32°C

இயற்கை உரம்

இயற்கை உரம்

உரம் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க வேண்டிய வழிமுறைகள் இயற்கை உரம்

உரம் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க வேண்டிய வழிமுறைகள்

இன்றைய சூழ்நிலையில் உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பது என்பது விவசாயத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். பல்வேறு காரணியால் நாம் இடும் உரமானது வீணாகுகின்றன. எனவே கீழ்கண்ட வழிமுறைகளைக் கொண்டு உரத்தினுடைய பயன்பாட்டு திறனை நம்மால் அதிகரிக்க இயலும். அவை,  தற்போதைய நிலையில் மண் ஆய்வு செய்வது என்பது மிக முக்கியமானது. மண்ணின் ஆய்வு முடிவைக் கொண்டு பயிர்களுக்கு உரமிடுதல் மிகச்சிறந்தது.  மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது கார மண்ணுக்கு அமில […]

June 16, 2020 Editor
திறன்மிக்க  நுண்ணுயிரிகள் இயற்கை உரம்

திறன்மிக்க  நுண்ணுயிரிகள்

மண்ணிற்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் கலவையே திறன்மிக்க நுண்ணுயிரிகள் (Effective Microorganism) என்றழைக்கப்படுகிறது . இதனை சுருக்கமாக ஈ.எம் (EM) எனவும் சொல்கிறார்கள். நன்மை தரும் நுண்ணுயிரிகளின் கலவை தான் இந்த ஈ.எம். 1982 இல் ஜப்பான் ஒகினாவா ரியுக்யஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். டெருவோ ஹிகா என்பவர் இதனை கண்டுபிடித்தார். இக்கலவையானது விவசாயம், கால்நடை, சுற்றுச்சூழல், மருத்துவம், நீர் நிலைச் சுத்திகரிப்பு போன்ற அனைத்து துறைகளிலும் பயன்படுத்தபடுகிறது. இதனை வணிகமுத்திரையிட்ட தயாரிப்பாக  ஈ.எம்-1 நுண்ணுயிரி உருகற்மிகைப்பி […]

May 30, 2020 Editor
இயற்கை உரம் (பகுதி – 2)  பருமனனான அங்ககப் பொருட்கள் இயற்கை உரம்

இயற்கை உரம் (பகுதி – 2) பருமனனான அங்ககப் பொருட்கள்

பருமனனான அங்ககப் பொருட்கள் குறைவான சதவீதம் கொண்ட ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது மற்றும் இதனை அதிக அளவில் பயிர்களுக்கு இட வேண்டும். பண்ணை உரம், மட்கிய உரம், பசுந்தாள் உரங்கள் பருமனனான அங்ககப் பொருட்களின் ஆதாரங்கள் ஆகும். இதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்: நுண் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய தாவர ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது. மண் இயல் நிலைக் குணங்களான மண் அமைப்பு, நீர் பிடிப்புக் கொள்ளளவு மற்றும் பல குணங்களை மேம்படுத்துகிறது. சிதைவுறுதலின் போது கரியமிலவாயுவை வெளிவிடுவதால் கரியமில […]

May 29, 2020 Editor
இயற்கை உரம் – நஞ்சில்லா உரம் இயற்கை உரம்

இயற்கை உரம் – நஞ்சில்லா உரம்

இயற்கை உரம் என்பது தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது. சிதைவுறுதலுக்கு பிறகு ஊட்டச்சத்துக்கள் வெளிவருகின்றன. பயிரின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக விலங்குகள், மனிதன் மற்றும் காய்கறிகளின் கழிவுகளைப் பயன்படுத்துதல் மற்றும் சேகரித்தல் என்பது வேளாண்மையில் தொன்று தொட்டு வழக்கத்தில் இருக்கிறது. அங்கக படிவங்களிலுள்ள தாவர ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கிய விலங்குகள், தாவரம், மற்றும் மனிதக் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட அங்ககப் பொருள்களே இயற்கை உரம் அல்லது எருவாகும், இயற்கையாக இருக்கக் கூடிய அல்லது […]

May 21, 2020 Editor
உயிர் உரம் – பி பி எப் எம் (PPFM)- நுண்ணுயிர் உரம் இயற்கை உரம்

உயிர் உரம் – பி பி எப் எம் (PPFM)- நுண்ணுயிர் உரம்

பி பி எப் எம் (PPFM) (மெத்தைலோபாக்டரியா) என்பது காற்று வாழ் உயிரி ஆகும். இயல்பாகவே மெத்தைலோபாக்டரியா ஏராளமான இலைகளின் மேற்புறத்தில் காணப்படும். உலக அளவில் பல்வேறு பகுதிகளில் நீர் பற்றாக்குறையினால் பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் சராசரியாக 62% விளைநிலங்கள் பருவமழையை சார்ந்து இருக்கிறது. எனவே பருவமழை பொய்த்தல் அல்லது முன்பே பருவமழை விடைபெற்றல் போன்ற பல்வேறு பருவ காரணிகளால் பயிர்கள் வறட்சியை எதிர்கொள்கிறது.  அவ்வாறு எதிர்கொள்ளும் பயிரினை காக்க இந்த திரவ நுண்ணுயிர் உரமானது […]

May 19, 2020 Editor
எளிய முறையில் ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது? இயற்கை உரம்

எளிய முறையில் ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?

ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது? தண்ணீர் 20 லிட்டர், பசு மாடு சாணம் 5 கிலோ, நுண்ணுயிர் அதிகமுள்ள வளமான மண், நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர் – 5 லிட்டர், ஒரு கைப்பிடி அளவு மண், சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் ஆகிய இடுபொருளை எடுத்து சாணத்தை மட்டும் ஒரு சாக்கு அல்லது துணியில் போட்டு ஒரு குச்சியில் கட்டி நீரில் மிதக்கவிட வேண்டும். பிறகு சாக்கிலுள்ள மாட்டுச்சாணத்தைப் பிழிந்து சாற்றை மட்டும் கலவையில் சேர்க்க வேண்டும். கழிவை […]

January 23, 2020 Editor
பசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை இயற்கை உரம்

பசு சாணத்தின் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

பசுவின் சாணத்தில் 24 ஊட்டச்சத்துக்கள் (மனிதர்கள் உண்ணக்கூடியது அல்ல), அடங்கியுள்ளன , அதில் நைட்ரஜன், பொட்டாசியம், சல்பர், இரும்புசத்து, கோபால்ட் , மெக்னீசியம், காப்பர் போன்றவை உள்ளது , குறிப்பாக இந்திய ரக பசுக்களில் கால்சியம், பாஸ்பரஸ் , துத்தநாகம் போன்ற சத்துக்களும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன https://bioresourcesbioprocessing.springeropen.com/articles/10.1186/s40643-016-0105-9 சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற அதிகமான பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் புழுக்கள் உள்ளன இவற்றின் நொதிக்கும் தன்மையால் இயற்கை உரமாக மாறுகின்றது. இதில் உயிர்வளி(BioGas) மூலம் மீத்தேன் வாயு […]

January 13, 2020 Editor
விவசாயம் செய்வது எப்படி? – Part 1 இயற்கை உரம்

விவசாயம் செய்வது எப்படி? – Part 1

அனைவருக்குமே இன்று வரும் சந்தேகம் விவசாயம் செய்வது எப்படி? விவசாயம் செய்ய வெகு எளிதான வழியில் நாம் ஆரம்பிப்போமா? முதலில் சிறிய அளவு வெந்தயத்தினை வெந்தயக்கீரையை ஆரம்பிப்போமா? 1.ஒரு கைப்படி அளவு நீரில் கைப்பிடி அளவு வெந்தயத்தினை 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவில் அறை வெப்பநிலையில் ஊற வைக்கவும். மண்ணே இல்லாமல் இந்தக்கீரைசெய்ய முடியும் 2. தொடர்ந்து அந்த விதைகளை தண்ணீர் தெளித்து தினமும் குறைந்தது 2 முதல் 3 முறை வரை […]

November 8, 2019 Editor
மாதுளை பழத்துளைப்பான் நோய் மேலாண்மை இயற்கை உரம்

மாதுளை பழத்துளைப்பான் நோய் மேலாண்மை

Pomegranate fruit borer Conogethes punctiferalis Lepidoptera பூச்சி தாக்கிய அறிகுறிகள்: இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும். பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும். முதிராமலேயே வாடி, உதிர்ந்துவிடும். பூச்சியின் விபரம்: புழு : இளம் பச்சை நிறத்தில், இளஞ்சிவப்பு புள்ளியுடன், நுண்ணிய ரோமங்களுடன், அடர் நிற தலை மற்றும் முன் மார்பு திட்டுடன் காணப்படும். பூச்சி : மஞ்சள் நிறத்தில், கருப்பு நிற புள்ளிகள் இறக்கை, மற்றும் உடல் முழுவதும் காணப்படும். மேலாண்மை: சேதமடைந்த பழங்களை சேகரித்து, […]

May 22, 2019 senthamil
பசுந்தாள் உரமாக பயன்படும் காலபோ தாவரம் இயற்கை உரம்

பசுந்தாள் உரமாக பயன்படும் காலபோ தாவரம்

குறைந்த நாட்களில் வளர்ந்து பூமியை கவர்ந்து கொள்ளும் இத்தாவரமானது பருப்புவகை தாவரங்களுள் ஒன்றாகும். மேலும் இது விளை நிலங்களில் சுயமாக வளரும் தன்மை கொண்ட தாவரம் ஆகும். மண் அரிப்பை தடுப்பதற்கும் மிளகு, தென்னை போன்ற தோட்டங்களில் வளரும் அருவருப்பான களைகளை மேலாண்மை செய்யவும் உள்ள விலை மலிவான மற்றும் பயனுள்ள தாவரம் இதுவாகும். பல்லாண்டு வாழும் இத்தாவரமானது கொடிவகையைச் சார்ந்தது. கால்நடைகள் விரும்பி உண்பதில்லை. 16 வாரங்களில் 2.5 மீட்டர் நீளம் வரை வளரும் தன்மை […]

October 6, 2018 senthamil