32°C

Editor

கபினி அணையில் திடீரென தண்ணீர் திறப்பு செய்திகள்

கபினி அணையில் திடீரென தண்ணீர் திறப்பு

கபினி அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒக்கேனக்கல் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1200 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. கர்நடக அரசு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. நேற்று காலை 300 கனஅடியாக இருந்த தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்ந்து காலை 7 மணி நிலவரம்படி 1200 கனஅடியாக உயர்ந்துள்ளது. கூடுதல் அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.. Anbalagan Veerappan

February 20, 2018 Editor
ரேசன் கடைகளில் கம்பு!? செய்திகள்

ரேசன் கடைகளில் கம்பு!?

நம் நாட்டில்  விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று. அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம் கொண்ட தானியம் கம்பு !! அரிசியை விட கிட்டத்தட்ட 8 […]

February 17, 2018 Editor
காவிரி நீர் விவகாரம்: தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் செய்திகள்

காவிரி நீர் விவகாரம்: தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர்

 காவிரி வழக்கில்  சுப்ரீம் கோர்ட் 177.25 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.காவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக முடிவு எடுக்க, காவிரி நடுவர் மன்றம், 1990ல், அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தில் நீண்ட காலம் நடந்து வந்த வழக்கில், 2007ல், இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள், சுப்ரீம் […]

February 16, 2018 Editor
கூட்டுறவு கடன்களை எளிதாக வழங்க வேண்டும் : டெல்டா விவசாயிகள் கோரிக்கை மானியங்கள்

கூட்டுறவு கடன்களை எளிதாக வழங்க வேண்டும் : டெல்டா விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர்: கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் கேட்காமல் பயிர் கடன் வழங்க காவிரி டெல்டா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். சம்பா சாகுடியை தடையின்றி துவக்க கூட்டுறவு வங்கிகள் நகைகளை அடமானம் கேட்காமல் பயிர் கடன் தர வேண்டும் என விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து வழக்கம் […]

February 15, 2018 Editor
‘நானும் ஒரு விவசாயி’: கின்னஸ் முயற்சி! செய்திகள்

‘நானும் ஒரு விவசாயி’: கின்னஸ் முயற்சி!

உணவு சார்ந்த இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு உருவாக்கும் பொருட்டு `நானும் ஒரு விவசாயி’ என்கிற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கான மோஷன் போஸ்டர்  இன்று (ஆகஸ்ட்28) சமூக வலைதளங்களில் வெளியானது. முன்னர்  நடிகர் கமல்ஹாசன் மற்றும் `பாலம்’ கல்யாண சுந்தர் ஆகியோர் இணைந்து நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளையை தொடங்கிவைத்தனர். இதன் மூலமே இந்த சாதனையை நிகழ்த்த உள்ளனர். இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 29ஆம் […]

February 15, 2018 Editor
தமிழ்நாட்டில் டிராக்டர் விற்பனை 85% வளர்ச்சி செய்திகள்

தமிழ்நாட்டில் டிராக்டர் விற்பனை 85% வளர்ச்சி

தென்னிந்திய மாநிலங்களில் நடப்பாண்டில் நிலவும் சாதகமான பருவநிலையால் டிராக்டர் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நடப்பாண்டில் தமிழகத்தில் டிராக்டர் விற்பனையில் 85 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளோம் என்று சோனாலிகா நிறுவனம் தெரிவித்துள்ளது,. சென்னையில் நேற்று சோனாலிகா `சிக்கந்தர்’ என்கிற டிராக்டர் மாடலை அறிமுகப்படுத்தி பேசிய அந்த நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் முதித் குப்தா இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது, மோசமான பருவநிலையால் கடந்த இரண்டு நிதியாண்டுகளாக டிராக்டர் விற்பனை சரிவைக் கண்டிருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் […]

February 14, 2018 Editor
மா, சீதா, திராட்சை, நார்த்தைக்கு முளை ஒட்டுக்கட்டுதல் தினம் ஒரு தகவல்

மா, சீதா, திராட்சை, நார்த்தைக்கு முளை ஒட்டுக்கட்டுதல்

முளை ஒட்டு கட்ட ஏற்ற பயிர்கள்: மா, சீதா, திராட்சை, நார்த்தை வேர்ச்செடியிலுள்ள மொட்டுப்பகுதியை நீக்கி விட்டு அந்த இடத்தில் தேர்வு செய்த ஒட்டுச் செடியின் மொட்டுப் பகுதியை பொருத்துவதற்கு முளை ஒட்டுக்கட்டுதல் அல்லது மொட்டுக் கட்டுதல் (Budding) என்று பெயர். மொட்டுக்கட்டுதல் ஐந்து வகைகளில் செய்யப்படுகிறது. வேர்ச்செடியின் தண்டுப்பகுதியிலுள்ள வெட்டு வாயும் ஒட்டுச்செடியின் ஒட்டுப்பகுதியும் ஒன்றாக பொருந்துமாறு இருக்க வேண்டும். 1.கேடய முளை ஒட்டு 2.சதுர வடிவ முளை ஒட்டு 3.நீள் பட்டை வடிவ முளை ஒட்டு 4.குழல் முளை ஒட்டு 5.வளைய முளை ஒட்டு 1.கேடய […]

February 13, 2018 Editor
உழவு- ஒன்பதாம் அதிகாரம் தொடர்

உழவு- ஒன்பதாம் அதிகாரம்

“கொம்பால் உழுது , குண்டியால் மாமடி.” “புல்லற உழாதே.” நல்ல விதைப் பதத்துக்கு நிலத்தை தயாராக்குவதற்கு உழுதல் பிரதான தொழில் என்று இதுவரையில் விவரித்தோம். இவ்வுழவால் விதைப்பு நிலத்தை ஆழமாயும் மிருதுவாகவும் ஈரம் தாங்கும்படிக்கும் கூடியமட்டில் துப்புரவாயிருக்கும் படிக்கும் செய்யலாம். ஆயினும் நிலத்தை அக்காலத்தில் உழுதாலும் காலநிலை அனுகூலமாய் இல்லாமலிருந்தாலும் மிருதுவான நிலைமைக்குக் கொண்டுவர முடியாது. நிலத்தை விதைபதத்திற்குச் சுலபமாக்கும் பொருட்டும் விதைக்கப்படும். விதை பூமியில் ஒரே ஆழத்தில் சுலபமாய் பதியும் பொருட்டும் மேல்தரை போதுமான வரை […]

February 13, 2018 Editor