32°C

செய்திகள்

உணவே மருந்து.. பரிமாறும் இலையும் மருந்து! செய்திகள்

உணவே மருந்து.. பரிமாறும் இலையும் மருந்து!

”உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறார் பணிக்கு” உழுது உண்டு வாழும் விவசாயிங்களோட வேலைதான், உன்னதமானது. இதில் கிடைக்கும் மகிழ்ச்சியும், மன நிறைவும், வேறு எதிலும் கிடைக்காது என்று ஔவையார் அழகாக பாடியிருக்கிறார். உழுதுண்டு வாழும் விவசாயிகள் என்றால் வெண்டைக்காய், கத்தரிக்காய் சாகுபடி செய்கின்றவர்கள் என்று அர்த்தம் கிடையாது. வாழ்க்கையை முழுமையாக, நிறைவாக மற்றவர்களுக்கு உதவியா, வழிகாட்டியாக வாழ்கின்றவர்கள். இப்படி உழுதுண்டு வாழ்ந்தவர்கள், சமுதாயத்தில் எல்லா நிலையிலும் இருந்தார்கள். மண்ணை ஆண்ட மன்னனிலிருந்து அமைச்சர், ஆசிரியர், […]

August 14, 2016 Editor
அதிக மகசூல் கொடுக்கும் தீவன தட்டைப்பயறு, வெண்டை மற்றும் எலுமிச்சை செய்திகள்

அதிக மகசூல் கொடுக்கும் தீவன தட்டைப்பயறு, வெண்டை மற்றும் எலுமிச்சை

தீவன தட்டைப்பயறு [கோ-9] 50-55 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம், கோ-5, புந்தெல்லோபியா-2 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. காரிஃப் (ஜூலை-அக்டோபர்), ரபி (அக்டோபர்-மார்ச்) மற்றும் கோடை பருவங்கள் ஏற்றவை. ஹெக்டேருக்கு 22.82 டன் மகசூல் கிடைக்கும். கோ(எப்.சி)-8 ரகத்தை விட 18.42% கூடுதல் மகசூல் கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் பயிரிட ஏற்றது. அதிக பசுந்தீவனம் மற்றும் உலர் எடை மகசூல் கிடைக்கும். அகலமான இலைகள், அதிக கிளைகள் கொண்டது. அதிகப் புரதச்சத்து, குறைந்தளவு நார்ச்சத்து […]

August 14, 2016 Editor
பின்ச் பறவைகள், மலட்டு அட்டைப் பூச்சிகள், கோழி ரத்தம்.. கால்நடை

பின்ச் பறவைகள், மலட்டு அட்டைப் பூச்சிகள், கோழி ரத்தம்..

இது ஒரு வித்தியாசமான போராட்டம். கலபகோஸ் தீவுகளை அறிந்திருப்பீர்கள். பல்லுயிர் பெருக்கத்துக்கு மிக முக்கியமான தீவுகள் இவை. பரிணாமவியலின் பரிசோதனைகூடம் என அழைக்கபடும் தீவுகள். டார்வின் இங்கே வந்து தான் பரிணாமவியலை கற்றார். இங்கே இருக்கும் பின்ச் பறவைகள் எண்ணிக்கை மிக குறைந்து வந்தது. காரணம் மாகட் எனப்படும் அட்டைபூச்சிகள் இப்பறவைக் கூடுகளில் புகுந்து இளம் பின்ச் குஞ்சுகளின் ரத்ததை குடித்து அவற்றை அழித்து வந்தன. இத்தீவில் இருப்பது போன்ற பின்ச் பறவைகள் எங்கும் இல்லாததால் அட்டைபூச்சிகளிடம் இருந்து […]

August 5, 2016 Editor
பருவநிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் அபாயக்கட்டம்!! செய்திகள்

பருவநிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் அபாயக்கட்டம்!!

இந்திய அறிவியல் கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பருவநிலை மாற்றத்தில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், 15 மாநிலங்களில் 115 மாவட்டங்களில் விவசாயம் மிகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கிறது. பருவ நிலை மாற்றம் என்பது ஒவ்வொரு பருவத்திலும் சராசரியாக உள்ள மழை, வெப்பம், காற்று ஆகியவையில் ஏற்படும் குறைந்த மற்றும் உச்சப்பட்ச மாற்றங்களே பருவநிலை மாற்றம் ஆகும். உதாரணத்திற்கு நல்ல வெயில் காலத்தில் சாரசாரிக்கும் அதிகமான மழைபொழிவு, நல்ல மழைக்காலத்தில் கொளுத்தும் வெயில் போன்றவையே. புவி வெப்பமயமாதலுக்கு […]

August 5, 2016 Editor
மொட்டை மாடியில் கோழி வளர்க்கும் முறை ! கால்நடை

மொட்டை மாடியில் கோழி வளர்க்கும் முறை !

ஒரு சேவல், நாலு கோழிகள் இருந்தால் போதும். அது மூலமா முட்டை எடுத்து குஞ்சு உற்பத்தி பண்ணி விற்பனை செய்வது மூலமாக, மாதம் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். இதற்கு அதிகமான இட வசதி கூட தேவையில்லை. வீட்டு மொட்டைமாடியில் கூட வளர்க்க முடியும். எல்லா கோழிகளும் ஒரே நேரத்துல முட்டை வெக்காது. ஒண்ணு முட்டை வைக்கும்போது ஒண்ணு அடையில இருக்கும். இன்னொன்னு குஞ்சுகளோட இருக்கும். அதனால, சுழற்சி முறையில மாசா மாசம் நமக்கு […]

August 2, 2016 Editor
புதிய ரக காளானுக்கு ஆராய்ச்சி! செய்திகள்

புதிய ரக காளானுக்கு ஆராய்ச்சி!

கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்.. பருவ காலங்களில் முளைக்கும் காளான் வகைகளை வரிசைப்படுத்தி, புதிய ரக பால் காளான் தயாரிக்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இயற்கையாக முளைத்த காளான்களைச் சேகரித்து வைத்துள்ளனர். இது குறித்துப் பேசிய, பயிர் நோயியல் துறைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, “காளான் வகைகளை ஆராய்ந்து, புதிய ரகம் வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். உலகளவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வகை இயற்கைக் காளான்கள் உள்ளன. அவற்றில், 50 […]

August 1, 2016 Editor
விவசாயம் குறுஞ்செயலி ஒரு லட்சம் பயனாளர்கள் ! செய்திகள்

விவசாயம் குறுஞ்செயலி ஒரு லட்சம் பயனாளர்கள் !

விவசாயம் குறுஞ்செயலி தற்போது ஒரு லட்சம் பயனாளர்கள் என்ற மைல் கல்லை அடைந்துள்ளது. தமிழ் குறுஞ்செயலிகளில் ஒரு லட்சம் நிறுவல்கள் என்பது ஒரு மைல்கல். இப்போது அதை விவசாயம் குறுஞ்செயலி அந்த மைக்கல்லை அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 3 முறை எங்களது கூகிள் பிளே ஸ்டோர் சந்தை கணக்கு தடை செய்யப்பட்டு இது 4வது கணக்கு. எனவே அதையெல்லாம் எண்ணுகையில் இது ஏற்கனவே வெற்றிதான். என்றாலும் அடுத்த இலக்கு 10 லட்சம் விவசாயிகளையாவது அடைவது என்பதே. விவசாயத்தில் பல […]

July 31, 2016 Editor
சீஸ்-க்கான சந்தையும் பயிற்சியும் செய்திகள்

சீஸ்-க்கான சந்தையும் பயிற்சியும்

கொடைக்கானலில் பால் பண்ணையுடன், சீஸ் தயாரித்து வரும் பாட்ரிஷியா பதில் சொல்கிறார். “பால் உற்பத்தியில் கவனம் செலுத்தும் தமிழ்நாட்டு மக்கள், அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ‘சீஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ‘பாலாடைக் கட்டி’ புளிப்புச் சுவையுடன் இருக்கும். சீஸ், பலவிதமான சத்துக்கள் நிரம்பிய பொருள். இதற்கு, நட்சத்திர விடுதிகள், துரித உணவகங்கள்.. போன்றவற்றில் அதிக தேவை இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் தேவையான அளவு சீஸ் கிடைப்பதில்லை. வெளிநாடுகளில் […]

July 31, 2016 Editor
புளியங்கொட்டையின் தொழிற்சாலைப் பயன்கள் செய்திகள்

புளியங்கொட்டையின் தொழிற்சாலைப் பயன்கள்

புளியங்கொட்டையின் தொழிற்சாலைப் பயன்கள்: சராசரியாக புளியம்பழம் 55 சதவீதம் சதைப்பற்றுள்ள பகுதியையும், 34 சதவீதம் கொட்டையையும், 11 சதவீதம் நாறும், ஓடும் கொண்ட பகுதியாகும். ஒட்டும் பசை, பெக்டின், கால்நடைத்தீவனம், புரதம் ஆகியவை தயாரிக்க புளியங்கொட்டையின் உள் அமைந்த பருப்புப்பொடி ஆதாரமாக அமைகிறது. பெக்டின் – ஜாம், ஜெல்லி தயாரிக்க பயன்படுகிறது. வியாபார ரீதியாக பழங்களிலிருந்தும், பழத்தோலிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. ஒட்டும் பசை – புளியங்கொட்டையினுள் உள்ள பருப்புப் பொடியில் இருமடங்கு தண்ணீரைச் சேர்த்து 5 சதவீதம் குளுக்கோஸ், […]

July 30, 2016 Editor
ஏற்றம் தரும் எலுமிச்சை ! இயற்கை விவசாயம்

ஏற்றம் தரும் எலுமிச்சை !

எலுமிச்சை மரத்தின் கொழுந்து இலை, பூ, விதை, பிஞ்சுக்காய், கனி, கனிச்சாறு, கனியின் தோல், மரப்பட்டை, வேர், வேர்ப்பட்டை, எண்ணெய் இவை அனைத்துமே பயன்பாட்டில் உள்ளன. எலுமிச்சம் பழச்சாறில் அதிக அளவில் இயற்கையாக அமைந்துள்ள வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து “ஸ்கர்வி என்ற நோயைத் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நா வறட்சி, அதிக தாகம், கண்நோய், காதுநோய், நகச்சுற்று, நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்போக்கு இத்தகைய எண்ணற்ற பிணிகளைப் போக்கவல்ல ஒரு தேசியப்பழம் என்றும் இது போற்றப்படுகிறது. வளமான […]

July 30, 2016 Editor