32°C

செய்திகள்

சிறுதானிய மாநாடு செய்திகள்

சிறுதானிய மாநாடு

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் நபார்டு வங்கி இணைந்து சென்னையில் ஏப்ரல் 21-ம் தேதி ‘தமிழ்நாடு சிறுதானியங்கள் மாநாடு’ என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. சிறுதானியங்களின் விற்பனை வாய்ப்புகள், மதிப்புக்கூட்டும் நுட்பங்கள்.. போன்றவை பற்றி இந்நிகழ்ச்சியில் வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர். அனுமதி இலவசம். முதலில் முன்பதிவு செய்யும் 100 விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி. இடம் : தாஜ் கோரமண்டல் ஓட்டல், நுங்கம்பாக்கம், சென்னை. தொடர்புக்கு, செல்போன் : 99404 88807 நன்றி பசுமை […]

April 13, 2017 Editor
விவசாயிகளுக்கு உதவுவாரா.!? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! செய்திகள்

விவசாயிகளுக்கு உதவுவாரா.!? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ரஜினி என்ற மூன்றெழுத்தின் பிரமாண்டம் இந்தியா முழுதும் அறியும். கர்நாடாகவில் விதைக்கப்பட்டாலும் தமிழகத்தின் விருட்சமாய் வளர்ந்திருக்கும் இந்த உச்ச நட்சத்திரம். உச்சநட்சத்திரத்தினை தாக்கினாலே போதும், நாமும் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்றே பலரும் இவரை காயப்படுத்தினாலும், பொறுமையாக உட்கார்ந்திருக்கும் ரஜினியை, சில ஆண்டுகளாகவே அரசியலுக்கு வா, என்று கோரிக்கை வலுக்கிறது. ஆனாலும் அவரே அறியாமல் பல வருடங்களாக அரசியலில் அவர் நீக்கமற கலந்திருக்கிறார் என்பதை அவர் அறிந்தும், அறியாமலும் இருக்கிறார். யார் புதியதாக கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பித்திருக்கும் […]

April 11, 2017 Editor
செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா? செய்திகள்

செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

கோயம்புத்தூர் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நாராயணசாமி, பதில் சொல்கிறார். “செம்மரம் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகள் இருப்பது உண்மைதான். உங்கள் நிலத்தில் செம்மரம் நடவு செய்தவுடன், கிராம நிர்வாக அலுவலரிடம், கிராமப் பதிவேட்டில் அதைப் பதிவு செய்யும்படி சொல்ல வேண்டும். பொதுவாக வெட்டப்பட்ட மரங்களைத் தடி மரங்கள் என்கிறோம். விவசாயி தனது பட்டா நிலத்திலுள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு வன அலுவலரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். வெட்டிய மரங்கள் இருப்பு […]

March 24, 2017 Editor
மின்சாரம் இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவி..! செய்திகள்

மின்சாரம் இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவி..!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி சரண்யா எரிசக்தி இல்லாமல் எளிய முறையில் நாற்று நடும் கருவியை வடிவமைத்துள்ளார். இந்த கருவி ஏழ்மையான விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நன்றாக உழவு செய்யப்பட்டு நடுவதற்கு ஏற்ற வகையில் உள்ள வயலில் சரியான இடைவெளியில் இந்த கருவியை இழுத்து சென்றால் நாற்றுகளை யாருடைய உதவியும் இன்றி நடமுடியும். இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் குறைந்த செலவில் நாற்றுகளை நட்டு […]

March 24, 2017 Editor
பாரம்பரியத்திற்கு மாறும் விவசாயிகள், மாண்சாண்டோவிற்கு இழப்பு..! செய்திகள்

பாரம்பரியத்திற்கு மாறும் விவசாயிகள், மாண்சாண்டோவிற்கு இழப்பு..!

மாண்சாண்டோவின் மரபணு மாற்று பி.டி பருத்தி விதைகளை வாங்க மறுத்து, பாரம்பரிய நாட்டு விதைகளுக்கு இந்திய விவசாயிகள் திரும்பி வருவதால், மாண்சாண்டோ நிறுவனம் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மாண்சாண்டோ நிறுவனம், பி.டி எனப்படும் மரபணு மாற்று விதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தையில் நுழைவதற்காக அந்த நிறுவனம் பல சட்ட விதிமுறைகளை மீறியதாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது. இருப்பினும் தனது பண, அதிகார பலத்தை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்தது. […]

March 20, 2017 Editor
தென்னை மரம் ஏற உதவும் கருவி..! செய்திகள்

தென்னை மரம் ஏற உதவும் கருவி..!

”தென்னை விவசாயிகளுக்குக் காய்கள் பறிப்பது முக்கியமான வேலை. தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்தால், காய் பறிக்க ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் நஷ்டம் ஏற்படும். சில விவசாயிகள் உயரமான மரங்களை அழித்துவிட்டு, குட்டை ரகக் கன்றுகளை நடுகிறார்கள். ஆனால், உயரமான மரங்களை அறுத்து எறிய வேண்டாம். இதற்கு எளிய தீர்வு உண்டு. தென்னை மரத்துடன் இணைத்துக்கொண்டு ஏறும் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இதன் மூலம், 60 அடி உயரம் கொண்ட மரத்தில்கூட ஐந்து நிமிடத்தில் ஏறிவிட முடியும். […]

March 16, 2017 Editor
நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம்..! செய்திகள்

நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம்..!

இந்த இயந்திரம் பற்றி திரு.விவேக் அவர்கள் கூறியவை. “நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரம் எங்கள் துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலக்கடலைச் செடியிலிருந்து காய்களைப் பிரித்தெடுப்பதற்கு அதிக மனித உழைப்பும் நேரமும் செலவாகிறது. தற்போது கிராமங்களில் நிலக்கடலையைக் கையால் பிரித்தெடுக்கிறார்கள். இம்முறையினால் ஓர் ஆள், ஒரு நாளில் 10 முதல் 15 கிலோ அளவே பிரித்தெடுக்க முடிகிறது. ஆகவே, அறுவடைக் காலங்களில் வேலையாட்கள் பற்றாக்குறையினால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். இச்சிரமத்தைப் போக்க நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் […]

March 14, 2017 Editor
உயிர்க்காற்று இலவசம்.. ஆரோக்கியம் தரும் அரசமரம்..! செய்திகள்

உயிர்க்காற்று இலவசம்.. ஆரோக்கியம் தரும் அரசமரம்..!

உலகில் அதிக மரியாதைக்குரியவை மரங்கள்தான். மனிதனின் சுயநலத்தால் சூனியமாக்கப்படும் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தி, மழையீர்ப்பு மையங்களாகத் திகழும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருப்பதுதான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள், விஞ்ஞானிகள். வாகனங்கள் காற்றில் உமிழும் கரியமில வாயுவை சாலையோர மரங்கள் உறிஞ்சிக்கொண்டு, உயிரினங்களுக்கு ஆயுள் தரும் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. எந்தப் பலனையும் எதிர்பாராமல், 24 மணி நேரமும் சமூகப் பணி செய்யும் மரங்களை நம்மில் எத்தனை பேர் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்? இனியாகிலும், மரங்களை மரியாதையுடனும் […]

March 13, 2017 Editor
பாமக-வின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – 2017 செய்திகள்

பாமக-வின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – 2017

பாமக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமிழக அரசுக்கு வழிகாட்டும் விதமாக நிழல்நிதிநிலை அறிக்கை வெளியிடுகிறது. அதில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது. இந்த ஆண்டின் பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் முன்னிலையில் வெளியிடபட்டது. முக்கிய அம்சங்கள் – மொத்தம் 100 புள்ளிகளில் 1. 2017-18 ஆம் ஆண்டை உழவர்கள் தற்கொலை இல்லாத ஆண்டாக மாற்ற வேண்டும் என்பதே இந்த வேளாண் நிழல் நிதிநிலை […]

March 8, 2017 Editor