32°C

editor news

பலாப்பழத்தில் மதிப்புக் கூட்டுதல் (பகுதி-2) தொடர்

பலாப்பழத்தில் மதிப்புக் கூட்டுதல் (பகுதி-2)

பலாச்சுளை வறுவல் (சிப்ஸ்) நன்கு முற்றிய, நன்கு பழுக்காத பலா பழத்தை பயன்படுத்த வேண்டும். பலாச்சுளைகளை எடுத்து அதிலுள்ள கொட்டைகளை அகற்றவும். பலாச்சுளைகளை 0.5 – 0.6 செ.மீ அகல கீற்றுகளாக வெட்டவும். இக்கீற்றுகளை உப்பு சேர்க்கப்பட்ட கொதிக்கும் நீரில் நிறம் வெண்மையாக மாறும் வரை இரண்டு நிமிடங்களுக்கு சூடு படுத்தவும். பின்பு தண்ணீரை வடித்து விட்டு உலர வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடு படுத்தி இந்த சிப்ஸை வறுக்கவும். பொரிக்கும் போதே 1-2 தேக்கரண்டி உப்பு […]

July 31, 2020 editor news
விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறை…!! (பகுதி – 1) சந்தை

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறை…!! (பகுதி – 1)

அன்று ஆடம்ஸ்மித் வகுத்தளித்த ஒரு சுதந்திர வணிகத்தில் (Free Trade) இறக்குமதி வரி இல்லை; ஏற்றுமதி வரி இல்லை. உலகப்போர் காரணமாக அது ஆட்டம் காணவே, உலக ஏகாதிபத்திய நலனை காப்பாற்ற ஜான் மேனார்டு கீன்ஸ் என்ற பொருளாதார வல்லுநரின் சுதந்திர வணிகக் கொள்கையை மெருகேற்றி உருவான கட்டுப்பாடான பொருளாதாரம் உலகப் போக்குப்பின் ஆட்டம் கண்ட உலகப்பொருளாதாரத்தை மீட்டெடுத்த பெருமையை பெற்றார். ஆனால், அவர்திட்டம் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாட்டுக்கு ஆதாரவாக அமைந்ததே தவிர, ஏழை நாடுகளுக்கு ஆதரவாக […]

July 31, 2020 editor news
உயிர் வேலி என்னும் உன்னதம் பயிர் பாதுகாப்பு

உயிர் வேலி என்னும் உன்னதம்

விளை நிலத்தைப் பாதுகாக்க மரம், செடி, கொடி போன்றவற்றால் அமைக்கும் வேலி உயிர் வேலி (Live Fencing) எனப்படுகிறது. உயிருள்ள தாவரங்களினால் அமைக்கப்படுவதாலும், பல உயிர்கள் இதில் வாழ்வதாலும் உயிர் வேலி என்றழைக்கப்படுகிறது. விளை நிலத்தை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் இருந்து பாதுகாக்கவும், சூறாவளி காற்றிலிருந்து பயிரை பாதுகாக்கவும் உயிர் வேலி அமைக்கப்படுகிறது. பயிரை விளைவிக்க வரும் செலவை விட அதனை பாதுகாக்க அமைக்கும் செயற்கை கம்பி வேலியின் செலவு மிகுதியானது. இயற்கை உயிர் வேலி அமைப்பதனால் நிலத்தை […]

July 31, 2020 editor news
பலாப்பழத்தில் மதிப்புக் கூட்டுதல் தொடர்

பலாப்பழத்தில் மதிப்புக் கூட்டுதல்

பலாப்பழம் (Atrocarpus heterophyllus) மோரேசியே குடும்பத்தைச் சார்ந்த மிகப் பெரிய பழமாகும். முக்கனிகளான மா, பலா வாழையில் இரண்டாம் முக்கியத்துவத்தை பெற்றது. பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து, நார்ச்சத்து, ஃபிளேவனாய்ட்ஸ் மற்றும் நிறமிகள் கனிசமான அளவில் உள்ளன. மேலும் வைட்டமின் ‘சி’ மற்றும் வைட்டமின் ‘பி’ யும் இதில் அடங்கியுள்ளன. இவை சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்பட்டு நம்மை நோயிலிருந்து காக்கின்றன. பருவகாலங்களில் அதிக அளவில் இப்பழங்களின் உற்பத்தி உள்ளதால், இவை பெருமளவில் வீணடிக்கப்படுகின்றன. இதனை தடுக்க […]

July 31, 2020 editor news
கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மானியங்கள்

கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. நம் இந்திய நாடும் இதற்கு தப்பவில்லை. இந்நோய் தொற்றின் காரணமாக தேசிய ஊரடங்கு அமல்படுத்திய நேரத்தில் அத்தியாவசிய பொருட்களான வேளாண் விளைப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படா வண்ணமும் சுற்றுவட்டார விவசாயிகளின் விளைப்பொருட்களை சந்தைப்படுத்தும் வண்ணமும் களத்தில் இறங்கியது கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையும். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 17.02.2020 அன்று தொழில்த்துறை […]

July 31, 2020 editor news
நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் பூச்சிக் கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு

நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் பூச்சிக் கட்டுப்பாடு

இந்தியாவில் வாழும் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் நெல் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒரு ஆண்டில் இந்தியாவில் சுமார் 106.7 மில்லியன் டன் நெல் உற்பத்தி செய்து வருகின்றோம். அயல்நாட்டிற்கும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நெல்லில் ஏறத்தாழ 10 க்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குதல் ஏற்படுகின்றது. நெல்லின் உற்பத்தியும் இதனால் குறைகின்றது. அதில் மிக முக்கியமான ஒன்று தண்டுத்துளைப்பான் ஆகும். அதைப்பற்றி பின்வரும் தொகுப்பில் காண்போம். இவை முக்கியமாக நெல் பயிரின் தண்டைக் தாக்குகிறது. […]

July 30, 2020 editor news
கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள் மருத்துவ குணங்கள்

கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோலியஸ் பயிரானது இரண்டு அல்லது இரண்டரை அடி உயரம் வரை வளரக்கூடிய சிறு மூலிகைச் செடியாகும் ஆகும். இதன் அறிவியல் பெயர் கோலியஸ் போர்ஸ்கோலி (Coleus forskohlii) மற்றும் லில்லியேசியே (Liliaceae) குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். மேலும் கூர்க்கன் கிழங்கு, மருந்து கிழங்கு, மருந்து கூர்க்கன் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் இலை மற்றும் வேர் கிழங்குகளிலிருந்து போர்ஸ்கோலின் (Forskolin) என்ற மருத்துவ மூலப்பொருள் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர் செய்யக்கூடிய வல்லமை கொண்டது. மேலும் […]

July 30, 2020 editor news
மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-3) தொடர்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-3)

மாப்பிள்ளை சம்பா அரிசி பிரியாணி: தேவையான பொருட்கள் ஒரு கப் மாப்பிள்ளை சம்பா அரிசி பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை ஒரு பச்சை மிளகாய் ஒரு வெங்காயம் ஒரு தக்காளி அரை ஸ்பூன் இஞ்சிப் பூண்டு விழுது ஒரு கேரட் ஒரு கப் பச்சை பட்டாணி ஒரு உருளைக்கிழங்கு 10 சிறிய துண்டுகள் பன்னீர் புதினா ஒரு டீஸ்பூன் தயிர் ஒரு டீஸ்பூன் பிரியாணிமசாலா தூள் சிறிது சிவப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் உப்பு […]

July 30, 2020 editor news
கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-2) தொடர்

கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-2)

நடந்துகொண்டிருக்கும் கொரோனா முடக்கம் ரபி அறுவடை பருவத்துடன் ஒத்துப்போவதால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயிர்களை தடையின்றி அறுவடை செய்வதையும், மென்மையான கொள்முதல் நடவடிக்கைகளையும் உறுதி செய்ய அரசாங்கத்தை நோக்குகின்றனர். விவசாயிகள் / தொழிலாளர்களின் இடை மற்றும் மாநில நகர்வுகள், அறுவடை மற்றும் தொடர்புடைய பண்ணை இயந்திரங்கள் மீதான மத்திய உள்துறை அமைச்சகத்தின் வட்டி தள்ளுபடி கட்டுப்பாடுகள் உண்மையில் விவசாய தொழிலாளர்களின் நன்மைக்காக இந்த கொரோனா தோற்று  பரவும் அவசர காலத்தில் அரசாங்கம் சரியான திசையில் செயல் […]

July 30, 2020 editor news
தக்காளி  பயிரைத் தாக்கும் ஃபுசேரியம் வாடல் நோயும் அதனைக்  கட்டுப்படுத்தும் முறைகளும் பயிர் பாதுகாப்பு

தக்காளி பயிரைத் தாக்கும் ஃபுசேரியம் வாடல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

அறிமுகம் தக்காளி ஒரு வெப்ப மண்டலப் பயிராகும், இது ஆண்டு முழுவதும் பயிர் செய்வதற்கு ஏற்றதாகும். ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச் ஆகிய மாதங்கள் தக்காளி பயிர் நடவு செய்ய உகந்த காலம் ஆகும். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் கொன்ட நிலம் தக்காளி சாகுபடிக்கு ஏற்றது ஆகும். தக்காளிப் பழத்தில் வைட்டமின் ‘ஏ’ ‘சி’ போன்ற உயிர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. தக்காளிப் பயிரானது பூஞ்சை, பாக்டீரியா மற்றும் […]

July 30, 2020 editor news