பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்

0
655

பயிர் உற்பத்திக்கான காலநிலை

பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்:

  • பயிர் வளர்ச்சிக்கு மண்ணின் வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாகும்.
  • மண்ணின் வெப்பநிலை மாற்றங்கள் அதன் தன்மையை அதிக அளவில் பாதிக்கின்றன.

மண்ணின் வெப்பநிலையும் பயிரும்:

  • மண்ணிண் வெப்பநிலையானது விதையின் முளைப்புத்திறன் மற்றும் வேரின் செயல்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. (நெல் –10o C , கோதுமை – 30C )
  • அதிக வெப்பநிலை வேரின் வளர்ச்சியைத் தடைப் படுத்துவதோடு , தண்டில் சிறு சிறு தடிப்புகளைத் தோற்றுவிக்கும்.
  • மிக குறைந்த வெப்பநிலை ஊட்டச் சத்துகள் உறிஞ்சுவதைத் தடைசெய்கின்றன.
  • மண்ணின் வெப்பநிலை 1oC குறைவாகச் செல்லும் போது பயிர்கள் மண்ணிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதை நிறுத்திக் கொள்கின்றன.
  • பகலில் பயிர்களில் நீர் ஆவியாதல் அதிகம் நடைபெறுவதால் அதன் உள்வெப்பநிலையைச் சரியான அளவு பராமரிக்க மண்ணின் வெப்பநிலை அவசியம்.
  • உருளைக்கிழங்கு போன்ற சில பயிர்களுக்கு அதிக மண் வெப்பநிலை, பூச்சிகள் அதிகமாகப் பரவ வழி வகுக்கிறது. இப்பயிருக்கு ஏற்ற வெப்பநிலை 17 0C. வெப்பநிலை 29 0C அதிகமாகும் போது கிழங்கு உருவாவது தடைபடுகிறது.
  • சோளத்தில் வெப்பநிலை 150 செல்சியஸிலிருந்து 270 செல்சியஸ்ஸிற்கு உயரும்போது உற்பத்தி அதிகரிக்கின்றது.
  • மிக அதிகம் / குறைந்த வெப்பநிலை மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கையையும் மக்கும் அளவையும் பாதிக்கும்.
  • மண்ணில் வெப்பநிலை அதிகரிக்கும் போது அங்ககப் பொருட்களை சிதைவுறச்செய்யும் தன்மை அதிகரிக்கும்.
  • மண் வெப்பநிலையைப் பொருத்தே மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள்  அளவும் அமையும்.

மண் வெப்பநிலையைப் பாதிக்கும் காரணிகள்

சரிவு:

  • குளிர் மிதவெப்பப் பகுதிகளில் சரிவு ஒரு முக்கியக் காரணி.
  • வடக்குப் பகுதிகளில் தென் பக்கம் நோக்கிய சரிவுகள் வட திசை நோக்கிய சரிவுகளை விட வெப்பம் மிகுந்தவை.

உழவு:

  • மேலோட்டமான அதிக ஆழமற்ற உழவு தூசிப் போர்வையை உருவாக்குவதால் மேற்புற மண்ணின் வெப்பநிலையைக் குறைக்கிறது(Dust mulch).
  • பயிரிடப்படாத களர் நிலங்களை விட பயிர் செய்யும் நிலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்.
  • பகல் நேரங்களில் பயிரிடப்படும் நிலங்களில் மண்ணிலிருந்து 1 அங்குல உயரம் வரை உள்ள காற்றின் வெப்பநிலை பயிரிடப்படாத காற்றின் வெப்பநிலையை விட 50 – 10 0 செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

மண்ணின் தன்மை:

  • மணற்பாங்கான நிலம் களிமண்ணை விட அதிக வெப்பத்தைக் கொண்டிருக்கும்.
  • குளிர் காலங்களிலும் மண்ணின் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும்.

மண்ணின் ஈரப்பதம்:

மண்ணில் தேவையான அளவு ஈரப்பதம் இருந்தால்தான்  வெப்பநிலையை சரியாக பராமரிக்க இயலும்.

அங்ககப்பொருட்கள்:

  • மண்ணில் உள்ள அங்ககப்பொருட்கள் அதன் வெப்பநிலையைக் குறைக்கக் கூடியவை. மேலும் மண்ணின் கடத்துதிறன் மற்றும் சத்துக்களை உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும்.
  • கோடைக் காலங்களில் அங்ககப்பொருட்கள் நிறைந்த நிலம் தாதுக்கள் நிறைந்த மண்ணைவிட எளிதில் வெப்பமடைந்து எளிதில் குளிர்கின்றன.

கட்டுரையாளர்கள்: ரா. சுவிதா மற்றும் கோ.சீனிவாசன், முனைவர் பட்டப் படிப்பு மாணவர்கள்(உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here