32°C

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

காவிரி பாசன பகுதியின் இயற்கை சீற்றங்களை வென்ற சாதனை விவசாயி! இயற்கை விவசாயம்

காவிரி பாசன பகுதியின் இயற்கை சீற்றங்களை வென்ற சாதனை விவசாயி!

கடந்த பல ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒருபுறம் கர்நாடக மாநில தண்ணீரை எதிர்பார்த்து காத்துக்கிடந்தும் மறுபுறம் இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், கடும் வறட்சி காரணமாகவும் கடுமையான உற்பத்தி இழப்புகள், சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர் விவசாயிகள். இதனால் பலர் விவசாயத்தை விட்டு மாற்று தொழில்களுக்கு செல்வதும் பலர் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்ளுக்கு விற்பனை செய்யும் போக்கும் அதிகரித்து […]

June 26, 2017 Editor
வாழைச் சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

வாழைச் சாகுபடி செய்யும் முறை

வாழைச் சாகுபடி செய்யும் முறை குறித்துப் பிரபாகரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே… ஆடிப்பட்டம் வாழைக்கு ஏற்ற பட்டம். ஆனி மாதத்தில் தேர்வு செய்த நிலத்தை உழுது பத்து நாள்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். இதனால், களைகள் அழிந்துவிடும். ஆடி மாதத்தில் 6 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுக்க வேண்டும். நடவுக்கு முதல் நாள் குழியில் தண்ணீர்விட்டு ஈரப்படுத்த வேண்டும். நல்ல தரமான விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து, […]

April 21, 2017 Editor
மிளகு சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

மிளகு சாகுபடி செய்யும் முறை

“மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகுக் கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும். வேர் பிடித்த இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம். நல்ல நிழல் இருக்கும், வளமுள்ள தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் 5.6 மீட்டர் நீளமும் கொண்ட உயரப்பாத்திகள் அமைக்க வேண்டும். மண்ணை நன்கு கொத்தி தேவையான தொழு உரம், […]

April 13, 2017 Editor
கோடை உழவு..! இயற்கை விவசாயம்

கோடை உழவு..!

பொதுவாக சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தை சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காய விட வேண்டும். இதனால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொலபொலப்பாகும். அதோடு, மண்ணில் இருக்கும் பூச்சிகள், முட்டைகள், களைகள் ஆகியவையும் அழிந்துவிடும். ஆனி மாதம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஐந்து நாட்கள் வீதம் செம்மறியாடுகளைக் கிடை அடைக்க வேண்டும். பிறகு, ஒருமுறை உழுது வைக்க வேண்டும். ஆடி மாதம் மழை கிடைத்தவுடன், உடனடியாக ஓர் உழவு ஓட்டி விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் […]

March 21, 2017 Editor
கருங்குறுவை சாகுபடி..! இயற்கை விவசாயம்

கருங்குறுவை சாகுபடி..!

நாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி.. கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலுக்கான நிலத்தில் 2 சால் சேற்றுழவு செய்து எருக்கன், ஆடாதொடை, புங்கன், வேம்பு நொச்சி இலைகள் ஆகியவற்றைக் கலந்து 50 கிலோ அளவில் போட்டு காலால் மிதிக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி நிலத்தைச் சமப்படுத்த […]

March 18, 2017 Editor
அறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..! இயற்கை விவசாயம்

அறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..!

செண்டுமல்லிக்குப் பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். தேர்வு செய்த 60 சென்ட் நிலத்தை ஓர் உழவு செய்து மூன்று நாட்கள் காயவிட வேண்டும். பிறகு, இரண்டு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைப் பரவலாகக் கொட்டி ஓர் உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, 10 அடி சதுரத்தில் பாத்திகள் எடுத்து வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். பாத்திகளில் செடிக்குச்செடி ஒன்றரை அடி இடைவெளி, வரிசைக்கு வரிசை இரண்டு அடி இடைவெளி என இருக்குமாறு ஒரு அங்குல ஆழத்தில் […]

March 17, 2017 Editor
ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..! இயற்கை விவசாயம்

ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..!

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு சால் உழவு ஓட்டி, 100 கிலோ இலுப்பங்கொட்டைத் தூள் தூவிவிட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு மாட்டு ஏர் ஓட்டி, நிலக்கடலை விதையை முக்கால் அடி இடைவெளியில் விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 36 கிலோ விதை தேவைப்படும். விதைத்த 7-ம் நாள் 120 லிட்டர் தண்ணீரில் 12 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள் களை எடுக்க […]

March 8, 2017 Editor
மண்பானை பாசனம்..! இயற்கை விவசாயம்

மண்பானை பாசனம்..!

தனது பண்ணையில் ஏராளமான மரங்களை நட்டு வைத்துள்ள கண்ணன், அவற்றுக்கு மண் பானை பாசனம் அமைத்துள்ளார். இதைப்பற்றிப் பேசிய கண்ணன், “வேலி ஓரமா இருக்கிற மரங்களுக்கு அடிக்கடி பாசனம் செய்ய முடியாது. அதனால் ஒவ்வொரு செடி பக்கத்திலேயும் அஞ்சு லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையைப் புதைத்து வைத்திருக்கிறோம்.. பானையை புதைப்பதற்கு முன்னால், பானைக்கு அடிப்பக்கம் பக்கவாட்டில் சின்னதாக ஒரு துளை போட்டுவிடுவோம். அதோட வாய்ப்பகுதி மட்டும் கொஞ்சம் சாய்வா இருக்கிற மாதிரி புதைத்துவிடுவோம். வாய்க்காலில் தண்ணீர் பாய்ச்சும்போது, பானைக்குள்ளேயும் […]

March 4, 2017 Editor
வறட்சியிலிருந்து தென்னையை காக்க எளிய வழிமுறைகள்..! இயற்கை விவசாயம்

வறட்சியிலிருந்து தென்னையை காக்க எளிய வழிமுறைகள்..!

பலமாவட்டத்தில் இந்தாண்டு பருவ மழை முற்றிலும் பொய்த்துப்போய், பாசனம் செய்ய வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். பாசன ஆதாரங்கள் வற்றிப்போய், கடும் வறட்சி தலை துாக்கியுள்ளது. மழையின்மையால், அடிக்கும் வெயிலும், நிலவும் உஷ்ணமும், மனிதர்களை மட்டுமல்லாது, விவசாய பயிர்களையும் கடுமையாக பாதிக்கிறது. தென்னை விவசாயிகள், வறட்சியை எப்படி எதிர்கொண்டு, தென்னை பயிர்களை பராமரிப்பது என்பது தெரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு கீழ்கண்ட முறைகளை கடைபிடிக்கலாம் மண் மூடாக்கு வறட்சி காலத்தில் பெரிய பிரச்னையாக இருப்பது, பாசனம் செய்யும் […]

March 3, 2017 Editor
செம்பருத்தி சாகுபடி..! இயற்கை விவசாயம்

செம்பருத்தி சாகுபடி..!

ஒரு ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்வது குறித்து ஆஸ்டின் கிருபாகரன் சொன்ன தகவல்கள்.. செம்பருத்தி நடவுக்கு ஆனி, ஆடி பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழுது, இரண்டு நாள்கள் காயவிட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழுது, ஆறு அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1,200 குழிகள் வரை எடுக்க முடியும். பிறகு சொட்டுநீர்க் […]

February 17, 2017 Editor