறும் நேரம் (வினாடிகள்)