Skip to content

பயிரின் மகசூலை அதிகரிக்க முட்டை அமினோ அமிலம்

முட்டை அமினோ அமிலம் தாவரத்திற்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது மற்றும் இவை மண்ணின் வளத்தைப் பாதுகாத்து பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

தேவையான பொருட்கள்

  • 10 – முட்டை
  • 20 எலுமிச்சை பழச்சாறு
  • 250 – கிராம் வெல்லம்.

தயாரிப்பு முறை:

  • முதலில் 20 பழுத்த எலுமிச்சையை பிழிந்து ஒரு பிளாஸ்டிக் கொள்கலனில் எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு அந்த எலுமிச்சை சாற்றில் பத்து முட்டைகளை நன்கு மூழ்குமாறு பத்து நாட்கள் வைக்க வேண்டும்.
  • பத்து நாட்களுக்குப் பிறகு முட்டைகளை நன்கு உடைத்து அதனுடன் 250 கிராம் வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை பத்து நாட்கள் வரை வைக்கவேண்டும்.
  • பத்து நாட்களுக்குப் பிறகு திரவ பகுதியை தனி கொள்கலனில் வடிகட்டி அதை பயிரின் மேற்பரப்பில் வளர்ச்சி ஊக்கியாக தெளிப்பதற்கு பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை : 1 முதல் 2 மில்லி வரை முட்டை அமினோ அமிலத்தை எடுத்துக்

கொண்டு அதை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதற்கு பயன்படுத்தலாம்.

நன்மைகள்:

  • முட்டை அமினோ அமிலம் ஒரு நல்ல அங்கக திரவஉரமாகும். இது பயிரின் மேற்பரப்பில் தெளிப்பதால் பயிர்களின் வளர்ச்சி காலத்தில் வளரும் திறனை மேம்படுத்துகின்றது.
  • பின்பு இவை பயிரின் மகசூல் அதிகரிப்பதுடன் கீரைகள் மற்றும் காய்கறிகளின் நறுமணத்தையும் அதிகரிக்கின்றது.
  • முட்டை அமினோ அமிலத்தை பயிரின் மேற்பரப்பில் தெளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து வீணாவதை தவிர்க்க முடிகிறது.
  • இவ்வாறு இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த சாகுபடி செலவைக் குறைக்கிறது.
  • இது மண்ணுக்கு நன்மை பயக்கும் நுண்ணியிரினங்களை உருவாக்குகிறது.
  • முட்டை அமினோ அமிலம் பயிரின் தற்காலிக ஊட்டச்சத்து பற்றாக்குறையை சமாளிக்க உதவுகிறது.

 

கட்டுரையாளர்கள்:

  1. ச. வெ. வர்ஷ்னி , முனைவர் பட்ட படிப்பு மாணவி (உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். மின்னஞ்சல்: varshuagri08@gmail.com
  1. மு. தமிழரசி, முனைவர் பட்ட படிப்பு மாணவி (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news