32°C

காவிரி நீர் விவகாரம்: தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர்

Editor Tamilnadu Published: February 16, 2018 2 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:
 காவிரி வழக்கில்  சுப்ரீம் கோர்ட் 177.25 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.காவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக முடிவு எடுக்க, காவிரி நடுவர் மன்றம், 1990ல், அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தில் நீண்ட காலம் நடந்து வந்த வழக்கில், 2007ல், இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இது தொடர்பான அனைத்து மனுக்களையும், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்தது. வழக்கில் 2017 செப்.,20 ல் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், காவிரி நீரை உரிமை கோர எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை. காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும். தமிழகத்தில் 20 டி.எம்.சி., நிலத்தடி தண்ணீர் உள்ளது. கர்நாடகாவிற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டில் மாற்றமில்லை. என உத்தரவிட்டுள்ளது. தமிழகம் 264 டிஎம்சி தண்ணீர் கேட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் தண்ணீரின் அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளது. 2007 ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இனிமேலாவது தமிழக அரசியல்வாதிகள் நீர் நிலையில் தமிழகம் தன்னிறைவு அடைய நிறைய திட்டங்களை செயல்படுத்தவேண்டும் ,

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க