32°C

செய்திகள்

முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவ மழை செய்திகள்

முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவ மழை

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தென்மேற்கு பருவ மழை, அந்தமான் நிகோபார் தீவுகளில் துவங்கி விட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு, வடகிழக்கு என இரண்டு பருவ மழைக் காலங்கள் உண்டு. இவற்றில், தென்மேற்கு பருவ மழை தான், நாட்டின் ஒட்டுமொத்த நீராதாரங்களை நிரப்பும் மழையாக கருதப்படுகிறது. தமிழகத்தில், இந்த மழை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் மட்டுமே பெய்யும். ஆனால், கேரளா மற்றும் கர்நாடகாவில், தென்மேற்கு பருவ மழை […]

May 20, 2019 Editor
நாணயமான விவசாயிகளுக்கு  மகிழ்ச்சியான செய்தி! செய்திகள்

நாணயமான விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

பயிர் கடன்களுக்கான மாத தவணையை, கெடு தவறாமல் செலுத்துபவர்களுக்கு, வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை, குறுகிய கால பயிர் கடன்களை, மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த கடன் தொகைக்கான மாத தவணையை, கெடுவிற்குள் தவறாமல் செலுத்துபவர்களுக்கு, வட்டியில், 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதையடுத்து, 4 சதவீத வட்டியை, விவசாயிகள் செலுத்தி […]

December 29, 2018 Editor
வடகிழக்கு பருவமழை பற்றாக்குறை!? செய்திகள்

வடகிழக்கு பருவமழை பற்றாக்குறை!?

வடகிழக்கு பருவமழை சீசன் இன்னும், இரு நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், மொத்தம் 437 மி.மீ., மழை பொழியும்; ஆனால், நேற்று வரை, 335 மி.மீ., மட்டுமே மழை பொழிந்துள்ளது.வழக்கமாக பெய்யும் மழையை காட்டிலும், 23 சதவீதம் குறைவான மழையே பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே, முந்தைய ஆண்டுகளின் இயல்பு மழையை காட்டிலும் கூடுதல் மழை பொழிந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இயல்பு மழையே இந்தாண்டும் பெய்துள்ளது. மற்ற, 30 மாவட்டங்களிலும், […]

December 29, 2018 Editor
நெல்’ ஜெயராமன் காலமானார்! செய்திகள்

நெல்’ ஜெயராமன் காலமானார்!

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றிவந்தவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன். நம்மாழ்வாரின் இளைஞர் குழுவில் பயிற்சிபெற்ற ஜெயராமன், அவரின் வேண்டுகோளுக்கிணங்க பாரம்பர்ய நெல் ரக உற்பத்தியைப் பெருக்கிவந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை மீட்டிருக்கும் நெல் ஜெயராமன், ஒவ்வொர் ஆண்டும் திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை 2006-ம் ஆண்டு முதல் நடத்திவந்தார். இரண்டு ஆண்டுகளாகத் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுவந்த இவர், கடந்த சில […]

December 6, 2018 Editor
பெண்ணையாறு ஆற்றங்கரையோர விவசாயம் கேள்விக்குறி? செய்திகள்

பெண்ணையாறு ஆற்றங்கரையோர விவசாயம் கேள்விக்குறி?

கடலூர் மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறுகளில் இதுவரை தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. இதனால், ஆற்றங்கரையோர கிராமங்களில் விவசாயம் கேள்விக் குறியாகி வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை மிக தாமதமாக அக்டோபர் கடைசியில் துவங்கியது. ஆண்டின் சராசரி மழையளவு 1206 மி.மீ., இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை சராசரி அளவை விட கூடுதலாக 1449 மி.மீ., மழை பெய்துள்ளது. நடப்பு ஆண்டு அக்டோபரில் இயல்பாக […]

November 19, 2018 Editor
அக்ரிசக்தி – புதிய செயலி இன்று சோதனை வெளீயீடு செய்திகள்

அக்ரிசக்தி – புதிய செயலி இன்று சோதனை வெளீயீடு

வணக்கம் அக்ரிசக்தியின் விவசாயம் தமிழ் செயலியின் புதிய சோதனை பதிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமான செய்திகளை முகப்புப் பக்கத்திலும் பார்வையிடவும், ஏனையை செய்திகளை விரிவாக பார்வையிடவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சோதனை பதிப்பில் உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் உடனுக்குடன் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். செயலியினை புதியதாக நிறுவிட https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil உங்கள் ஆலோசனைகளை  editor.vivasayam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும் நன்றி!

November 8, 2018 Editor
பான் கார்டு தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை..! செய்திகள்

பான் கார்டு தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை..!

இந்தியாவில் அனைத்து விற்பனை மற்றும் மானியத்திற்கும் மத்திய அரசு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளைக் கோரி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அதிகளவிலான வெறுப்பு கிளம்பியுள்ளது. இதனை உணர்ந்த மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு 50,000 ரூபாய்க்கு அதிகமான வாங்கும் தங்க நகைக்குக் காட்டாயப் பான் கார்டு விதிமுறையை விலக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஒரு நாளுக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலான விற்பனைக்குப் பான் கார்டு அல்லது […]

November 8, 2018 Editor
ஏலக்காய் முதல் காய்கறிகள் வரை விற்பனை: தமிழக அரசு புதிய முயற்சி செய்திகள்

ஏலக்காய் முதல் காய்கறிகள் வரை விற்பனை: தமிழக அரசு புதிய முயற்சி

தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய் முதல் காய்கறிகள் வரையிலான பொருள்கள் சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கான விற்பனை தொடக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் தமிழக அரசின் புதிய முயற்சியைத் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை, விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப் பொருள்களை சந்தைப்படுத்த ஒரு புதிய முயற்சியாக சமையலுக்கு நறுமணமூட்டும் பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகள், உலர் பழங்கள் பாக்கெட்டுகள் […]

November 6, 2018 Editor
விவசாயம் செய்ய இந்தியர்களை அழைக்கும் ஆப்கானிஸ்தான்! செய்திகள்

விவசாயம் செய்ய இந்தியர்களை அழைக்கும் ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் விவசாயத் துறையில் முதலீடு செய்ய இந்தியத் தொழிலபதிர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், அந்த நாட்டின் விவசாயத்துறை துணை அமைச்சர் நஸீர் அகமது. கால்நடை வளர்ப்பும் விவசாயமும்தான் ஆப்கானிஸ்தான் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இத்துறையில் ஏற்றுமதியை அதிகரிப்பது, அந்த நாட்டுக்கு வலு சேர்க்கும். அதற்காக இந்தியத் தொழிலதிபர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்க ஆப்கானிஸ்தான் தயாராக இருக்கிறது. ஆப்பிள், திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களுக்கும் உலர் பழங்களுக்கும் ஆப்கானிஸ்தான் உலகப் புகழ்பெற்றது. அவற்றுக்கு உலகம் முழுவதும் தேவை அதிகமாக […]

October 5, 2018 Editor
புழுங்கல் அரிசியின் பயன்பாடுகள்   செய்திகள்

புழுங்கல் அரிசியின் பயன்பாடுகள்  

செய்யும் முறை: முதலில் நெல்லை ஊற வைத்து அதனை அப்படியே வேக வைத்து பிறகு பதமாக  காயவைத்து  அரைக்கப்படுகிறது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து அப்படியே அரிசியில் தக்க வைத்துக் கொள்கிறது. பயன்பாடுகள் அரிசி உணவில் உள்ள சக்தியானது உடனடியாக ரத்ததில் கலந்து செரிமானம் எளிதில் செய்கின்றன. புழுங்கல் அரிசி குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்டதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது. புழுங்கல் அரிசியில் தயாமின் எனும் […]

September 25, 2018 editor news