Skip to content

சுகாதார நலன் மிகுந்த  பிளாக் ராஸ்பெர்ரி

லண்டன்: ராஸ்பெர்ரி அல்லது ப்ளாக்பெர்ரி  மற்ற  பழங்களை விட அதிக சுகாதார நலன்கள் மிகுந்தது என்று ஒரு புதிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பழங்கள் ஆற்றல் மிகுந்த ஆக்சிஜனேற்ற எதிர்பொருள்களாகும். நோய் உண்டாக்கும் அடிப்படை கூறுகளை குறைக்கும் அல்லது பாதிப்புகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றும் தன்மை உடையது. இதனால் இயற்கையாகவே உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. இது இதய நோய், புற்றுநோய், மூட்டுவலி, பக்கவாதம் அல்லது சுவாச நோய் போன்ற நோய்களிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பொதுவாக கோஜி, அகெரோலா அல்லது அகாய் பெர்ரி  என்று அழைக்கப்படுவதால் சூப்பர் உணவு  என பெயர் பெற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.

மத்திய ஐரோப்பாவில் இருக்கும் கருப்பு ராஸ்பெர்ரி அதிக சுகாதார நலன்கள் மிகுந்தது என்று க்ராக்வ், போலந்து, விவசாயம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு புதிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மற்ற பழங்களை விட கருப்பு ராஸ்பெர்ரி பழம் மூன்று மடங்கு அதிகமாக ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருட்களை கொண்டுள்ளது என்பதையும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

http://timesofindia.indiatimes.com/world/europe/Black-raspberries-is-new-superfood/articleshow/50431972.cms

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply