32°C

editor news

நெற்பயிரில் துத்தநாக சத்துப்பற்றாக்குறையும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

நெற்பயிரில் துத்தநாக சத்துப்பற்றாக்குறையும் அதன் மேலாண்மை முறைகளும்

உலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நடப்பு காரிப்பருவத்தில் கடந்த 16ஆம் தேதி வரை 398.64 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தின் நெல் கொள்முதலை ஒப்பிடும்போது இது 74.24 லட்சம் டன் அதிகமாகும். தமிழகத்தை பொருத்தவரை தற்போது பருவமழை நன்கு பொழிந்துள்ளதால்  காவிரி டெல்டா பகுதிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெல் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்களில்  துத்தநாக சத்துப்பற்றாக்குறை அதிகளவில் தென்படுகின்றது. ஒரு தாவரம் […]

December 28, 2020 editor news
தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாதனைத்தமிழர்! ஜவகர்அலி கருத்துக்களம்

தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாதனைத்தமிழர்! ஜவகர்அலி

யார்இந்தஜவகர்அலி? பிலிப்பைன்ஸில்உள்ளசர்வதேசநெல்ஆராய்ச்சிநிறுவனத்தில்முதன்மைவிஞ்ஞானியாகபணியாற்றும்இவர்சிவகங்கைமாவட்டத்தில்பரமக்குடிஅருகேஉள்ளஇளையாங்குடியில்பிறந்தவர். அப்பா, ஈ.ஏ. சித்திக், பாரதத்தின்தலைசிறந்தநெல்ஆராய்ச்சியாளர், இந்தியவேளாண்ஆராய்ச்சிகுழுமத்தின்துணைப்பொதுஇயக்குனராகபணியாற்றியவர். குறிப்பாகநவீனஉயர்விளைச்சல்தரும்பாசுமதிநெல்இரகங்களைஉருவாக்கியவர். அம்மா, எஸ். இ. பாத்திமுத்துதமிழ்கவிஞர் மற்றும் எழுத்தாளர். தன்பள்ளிப்படிப்பைடெல்லியில்முடித்தஜவகர்அலிகல்லூரிப்படிப்பாகத்தேர்ந்தெடுத்ததுஇளமறிவியல்விவசாயத்தை. பஞ்சாப்பல்கலைக்கழகத்தில்உதவித்தொகையுடன் 1988–ல்இளமறிவியல்முடித்துபட்டமேற்படிப்புக்குமரபியல்துறையைதேர்ந்தெடுத்தார்ஜவகர்அலி. புதுதில்லியில்உள்ளஐ.ஏ.ஆர்.ஐஎனும்இந்தியவேளாண்ஆராய்ச்சிநிறுவனத்தில்ஊக்கத்தொகையுடன் 1990–ல்படித்துபின்நெல்லில்ஆண்மலட்டுத்தன்மைகுறித்ததன்முனைவர்பட்டஆய்விற்காகமதிப்புமிக்கபண்டிதஜவகர்லால்நேருவிருது, கையோடுராக்பெல்லர்பவுண்டேஷனின்திட்டத்தில்இணைஆய்வாளராகபணியாற்றிபின்பி.டி.எப்எனும்முனைவர்பட்டபிந்தையஆய்வையும்முடித்துதமிழகவேளாண்பல்கலையின்உறுப்புக்கல்லூரியானதிருச்சியில்உள்ளஅன்பில்தர்மலிங்கம்வேளாண்கல்லூரியில்உதவிப்பேராசிரியராகபணியில்சேர்ந்துதமிழகஉப்பு-உவர்நிலங்களுக்குஏற்றநெல்கலப்பினஆய்வையும், ஆண்மலட்டுத்தன்மைஆய்வையும்சிறப்பாகமுடித்தார். ஜவஹர்அலிஅவர்கள்நெல்ஆய்வு வயலில் 1995 ஜவகருக்குமுக்கியவருடம். மருந்தாளுநரானநசீமாபானுவைகரம்பிடித்தார். காசநோய்எதிர்ப்புகுறித்தமுதுநிலைஆய்வைமேற்கொண்டநசீமாகணவரின்ஆய்விற்குமுழுஒத்துழைப்பைநல்கபின்எல்லாமேஏறுமுகம்தான்!. இரண்டாயிரம்ஆண்டில்சர்வதேசநெல்ஆராய்ச்சிநிறுவனத்தில்திட்டவிஞ்ஞானியாகஇணைந்தஜவகர், ஈரானியநெல்ஆய்வுநிறுவனத்துடன்இணைந்துகலப்பினநெல்மற்றும்மரபணுஆய்வுகளைமேற்கொண்டுஆறுஉயர்விளைச்சல்வீரியஒட்டுஇரகங்களைகண்டறிந்தார். 2009-ல், ஆப்பிரிக்க-ஆசியநாடுகளின்ஏழைவிவசாயிகள்வாழ்வுமேம்பட, சீனவிவசாயஅறிவியல்அகாடெமியும், பில்-மெலின்டாகேட்ஸ்பவுண்டேஷனும்இணைந்துமேற்கொண்ட “கிரீன்சூப்பர்ரைஸ்” ஆய்வின்ஒருங்கிணைப்பாளராகபொறுப்பேற்றுஒன்பதேஆண்டுகளில் 27 அதி-விளைச்சல்நெல்இரகங்களைவெளியிட்டுசாதனைபடைத்தார். பிலிப்பைன்ஸ்நாட்டில்மட்டும்ஏறக்குறைய 10 லட்சம்ஹெக்டேரில்பயிரிடப்படும் “ஜி.எஸ்.ஆர் 8” இரகமானதுபன்னாட்டுவிவசாயிகளின்வாழ்வில்மறுமலர்ச்சிஏற்படுத்தியுள்ளதுஎன்பதுமிகைக்கூற்றல்ல. தற்காலசூழலியல்மாறுபாட்டின்விளைவுகளானவறட்சி, வெள்ளம், உப்புத்தன்மையைதாங்கிமற்றும்இலைக்கருகல்நோய்களுக்குஎதிர்ப்புத்திறன்கொண்டுஹெக்டேருக்கு 8.5 டன்விளைச்சலை 108 நாட்களில்அள்ளித்தரும்நடுத்தரசன்னஇரகமாகும். ஜவகர்அலியின்சீரியவழிகாட்டலில்மேலும் 106 ஜி.எஸ்.ஆர். நெல்இரகங்களைஉருவாக்கியுள்ளதுஇவரதுகுழு. இதில் […]

December 28, 2020 editor news
டிஜிட்டல் விவசாயம் (பகுதி – 1) தொடர்

டிஜிட்டல் விவசாயம் (பகுதி – 1)

இது டிஜிட்டல் யுகம். டிஜிட்டல் கருவிகளும், மென்பொருட்களும், தகவல் தொடர்பு துறையும் இணைந்து ஒரு புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருகின்றன. செல்போனும், இன்டர்நெட்டும், இல்லாமல் கைகளை பார்ப்பது கடினம். ஒரு குடும்பத்தில் உணவு எவ்வளவு அத்தியவசியமோ, அதே அளவு அத்தியாவசியமாகிவிட்டது செல்போனும், இன்டர்நெட்டும். ஒரு காலத்தில் இந்த டிஜிட்டல் கருவிகள் பணகாரர்களுக்குறியது, ஆனால் இன்று சாதாரண உழைக்கும் மக்களிடம் இந்த கருவிகள் சென்று சேர்ந்துவிட்டது. ஏதோ ஒன்றாக சேர்ந்து விடவில்லை, மாறாக அவர்கள் வாழ்வையும் பொருளாதாரத்தையும் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. […]

December 15, 2020 editor news
விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ஐ.சி.டி) பங்கு தொழில்நுட்பம்

விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ஐ.சி.டி) பங்கு

தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தை தொழில்நுட்பங்களின் கூடை என வரையறுக்கலாம். அவை சேமித்தல், தகவல்களை செயலாக்குதல் அல்லது தகவல் பரப்புதல் / தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றில் துணைபுரிகின்றன. பொதுவாக வேளாண் வளர்ச்சிக்கும், குறிப்பாக விவசாய விரிவாக்கத்திற்கும் தகவல் தொழில்நுட்பங்களின் பொருத்தம் இந்தியா போன்ற நாட்டில் மிக அதிகம். விவசாயத்தில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு பெருகிய முறையில் அவசியம். மின்-வேளாண்மை என்பது மேம்பட்ட தகவல் மற்றும் தகவல் தொடர்பு செயல்முறை மூலம் விவசாய மற்றும் கிராமப்புற […]

December 15, 2020 editor news
உளுந்து பயிரைத் தாக்கக்கூடிய உழவனின் கண்காணா எதிரி பயிர் பாதுகாப்பு

உளுந்து பயிரைத் தாக்கக்கூடிய உழவனின் கண்காணா எதிரி

உளுந்து உற்பத்தியிலும் அதை பயன்படுத்துவதிலும் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. பருப்பு வகைகளுள், உளுந்து 10 முதல் 12 சதவீதம் பயிரப்படுகிறது. இதில் புரதச்சத்து அதிக அளவில் இருப்பதால் உணவின் முக்கிய அங்கமாக விளங்குகிறது.  உளுந்து குறுகியகால பயிராக இருப்பதாலும், வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தி மண்ணின் வளத்தை மேம்படுத்துவதாலும், அடுத்த பயிருக்கு தேவையான உரச்செலவை குறைப்பதோடு, அதிக மகசூல் தருவதாலும் இன்றைய சூழலில் உளுந்து பயிரிட பெரும்பாலான விவசாய பெருமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உளுந்து […]

December 15, 2020 editor news
தொட்டியில் ரோஜா வளர்ப்பு மாடி வீட்டுத் தோட்டம்

தொட்டியில் ரோஜா வளர்ப்பு

முன்னுரை உள்ளங்களை கொள்ளை கொள்ளும் வசீகரமான அழகாலும், நீண்ட மலர்க் காம்புகளில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் வனப்பாலும், ‘மலர்களின் ராணி’ என்று சிறப்பித்துக் கூறப்படும் ரோஜா மலரானது, முக்கியமான ஒரு அழகு மலர்ப்பயிராகும். பெரிய பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் வீட்டுத் தோட்டங்களிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் தொட்டிகளில் வளர்ந்து, மலர்ந்த  ரோஜாக்கள், நடைபாதைகளின் இரு பக்கங்களிலும், வராண்டா, போர்டிக்கோ, மாடிப்பகுதி என வீட்டின் பல்வேறு பகுதிகளில் பலவாறு வைக்கப்பட்டு அழகு சேர்க்கப் பயன்படுகின்றன. இத்தகைய கவின்மிகு ரோஜாவை […]

December 15, 2020 editor news
மருத்துவ குணம் குன்றாத குதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள் தானியங்கள்

மருத்துவ குணம் குன்றாத குதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள்

குதிரைவாலி (Barnyard Millet) உலகின் எல்லா இடங்களிலும் பயிரிடப்படும் ஒரு சிறுதானியம். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது. குதிரைவாலியானது வறட்சி, வெப்பம் மற்றும் சாதகமற்ற நிலையை எதிர்க்கும் தன்மை கொண்டவை. குதிரைவாலி பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்திலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குதிரைவாலியானது இரும்புச்சத்து, புரதம், மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்தியளவில் மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கர்நாடாக, மகாராஷ்டிரம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழ் […]

December 15, 2020 editor news
கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போசர்) பயன்பாடு தொழில்நுட்பம்

கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போசர்) பயன்பாடு

இயற்கை வேளாண்மையில் முக்கிய அம்சங்களில் ஒன்று மண்ணின் வளத்தை பெருக்குவதாகும். இதற்காக பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல், மீன்அமிலம் போன்ற பலவகையான இடுபொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவற்றை தயார் செய்யத் தேவையான மூலப்பொருட்களை சேகரிக்க அதிகநேரம் செலவாகிறது. ஆகவே மிககுறைந்த செலவில் எளிமையான முறையில் இடுபொருளைத் தயார்செய்ய வேஸ்ட் டீகம்போசர் என்ற பொருளை வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர். இந்த வேஸ்ட் டீகம்போசர் என்றால் என்ன? நாட்டு மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களை […]

December 15, 2020 editor news
மியாவாக்கியும் நகரமயமாக்கலும் செய்திகள்

மியாவாக்கியும் நகரமயமாக்கலும்

உலகில் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், தொழிற்சாலை பெருக்கம் மற்றும் பருவநிலை மாற்றத்தாலும் மக்கள் நகரங்களை நோக்கி தங்கள் வாழ்வாதாரத்திற்காக வருகின்றனர். ஆதலால் நகரங்கள் விரிவடைகிறது. இதன் காரணமாக வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் மக்கள் நெருக்கமாக வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். வாகனப்பெருக்கத்தால் காற்று மாசுபாடு ஓர் முதன்மை பிரச்சனையாக எழுந்துள்ளது. 2019-ம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் 16.7 லட்சம் மக்கள் காற்று மாசுப்பாட்டால் இறந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் காற்று மாசை கட்டுப்படுத்த பல சட்டங்கள் […]

December 15, 2020 editor news
கேழ்வரகில் கொள்ளை நோயும் அதன் மேலாண்மை முறைகளும் தானியங்கள்

கேழ்வரகில் கொள்ளை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இந்நோய் குலை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. மலேசியா, உகாண்டா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்நோய் இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் வருடா வருடம் தோன்றி அதிக சேதம் விளைவிக்கிறது. நோய்க்காரணி இந்நோய் பைரிகுலேரியா கிரீசியே  என்ற ஒரு வகைப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இப்பூசணத்தின் இழைகள் குறுக்குச் சுவர்களைக் கொண்டும், முதலில் நிறமற்றும் பின்னர் இளம் ஆலிவ் பழுப்பு நிறத்திலும் தென்படும். நோயின் அறிகுறிகள் பயிரின் எல்லா வளர்ச்சிப் பருவத்திலும் இந்நோய் தாக்கக் கூடியது. […]

December 15, 2020 editor news