32°C

காய்கறி வகைகள்

கத்தரியில் குருத்து மற்றும் காய் துளைப்பான் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை காய்கறி வகைகள்

கத்தரியில் குருத்து மற்றும் காய் துளைப்பான் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

கத்தரி, சோலானம் மெலான்சினா தெற்காசியாவின் மூன்று முக்கிய காய்கறி பயிர்களில் ஒன்றாகும், இது உலகின் பரப்பளவில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் சாகுபடி செய்யப்படுகின்றது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, கத்தரிக்காய் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கின்றது.

October 17, 2021 Editor
சேலம் மாவட்டத்தில் காய்கறி விலை திடீர் உயர்வு !!!! காய்கறி வகைகள்

சேலம் மாவட்டத்தில் காய்கறி விலை திடீர் உயர்வு !!!!

சேலம் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமா, உள்ளூர், வெளியூர் காய்கறிகளின் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பால், விலை உயர்ந்துள்ளது.சேலம் மாநகரில் செயல்படும் உழவர்சந்தைகள், வெளி மார்க்கெட்டுக்கு ஊட்டி, ஒசூர், பெங்களூரு கொடைக்கானல் ஆகிய இடங்களில் இருந்து, கேரட், பீட்ரூட், இஞ்சி, பீன்ஸ், உருளை கிழங்கு ஆகியனவும், பனமரத்துப்பட்டி, வாழப்பாடி, சங்ககிரி, தாரமங்கலம், ஓமலூர் ஆகிய இடங்களில் இருந்து, கீரை, கத்தரிக்காய், தக்காளி பழம், புடலங்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் ஆகியனவும் விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் […]

May 5, 2018 Editor
தக்காளி காய்கறி வகைகள்

தக்காளி

  அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா,நடு அமெரிக்காமற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு மெக்ஸிகோவி ல் இருந்து அர்ஜெண்டனா வரையான பகுதியாகும். ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.         தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. விளைவிப்பவர்களுக்கோ லாபம் இல்லை. வாங்குவோருக்கோ தங்கம் விலை. […]

September 9, 2017 editor news
முருங்கை சாகுபடி!!! காய்கறி வகைகள்

முருங்கை சாகுபடி!!!

   ஒரு ஏக்கர் பரப்பில் நாட்டு முருங்கை சாகுபடி செய்ய மரியராஜ் சொல்லும் தகவல்கள் இங்கே!!!    நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்து, 15 நாள் காயவிட வேண்டும். பிறகு டிரில்லரால் ஒரு உழவு செய்து அடுத்த நாள் செடிக்கு செடி 20அடி இடைவெளியில், ஓர் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 100 குழிகள் வரை எடுக்கலாம். முருங்கையை போத்தாக நடவு செய்தால் விரைவாக மகசூலுக்கு வரும்.    நன்றாக […]

September 2, 2017 editor news
ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..! காய்கறி வகைகள்

ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..!

இயற்கை வேளாண்மையில் அனைத்துக் காய்களுக்குமே பராமரிப்பு ஒன்றுதான். ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைக்க வேண்டும். பிறகு, ஒரு உழவு செய்து நிலத்தின் அமைப்புக்குத் தகுந்த அளவில் பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துத் தேவைப்படும் விதையை ஊன்ற வேண்டும். பொதுவாக காய்கறிப்பயிர்களுக்கு இரண்டு அடி இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். விதைத்த அன்று நீர்ப் பாய்ச்சி, மூன்றாம் நாள் அடுத்தப் பாசனம் செய்ய வேண்டும். 20 மற்றும் […]

March 13, 2017 Editor
எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா ! இயற்கை விவசாயம்

எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா !

பத்து ஏக்கர் தென்னை தவிர, இரண்டு ஏக்கர் நிலத்தில் இளநீர்த் தென்னை மற்றும் இரண்டு ஏக்கர் 70 சென்ட் நிலத்தில் எலுமிச்சையும் அதற்கு ஊடுபயிராகக் கொய்யாவும் சாகுபடி செய்துள்ளார். ரசூல். ”சவுக்காட் ரகத்துல ஆரஞ்சு, பச்சை இரண்டு ரக இளநீர் மரங்களையும் நடவு செஞ்சிருக்கேன். இதுக்கும் 25 அடி இடைவெளிதான். சொட்டுநீர் பாசனம்தான் போட்டிருக்கேன். ஆறு வயசாச்சு, வழக்கமாக தென்னையைப் பராமரிக்கிறது மாதிரிதான் இதையும் பராமரிக்கிறேன். ஏக்கருக்கு 80 மரங்கள் வீதம் 160 மரங்கள் இருக்கு. அதில் […]

December 24, 2016 Editor
இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..! இயற்கை விவசாயம்

இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி..!

ஏக்கருக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி களைத்து, ஐந்து சால் உழவு செய்து மண்ணைப் பொல பொலப்பாக மாற்றி 5 அடி இடைவெளியில் வாய்க்கால்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் மையப்பகுதியில் 3 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழிகளை எடுத்து, ஒரு வாரம் ஆறவிட்டு.. ஒவ்வொரு குழியிலும் அரைக் கூடை எருவையும், மேல் மண்ணையும் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, ஒரு குழிக்கு நான்கு விதைகள் வீதம் ஊன்றிவிட வேண்டும். அசுவினியை […]

November 27, 2016 Editor
வெண்டை சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

வெண்டை சாகுபடி செய்யும் முறை

வெண்டைக்கு வைகாசி, ஆனி, ஆடி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த 75 சென்ட் நிலத்தைச் சட்டிக்கலப்பையால் உழுது, இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழவு செய்து 150 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் என்ற அளவில் பாத்தி எடுக்க வேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து நீளத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். 15 டன் தொழுவுரம், 400 கிலோ […]

October 5, 2016 Editor
காய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ ! காய்கறி வகைகள்

காய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ !

ஒரு குடும்பத்துக்கு கால் ஏக்கர் நிலம் இருந்தால் போதிய வருவாய் எடுக்க முடியும் என்று தபோல்கர் கூறுகிறார். இதற்கு ஏற்ப தோட்டத்தை வடிவமைக்க வேண்டும். அன்றாடம் தோட்டத்தில் 4 மணி நேரம் உடல் உழைப்பு செலுத்த வேண்டும். பழமரங்கள், உரம் தரும் மரங்கள், தீவனம் வளம் குறைந்த நீரில் பயிர் செய்ய வேண்டும். காய்கறி, கிழங்கு, கீரை, பருப்பு, எண்ணெய்வித்து போன்றவற்றிற்கு அதிகம் தண்ணீரும் கவனமும் தேவை. வேர்க்கடலை போன்ற பயிர் வகை 20 சதுரடி பரப்பில் […]

October 5, 2016 Editor
புடலை மற்றும் பீர்க்கன் சாகுபடி செய்யும் முறை இயற்கை விவசாயம்

புடலை மற்றும் பீர்க்கன் சாகுபடி செய்யும் முறை

ஒரு ஏக்கர் நிலத்தில் புடலை, பீர்க்கன் சாகுபடி செய்யும் விதம் பற்றி காண்போம். புடலை, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும். வீரிய ரக புடலைக்கு பட்டம் தேவையில்லை. புடலை வயது 160 நாட்கள், பீர்க்கன் வயது 180 நாட்கள், இவற்றை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். தொழுவுரம் கொட்டி, உழவு செய்து தயாராக உள்ள, 6 அடி இடைவெளியில் ஓர் அடி அகலத்தில் நீளமான பார் எடுத்துக்கொள்ள வேண்டும். பாரின் மத்தியில் ஓர் அடிக்கு ஒரு […]

August 30, 2016 Editor