32°C

Editor

பால் குடிப்பதால்  எலும்புகள்   வலுவாவதில்லை செய்திகள்

பால் குடிப்பதால்  எலும்புகள்   வலுவாவதில்லை

நாம் தினமும் பால் குடிப்பதால் நம்முடைய எலும்புகள்  வலுவாகவும், ஆரோக்கியமாகவும்  இருக்கும்  என்று நினைத்து  தினமும்  நாம் பால் குடிப்பதை வழக்கமாக எடுத்துக் கொள்கிறோம். இவ்வாறு நாம் நினைப்பது தவறு என்று  ஒரு புதிய ஆய்வை British Medical Journal ( BMJ)   வெளியிட்டுள்ளனர்.  நாம் அதிகமான பாலை உட்கொண்டால்  எலும்பு முறிவுகளிலிருந்து நம்மை  பாதுகாத்துக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறான  ஒன்றாகும் . மேலும் இதனால் இறப்பு விகிதமும்  அதிகமாகுகிறது  என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஸ்வீடனில் உள்ள […]

August 27, 2015 Editor
நெல் உமியிலிருந்து டயர் செய்திகள்

நெல் உமியிலிருந்து டயர்

கிளீவ்லண்ட்டில் உள்ள  குட்இயர் என்ற டயர் நிறுவனம் உலகின் மிகப்பெரிய டயர் நிறுவனமாகும். அந்த நிறுவனத்தை சார்ந்த உற்பத்தியாளர்கள் சுற்றுசூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மேலும்  அந்த நிறுவனம் நெல் உமியில் இருந்து டயரை உருவாக்கியுள்ளது. விவசாயிகள் ஓரு வருடத்திற்கு 700 மில்லியன் டன் நெல்லை அறுவடை  செய்கிறார்கள். நெல்லில் இருந்து நிறைய நெல் உமி கழிவுகள்  வெளிவருகிறது.  அந்த நெல் உமி கழிவுகளை ஆற்றலுக்காக  எரிக்கிறார்கள். பிறகு அந்த உமியில் மிஞ்சுவது […]

August 26, 2015 Editor
காகித கழிவில் இருந்து செங்கல் செய்திகள்

காகித கழிவில் இருந்து செங்கல்

காகித கழிவில் இருந்து செங்கல் : ஜெயினில் உள்ள ஸ்பென் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காகித கழிவிலிருந்து செங்கல்லை உருவாக்கினர். இந்த செங்கல் மலிவானதாகவும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றதாகவும் அமையும். இந்த செயல்முறையானது காகித ஆலையிலிருந்து நிலத்திற்கு திரும்புகிறது. மற்ற வகை செங்கல் செய்வதை ஓப்பிட்டு பார்க்கும் போது காகித கழிவிலிருந்து செய்யப்படும் செங்கல்லை தயாரிப்பது மிகவும் எளிது. இந்த செங்கல்லை மிக குறைவான நேரத்திலேயே செய்து முடிக்கலாம். காகித கழிவிலிருந்து செய்யப்படும் செங்கல்லால் பணத்தையும், ஆற்றலையும் சேமிக்கலாம் […]

August 26, 2015 Editor
தேவைக்கேற்ப தண்ணீர் : தக்காளி செடிக்கு எளிதான தொழில்நுட்பம் இயற்கை விவசாயம்

தேவைக்கேற்ப தண்ணீர் : தக்காளி செடிக்கு எளிதான தொழில்நுட்பம்

மார்க்வெஸ் என்பவர் சில வருடங்களாக தக்காளி செடியை பயிர் செய்வதற்கு ஆலோசனை செய்து வந்தார்.அவர் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி தக்காளி செடியை உற்பத்தி செய்ய முடியும் என்பதை உணர்ந்தார். மேலும் இந்த விதியை பயன்படுத்தி வீட்டிலேயே எளிய முறையில் தக்காளி செடியை பயிர் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார். இயற்பியலின் பாயில் விதியை பயன்படுத்தி இந்த தானியங்கி பாசன அமைப்பு முறையை செய்தார். இதற்காக அவர் எளிய மற்றும் மலிவான பொருட்களை பயன்படுத்தினார். தேவையான பொருட்கள்: ஒரு […]

August 24, 2015 Editor
இயற்கை விவசாயப் போட்டி செய்திகள்

இயற்கை விவசாயப் போட்டி

விவசாய நண்பர்களுக்கு வணக்கம், நமது அன்றாட வாழ்க்கையில் நிறைய பொருட்கள் கழிவுகளாக வீணாகின்றன. அதிலும் குறிப்பாக வேளாண்மை சார்ந்த பொருட்களிலிருந்து மிகவும் அதிகமான பொருட்கள் கழிவுகளாக வீணாகுகின்றன. அந்த கழிவுகளினால் நம்முடைய சுற்றுசூழல் மிகவும் மாசுபடுகிறது. அதனால் நம்முடைய உடல் நிலை பாதிப்படைந்து வாழ்க்கை நிலையும் பாதிக்கப்படுகிறது. அந்த கழிவுகளை மறுசுழற்சி செய்து நமக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களாக செய்து பயன்படுத்தினால், சுற்றுசூழல் மாசுபாட்டை தடுத்து நமது உடல்நிலையையும் பாதுகாக்கலாம் என்று கருதி நமது விவசாய […]

August 24, 2015 Editor
விவசாய கழிவிலிருந்து உணவு பெட்டி செய்திகள்

விவசாய கழிவிலிருந்து உணவு பெட்டி

ஜெர்மன் வியாபார கூட்டாளிகள் மற்றும் ஜில்போ தொழில்நுட்பம் இரண்டும் இணைந்து Micro and Nano Fibrillated Cellulose (M/NFC) – ஐ அடிப்படையாகக் கொண்டு கோதுமையின் வைக்கோலில் இருந்து உணவு பெட்டி தயாரிக்கின்றனர். லிங்கோ செல்லுலோசிக் ஃபைபர் என்ற மூலப்பொருள் உணவு பெட்டியை தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த பெட்டியை தயாரிக்க எந்த ஒரு சேர்ப்பான்களையும் பயன்படுத்துவதில்லை. விவசாய கழிவின் மூலம் உணவு பெட்டியை உணவு துறை வடிவமைப்பாளர்கள் வடிவமைக்கிறார்கள். இந்த பெட்டி வலுவான மற்றும் […]

August 24, 2015 Editor
விவசாய கழிவு = வீட்டு உபயோக பொருட்கள் செய்திகள்

விவசாய கழிவு = வீட்டு உபயோக பொருட்கள்

விவசாயிகளின் கவனத்திற்கு விவசாயம் சம்பந்தமான புதிய செய்திகளையும் ,புதிய தயாரிப்புகளையும் உங்களிடையே அறிமுகப்படுத்துவதில் விவசாயம், இணையதளம் பெரும் மகிழ்ச்சி கொள்கிறது. ஆனாலும் நாங்கள் கொடுக்கும் தகவல்களை நீங்கள் பரிசோதித்து பார்த்து அந்த தகவல்களை எங்களுடனும்,விவசாயிகளுடனும் பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நெல், மக்காச்சோளம் மற்றும் கிழங்கு வகைகள் ஆகியவற்றிலிருந்து வரும் விவசாய கழிவின் மூலம் விலை குறைவான கட்டுமான பொருட்கள் கதவு, ஜன்னல் (pannels) போன்ற பகுதிகளை செய்யலாம். நெல், மக்காச்சோளம் மற்றும் கிழங்கு போன்றவற்றை […]

August 22, 2015 Editor
வீட்டுக்குள் விவசாயம். . . . .! மாடி வீட்டுத் தோட்டம்

வீட்டுக்குள் விவசாயம். . . . .!

அசத்தலாக விற்பனை ஆகும் ஆபீஸ் கீரை! அரசு அலுவலகத்தில் கலக்கும் மாடித்தோட்டம் . . . நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் வகையில். . . வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. இதழ்தோறும் வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம் பிடிக்கின்றன. வீடுகளில் மட்டுமல்லமால் அலுவலகக் கட்டடங்களிலும் தோட்டம் அமைத்து சாதித்து வருகிறார்கள், கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள். அவர்களின் […]

August 20, 2015 Editor
வெள்ளாடு வளர்ப்பு (முதலுதவி சிகிச்சை) கால்நடை

வெள்ளாடு வளர்ப்பு (முதலுதவி சிகிச்சை)

வெள்ளாடு வளர்ப்பு தொழில் குறித்த தகவல்களை இங்கே காணலாம். பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த பயிரை வெள்ளாடுகள் உட்கொள்ளல், எதிர்பாராமல் பூச்சிக் கொல்லி மருந்துகள், தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டியில் கலந்து விடல், நச்ச்சுத்தன்மையுடைய செடிகளை மேய்ந்து விடுவதால் உடம்பில் நச்சுத்தன்மை ஏற்படலாம். இதற்கு முதலுதவியாக நஞ்சு அல்லது விஷம் வயிற்றில் தங்காமல் இருக்க உப்பு கரைசல் அல்லது சோப்பு கரைசலை வாய் வழியாக கொடுக்கலாம். மேலும் அடுப்பு கரியை பொடி செய்து தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். […]

August 18, 2015 Editor
தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழம் செய்திகள்

தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழம்

உலகின் முதல் முதலாக தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழத்தை குயின்ஸ்லேண்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் என்னும் இடத்தில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளர்கள், இந்த புதிய வகையான அன்னாச்சிப்பழத்தை உருவாக்கியுள்ளனர். 10 வருடங்களாக ஆராய்ச்சி செய்து இந்த புதிய வகை அன்னாச்சிப்பழத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த புதிய வகை அன்னாச்சிப்பழத்தில் குறைவான அமிலத்தன்மையும், அதிகமான சாறு, மணம் மற்றும் சுவையை கொண்டதாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.   மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

August 15, 2015 Editor