32°C

விவசாய கட்டுரைகள்

தென்னிந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறையை தடுக்க மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி..! செய்திகள்

தென்னிந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறையை தடுக்க மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி..!

கடந்தாண்டு போதுமான கரும்பு உற்பத்தி இல்லாததால், தென்னிந்தியாவை சேர்ந்த பல சர்க்கரை ஆலைகள் முழு வீச்சில் செயல்படவில்லை. இதனை கருத்தில் கொண்டுள்ள இந்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து சர்க்கரை மூலப் பொருட்களை இறக்குமதி செய்துகொள்ள ஜூலை 30-ஆம் தேதி வரை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் முடங்கிக் கிடக்கும் சர்க்கரை ஆலைகள் முழு வீச்சில் செயல்படுவது மட்டுமின்றி, சர்க்கரை பற்றாக்குறை ஏற்படுவதும் தவிர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள 5 டன் சர்க்கரை […]

April 23, 2017 Editor
விலை மலிவான மிதிவண்டி தண்ணீர் பம்பு..! செய்திகள்

விலை மலிவான மிதிவண்டி தண்ணீர் பம்பு..!

தனது ஊரின் சக விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, அதிக எடையுள்ள தண்ணீர் பம்பை தூக்கிச் செல்ல சிரமப்படுவதை மெக்கானிக்காக பணிபுரியும் கணேஷ் அடிக்கடி பார்ப்பதுண்டு. அந்த தண்ணீர் பம்பின் எடை மட்டும் சுமார் 60 கிலோ இருக்கும். இதனை தூக்கிச் செல்லும் போது பல விவசாயிகளுக்கு காயங்களும் ஏற்படுவதுண்டு. இந்த பம்புகளை வாகனங்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு கொண்டு சென்றால், பயிர்களை சேதமடையும் சூழலும்  இருந்தது. எனவே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் […]

April 23, 2017 Editor
விவசாயத்தினால் இலட்சாதிபதியாகும் ஆட்டோ டிரைவர்! செய்திகள்

விவசாயத்தினால் இலட்சாதிபதியாகும் ஆட்டோ டிரைவர்!

வித்வான் சிங் ஒரு காலத்தில் 50 ஏக்கர்களுக்கு சொந்தக்காரராக இருந்தார். ஆனால் குடும்பச் சூழல் காரணமாக சிறிது, சிறிதாக நிலத்தை விற்ற அவருக்கு இறுதியில் மிஞ்சியது 7.5 ஏக்கர் மட்டுமே. வித்வான் சிங்கிற்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். தனது பிள்ளைகள் தன்னை விட்டு தூரமாக சென்றுவிடக் கூடாது என்பதில் வித்வான் சிங்கின் மனைவி உறுதியாக இருந்ததால், வித்வான் சிங்கின் மகன் அமரால் 11-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. ஒரு நாள் திடீரென வித்வான் சிங்கிற்கு […]

April 23, 2017 Editor
பொறியியலாளராக சம்பாதித்தது 24 லட்சம்..விவசாயியாக சம்பாதிப்பது 2 கோடி..! செய்திகள்

பொறியியலாளராக சம்பாதித்தது 24 லட்சம்..விவசாயியாக சம்பாதிப்பது 2 கோடி..!

சச்சினின் தாத்தா, அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விவசாயத்தை தொழிலாக வாரிக் கொண்டவர். தாத்தாவின் வயல்வெளிகளுக்கு அடிக்கடி செல்வது, சிறு வயதிலிருந்தே சச்சினுக்கு வழக்கமாக இருந்தது. வயல் வெளிக்கு வரும் போதெல்லாம், விவசாயம் குறித்து தாத்தா சொல்லும் கதைகளினால், சிறு வயதிலேயே இயல்பாக சச்சினுக்கு விவசாயம் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனாலும் இந்தியாவின் மத்திய தர வர்க்க குடும்பத்திருக்கே உரிய கையில், சச்சின் ஒரு பொறியியலாளராக வேண்டும் என அவரது பெற்றோர்கள் விரும்பினர். எனவே ஒரு […]

April 23, 2017 Editor
2017-ம் ஆண்டு விவசாயத்திற்கு உகந்த ஆண்டு..! செய்திகள்

2017-ம் ஆண்டு விவசாயத்திற்கு உகந்த ஆண்டு..!

கடந்த ஆண்டு போதிய பருவ மழை இல்லாமல், இந்தியா முழுவதும் பல பகுதிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டது. போதிய உற்பத்தி இல்லாததால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு, இந்திய விவசாயத்திற்கு சிறந்த ஆண்டாக அமையும் என கிரிஸ்டல் கிராப் புரடொக்‌ஷன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  அங்குர் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் ஆகியவை, இந்த ஆண்டு எப்போதும் […]

April 23, 2017 Editor
உலகின் முதல் மீத்தேன் டிராக்டர் செய்திகள்

உலகின் முதல் மீத்தேன் டிராக்டர்

உலகில் முதல் மீத்தேன் ஆற்றல் கொண்ட டிராக்டரை இத்தாலி உருவாக்கி உள்ளது. இந்த புதிய டிராக்டரை இத்தாலியின் பொறியாளார்கள் மீத்தேன் எரிபொருளை கொண்டு இயங்கும் விதத்தில் கண்டுபிடித்துள்ளனர். தற்போது Green House பாதிப்பு உலகில் அதிகமாக உள்ளது. பெரும்பாலும் Green House பாதிப்பு மனிதனால் ஏற்பட்ட மாசு மற்றும் இயற்கை பாதிப்பால் ஏற்படுகிறது. Green House-ல் உள்ள கார்பனின் அளவினை குறைக்க விலங்குகளின் கழிவிலிருந்து இயந்திரங்களை இயக்க முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இத்தாலி விஞ்ஞானிகள் […]

April 22, 2017 Editor
வாழைச் சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

வாழைச் சாகுபடி செய்யும் முறை

வாழைச் சாகுபடி செய்யும் முறை குறித்துப் பிரபாகரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே… ஆடிப்பட்டம் வாழைக்கு ஏற்ற பட்டம். ஆனி மாதத்தில் தேர்வு செய்த நிலத்தை உழுது பத்து நாள்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். இதனால், களைகள் அழிந்துவிடும். ஆடி மாதத்தில் 6 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுக்க வேண்டும். நடவுக்கு முதல் நாள் குழியில் தண்ணீர்விட்டு ஈரப்படுத்த வேண்டும். நல்ல தரமான விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து, […]

April 21, 2017 Editor
ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை இயற்கை உரம்

ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை

நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். 36 லிட்டர் தண்ணீரில் 38 மில்லி இ.எம் ஊற்றி நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இ.எம் கிடைக்காத நிலையில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 36 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ளலாம். கழிவுகள் கலந்த கலவையை […]

April 15, 2017 Editor
மிளகு சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

மிளகு சாகுபடி செய்யும் முறை

“மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகுக் கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும். வேர் பிடித்த இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம். நல்ல நிழல் இருக்கும், வளமுள்ள தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் 5.6 மீட்டர் நீளமும் கொண்ட உயரப்பாத்திகள் அமைக்க வேண்டும். மண்ணை நன்கு கொத்தி தேவையான தொழு உரம், […]

April 13, 2017 Editor
விவசாயிகளுக்கு உதவுவாரா.!? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! செய்திகள்

விவசாயிகளுக்கு உதவுவாரா.!? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ரஜினி என்ற மூன்றெழுத்தின் பிரமாண்டம் இந்தியா முழுதும் அறியும். கர்நாடாகவில் விதைக்கப்பட்டாலும் தமிழகத்தின் விருட்சமாய் வளர்ந்திருக்கும் இந்த உச்ச நட்சத்திரம். உச்சநட்சத்திரத்தினை தாக்கினாலே போதும், நாமும் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்றே பலரும் இவரை காயப்படுத்தினாலும், பொறுமையாக உட்கார்ந்திருக்கும் ரஜினியை, சில ஆண்டுகளாகவே அரசியலுக்கு வா, என்று கோரிக்கை வலுக்கிறது. ஆனாலும் அவரே அறியாமல் பல வருடங்களாக அரசியலில் அவர் நீக்கமற கலந்திருக்கிறார் என்பதை அவர் அறிந்தும், அறியாமலும் இருக்கிறார். யார் புதியதாக கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பித்திருக்கும் […]

April 11, 2017 Editor