32°C

Editor

மழைக்கால நோய்களும் தீர்வுகளும்! கால்நடை

மழைக்கால நோய்களும் தீர்வுகளும்!

மடி வீக்கம்: கறந்த பால், வெள்ளை நிறத்தில் இல்லையென்றால், மாட்டுக்கு மடியில் ஏதோ பாதிப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் மடி வீக்கமாக இருக்கும். காம்புகளில் வெடிப்பு இருக்கும். காம்பையோ, மடியையோ தொட்டால் உதைக்கும். இது மடிவீக்க நோய்க்கான அறிகுறி. 250 கிராம் சோற்றுக் கற்றாழையைத் துண்டு துண்டாக நறுக்கி, மிக்ஸி அல்லது உரலில் இட்டு, 50 கிராம் மஞ்சள் தூள், கொட்டைப்பாக்கு அளவில் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தால்… சிவந்த நிறத்திலான […]

July 12, 2014 Editor
காய்கறிகளை எப்படி வாங்கலாம்…. காய்கறி வகைகள்

காய்கறிகளை எப்படி வாங்கலாம்….

இப்போ நான் சொல்லப் போற விஷயத்தை, விவசாயிகள், பொதுமக்கள்னு எல்லாருமே மனசுல ஏத்தி வெச்சுக்கோங்க. அதாவது, தினசரி நாம உபயோகப்படுத்துற காய்கறிகள பத்திதான் இப்ப சொல்லப் போறேன்.            விவசாயிகள், சரியான பக்குவத்துல காய்கறிகள அறுவடை செஞ்சாதான், சந்தையில நல்ல விலை கிடைக்கும். மக்களுக்கும், கொடுக்குற காசுக்கு தரமான, முத்திப் போகாத காய்கறிகள் கிடைக்கும். அப்பதானே அவங்களுக்கும் பிரயோஜனம்.            வாழைத்தண்டு வாங்கும்போது, மேல்பகுதியில அதிகமா நார் இருக்கக் கூடாது. தண்டுப் பகுதி சிறுத்து இருக்கணும். பெரிய […]

July 12, 2014 Editor
கேழ்வரகு (ராகி) பகோடா சிறுதானிய சமையல்

கேழ்வரகு (ராகி) பகோடா

கால்சியம் நிறைஞ்ச கேழ்வரகு…!            சிறுதானிய உணவு வகைகளைக் குறித்து சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சுமதி பகிர்ந்து கொண்ட தகவல்கள்.            “கேழ்வரகுல தோசை, அடை செஞ்சு சாப்பிட்டா, அவ்ளோபிரமாதமா இருக்குது. அரிசியை வெச்சு செய்யற எல்லா பலகாரங்களையும்… சிறுதானியங்கள்லயும் செய்ய முடியும். கேழ்வரகு அவலை வெச்சு, உப்புமா செஞ்சும் சாப்பிட முடியும். கேழ்வரகுல அதிக கால்சியம் சத்துக்கள் இருக்கறதால, எலும்புகளுக்கு நல்லது. அதனால உடம்புக்குக் கூடுதல் பலம் கிடைக்குது. தேவையான கால்சியம் சத்துக்கள் […]

July 12, 2014 Editor
சோளப் பாயசம் சிறுதானிய சமையல்

சோளப் பாயசம்

ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ… சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி சாப்பிடுவதுதான் கெளரவம் என்கிற நினைப்பில், ஏழைகள் கூட சிறுதானியங்களை மறக்க ஆரம்பித்ததுதான்… இன்றைக்கு ஏழை, பணக்காரர் என்று அனைவருக்குமே பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக மாறிவிட்டிருக்கிறது. இத்தகையச் சூழலில், சிறுதானியங்களை, நவீனச் சூழலுக்கு ஏற்ப நாவுக்கு ருசியாக சமைத்துச் சாப்பிடுவதற்கு வழிகாட்ட வருகிறது… இந்த சமையல் பகுதி!  இந்த இதழைப் பரிமாறுபவர் சந்தியா… தேவையானப் பொருட்கள்: நாட்டுச் […]

July 12, 2014 Editor
பச்சை மிளகாய்+பூண்டுக் கரைசல்! இயற்கை உரம்

பச்சை மிளகாய்+பூண்டுக் கரைசல்!

காம்பு நீக்கம் செய்யப்பட்ட 3 கிலோ பச்சை மிளகாயை அரைத்து, 3 லிட்டர் தண்ணீரில் இட்டு 24 மணி நேரம் வைக்க வேண்டும். கால் கிலோ வெள்ளைப்பூண்டை இடித்து, 100 மில்லி மண்ணெண்ணெயில் இட்டு, 24 மணி நேரம் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு கரைசலையும் ஒன்றாகக் கலந்து, 10 லிட்டர் அளவுக்கு வரும் வரை தண்ணீர் சேர்த்து, 100 கிராம் காதி சோப்பைக் கரைத்துவிட வேண்டும். இதை, பத்து லிட்டர் டேங்குக்கு 500 மில்லி என்ற […]

July 12, 2014 Editor
வேப்பங்கொட்டை+பூண்டுக் கரைசல்! இயற்கை உரம்

வேப்பங்கொட்டை+பூண்டுக் கரைசல்!

வேப்பங்கொட்டை- 5 கிலோ, காரமான வெள்ளைப்பூண்டு- அரை கிலோ இரண்டையும் ஆட்டு உரலில் இட்டு, இடித்து (எக்காரணம் கொண்டும் கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ அரைக்கக் கூடாது)… காட்டன் துணியில் இறுக்கமாகக் கட்டி, 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊற வைத்தால், கரைசல் தயார். இதனுடன் 100 கிராம் காதி சோப்பைக் கரைத்து, பத்து லிட்டர் டேங்குக்கு 500 மில்லி என்கிற விகிதத்தில் கலந்து, மாலை மூன்று மணிக்குப் பிறகு தெளிக்க வேண்டும். பூச்சிகளின் தொந்தரவு […]

July 12, 2014 Editor
செம்மறி ஆடுகள் தரும் மூன்றுவித லாபம்….! கால்நடை

செம்மறி ஆடுகள் தரும் மூன்றுவித லாபம்….!

        ஆட்டு எரு: ‘மாட்டு எரு மறுவருஷம் பிடிக்கும்… ஆட்டு எரு அப்பவே பிடிக்கும்’ என்றொரு பழமொழி உண்டு. இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை, நம்மாழ்வார் பயிற்சி மூலமாக உணர்ந்திருக்கும் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அடுத்துள்ள அம்மாபாளையம் கிராமத்தில் இருக்கும் மூர்த்தி-ஜெயசித்ரா இதை சிறப்பாகப் பயன்படுத்தியும் வருகின்றனார்.              இதைப் பற்றி பேசும் மூர்த்தி…”உரம் போடுறா தோட, களையையும் எடுக்குற வேலையைச் செய்துட்டு… சம்பளமே வாங்கிக்காத ஜீவன்கள்தான் செம்மறி ஆடுகள். காலையில 9 […]

July 12, 2014 Editor
தெம்பு தரும் தேங்காய் தண்ணீர்! இயற்கை உரம்

தெம்பு தரும் தேங்காய் தண்ணீர்!

          பூக்கள் ஒரே சீராகவும், அதேசமயம் பெரியதாகவும் வளர்ந்து இருந்தால்தான் நல்ல விலை கிடைக்கும். இதற்கு தேங்காய் தண்ணீர் வைத்தியம் கை கொடுக்கும். முற்றிய தேங்காயின் தண்ணீர் 50 லிட்டர் அளவு எடுத்துக் கொண்டு, மாதம் இரண்டு தடவை தெளிப்புநீர் வழியே செடிகள் நன்றாக நனையும்படி கொடுக்க வேண்டும். இதிலுள்ள இனிப்புத் தன்மை, தேனீக்களை அதிக அளவில் செடிகளின் பக்கம் ஈர்த்து, அயல் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்துவதால், அழகான பெரிய பூக்கள் […]

July 12, 2014 Editor
மூவிலைக் கரைசல்! பயிர் பாதுகாப்பு

மூவிலைக் கரைசல்!

                            வேப்பிலை, ஊமத்தை இலை, எருக்கன் இலை என இம்மூன்று இலைகளும் கைக்கு எட்டும் தூரத்துக்குள்ளாகவே கிடைக்கக் கூடிய இலைகள். இவை மூன்றையும் தலா 10 கிலோ அளவில் பறித்துவந்து, அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றப்பட்ட தொட்டியில் சேர்த்து ஊறவைக்க வேண்டும். தொட்டி நிழலில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது.           […]

July 12, 2014 Editor
பூவாடல் நோய்க்கு மருந்து….. பயிர் பாதுகாப்பு

பூவாடல் நோய்க்கு மருந்து…..

வேப்பெண்ணெய் புகை… பூ வாடலுக்குப் பகை!  பட்டாம்பூச்சிப் பாசன முறையில் விவசாயம் செய்வதால், நீர்வழியில்தான் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டிகள் தரப்படுகின்றன். தினந்தோறும் ஒரு மணி நேரம் பட்டாம்பூச்சிப் பாசனம் மூலமாக செடிகள் நன்கு நனைவதால்… பேன், அசுவிணி மாதிரியான பூச்சித் தாக்குதல் தடுக்கப்படுகிறது. மாதம் ஒரு முறை, 100 லிட்டர் தண்ணீரில் சுத்தமான வேப்பெண்ணெய் 2 லிட்டர் அளவுக்குக் கலந்து புகைபோல் தெளிப்பதன் மூலமாக பூவாடல் நோய் கட்டுப்படுகிறது.         […]

July 12, 2014 Editor