32°C

செய்திகள்

400 மாடுகள் வளர்க்கும் முதியவர்..! கால்நடை

400 மாடுகள் வளர்க்கும் முதியவர்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் அருகே ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் ஒருவர் தன் வீட்டில் 400 நாட்டு மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தமலை (60). கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவர் தந்தை காலத்தில் அந்த ஊர் கிராம கணக்குப்பிள்ளையாக இருந்த ஒருவர், நோய்வாய்ப்பட்ட கன்றுக்குட்டி ஒன்றை தன்னால் பராமரிக்க முடியாமல் இவர்கள் வீட்டுக்கு தானமாக கொடுத்துள்ளார். […]

March 7, 2017 Editor
இ.எம். பயன்பாடுகள்..! இயற்கை உரம்

இ.எம். பயன்பாடுகள்..!

சாக்கடைகள், துர்நாற்றம் வீசும் இடங்கள், கழிவறைகள், கழிவறைத்தொட்டிகள், சமயலறை என அனைத்து இடங்களிலும் இ.எம் திரவத்தைப் பயன்படுத்தலாம். வேளாண்மை, மனிதர்கள், கால்நடைகள், திடக்கழிவு மேலாண்மை, கழிநீர்ச் சுத்திகரிப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, சுகாதார மேலாண்மை, சுற்றுச்சூழல் சமன்செய்தல், மாசடைந்த மண், நீரைச் சீர்படுத்துதல் ஆகிய பல்வேறு வகையான பயன்பாட்டுக்கு. இ.எம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அருமையை உணர்ந்துகொண்ட பல நாடுகள், மாசடைந்த நீர்நிலைகளை மீட்டெடுக்க இ.எம் திரவத்தைப் பயன்படுத்துகின்றன.. நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

February 28, 2017 Editor
”குறையும் மேய்ச்சல் நிலம்” இறக்குமதி செய்யும் ஆபத்தில் இந்தியா..! செய்திகள்

”குறையும் மேய்ச்சல் நிலம்” இறக்குமதி செய்யும் ஆபத்தில் இந்தியா..!

இந்தியா முழுவதும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலப்பரப்பு குறைந்து வருவதால், நாட்டிலுள்ள 299 மில்லியன் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் பால் தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் மறுபுறம் விளைச்சில் நிலம் குறைந்துவருகிறது. இதே நிலை நீடித்தால்,இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்தியா பாலை இறக்குமதி செய்யக் கூடிய சூழல் ஏற்படலாம். இது பால் தேவைக்கு மட்டுமல்ல , எதிர்காலத்தில் எல்லா தேவைகளுக்கும் இறக்குமதியை நாடியே இருக்கவேண்டிய கட்டாயமும் இருக்கலாம். நம் நாட்டில் கடந்த சில […]

February 25, 2017 Editor
ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை..! கால்நடை

ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை..!

கடுமையான வறட்சிக் காலத்தில் கால்நடைகளுக்குக் கொடுப்பதற்காகப் பதப்படுத்தி வைக்கப்படும் தீவனம்தான் ஊறுகாய்ப் புல், தீவனச்சோளம், கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6, கினியா புல், கொழுக்கட்டைப் புல், தீவனத்தட்டை, குதிரை மசால், வேலிமசால், முயல்மசால் ஆகியவற்றில் கிடைப்பவற்றை ஊறுகாய்ப் புல்லாகப் பதப்படுத்தி வைக்கலாம். 6X6 அடி தூரம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக்கொள்ள வேண்டும். குழி மேடான இடத்தில் இருக்க வேண்டும். குழிக்குள் கால் அடி உயரத்துக்கு மணலைப் பரப்பி, அதன் […]

February 23, 2017 Editor
குறைந்த விலையில் மூலிகை நாற்றுகள் கிடைக்கும்..! செய்திகள்

குறைந்த விலையில் மூலிகை நாற்றுகள் கிடைக்கும்..!

சேலம் மாவட்டம், மேட்டூரில் மத்திய அரசின் சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சி மையம் மற்றும் ஆராய்ச்சி தோட்டம் உள்ளது. அங்கு ஐந்நூறு வகையான பாரம்பர்ய மருத்துவ மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மூலிகைகள் குறித்த ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. இம்மையத்தின் மூலமாக, மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வீட்டுத் தொட்டிகளில் வளர்க்கக்கூடிய துளசி, கற்பூரவல்லி, நிலவேம்பு, தூதுவளை, சித்தரத்தை, திப்பிலி, திருநீற்றுப்பச்சிலை.. போன்ற முப்பது வகையான மூலிகை நாற்றுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு, […]

February 22, 2017 Editor
மதிப்புக் கூட்டப்பட்ட வைக்கோல் கால்நடை

மதிப்புக் கூட்டப்பட்ட வைக்கோல்

உலர் தீவனத்தில் முதன்மையானதாக இருப்பது வைக்கோல். வைக்கோலை மதிப்புக்கூட்டிக் கொடுத்தால் முழுமையான பலன் கிடைக்கும். 10 கிலோ கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் பை முழுவதும் வைக்கோலால் நிரப்ப வேண்டும். ஒரு கிலோ கல் உப்பை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கோல்மீது கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிக்க வேண்டும். அடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ வெல்லத்தைக் கரைத்துத் தெளித்துப் பிளாஸ்டிக் பையை இறுக்கமாகக் கட்டி, நிழலில் 12 நாட்கள் வைத்து, பிறகு மாடுகளுக்குக் கொடுக்கலாம். இப்படி […]

February 22, 2017 Editor
வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..! கால்நடை

வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..!

”சவுண்டல் தானாகவே பரவக்கூடிய பயிர். ஒரு கன்றை நட்டால் போதும். ஒரே ஆண்டில் நன்கு வளர்ந்துவிடும். விதைகள் விழுந்து மிக வேகமாகப் பரவிவிடும். வேலிமசாலில் 24 சதவிகிதம் வரை புரதச்சத்து உண்டு. ஒருமுறை இதை நட்டால் போதும். வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இதைப் ‘பல்லாண்டுத் தீவனம்’ என்பார்கள். விதைத்த இரண்டே மாதங்களில் மூன்றடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். இதைத் தண்டோடு சேர்த்து நறுக்கிக் கொடுத்தால், ஆடு மாடுகள் விரும்பிச் சாப்பிடும். கோ-1, கோ-2, கோ-3, கோ-4, […]

February 20, 2017 Editor
சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ? செய்திகள்

சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ?

நான்காம் உலகப்போரே இனி தண்ணீரால்தான் என்று உலகநாடுகள் எல்லாம் கணித்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையைப்போக்கத்தான் சொட்டு நீ்ர் மேலாண்மை ஒரு வரப்பிரசதமாக அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் சமீபத்திய ஆய்வு அறிக்கையில் சொட்டுநீர் பாசனத்திற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதும், அதற்காகத்தான் அரசாங்கம் விவசாயி்களுக்கு உதவிட பல்வேறு மானியங்களை அளித்து வருகிறது. சொட்டு நீருக்கும் அரசாங்கம் மேலாண்மை மானியங்களை தெரிந்துகொள்ளலாம். முகவர்கள் கேட்கும் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களைக் கொடுத்துவிட்டு, அவர்கள் கேட்கும் […]

February 15, 2017 Editor
குதிரைவாலி தோற்றமும் பண்பும்..! செய்திகள்

குதிரைவாலி தோற்றமும் பண்பும்..!

இது புஞ்சை, நஞ்சை நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுடைய ஓராண்டு புல்லினப் பயிராகும். இதன் பூர்விகம் தெளிவாகக் கூறப்படாவிட்டாலும், இது வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகள், சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், சாலையோகரங்கள், வெப்பமான மலைப்பகுதிகள், வெப்பம் அதிகமாகக் காணப்படும் உலகின் பல பகுதிகளிலும் வளரக்கூடியது என்பதால் ஐரோப்பா மற்றும் ஆசியாவினுடைய பகுதியைச் சார்ந்ததாகக் கூறப்படுகிறது. உலகளவில் Echinochloa தாவரத்தை உள்ளடக்கிய பிறவியில் (Genus) சுமார் 49 தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் 38 மட்டும் தாவரவியல் […]

February 13, 2017 Editor
கம்பு செடியின் பண்புகள் மற்றும் பயன்கள்.. செய்திகள்

கம்பு செடியின் பண்புகள் மற்றும் பயன்கள்..

வளரியல்பு ஆண்டுதோறும் வளரக்கூடியவை. கழைகள் கழைகள் திடமானது, 3 மீட்டர் உயரமானது, நெருக்கமானது. கணுக்கள் மொசுமொசுப்பானது, மஞ்சரி கீழ்ப்புறத்தில் இருக்கும். இலைகள் இலை உறைகள் தளர்வானது, வழவழப்பானது; ஏறத்தாழ 20-100X2-5 செ.மீ நீளமானது, இரு மேற்பரப்புகள் மற்றும் விளிம்புகள் சுணையுடையது; அடிப்பகுதி இதய வடிவமானது; இலை உறைச்செதில் சுமார் 2-3 மி.மீ நீளமுடையது. மஞ்சரி நேரானது முதல் அகலமானது, நீள்வட்ட வடிவமானது, நெருக்கமானது, ஏறக்குறைய 40-50X1.5-2.5 செ.மீ நீளமுடையது; அச்சு நெருக்கமானது. மொசுமொசுப்பானது, பூவடிச் செதிலின் மேலுறை […]

February 11, 2017 Editor