Skip to content

முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவ மழை

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தென்மேற்கு பருவ மழை, அந்தமான் நிகோபார் தீவுகளில் துவங்கி விட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு, வடகிழக்கு என இரண்டு பருவ மழைக் காலங்கள் உண்டு. இவற்றில், தென்மேற்கு பருவ மழை தான், நாட்டின் ஒட்டுமொத்த நீராதாரங்களை நிரப்பும் மழையாக கருதப்படுகிறது.

தமிழகத்தில், இந்த மழை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் மட்டுமே பெய்யும். ஆனால், கேரளா மற்றும் கர்நாடகாவில், தென்மேற்கு பருவ மழை பொழிவதன் காரணமாக, அங்கிருந்து வரும் உபரி நீர், காவிரி வழியாகவும் இதர ஆறுகளின் வழியாகவும் தமிழகத்தின் பெரும்பாலான நீர்த்தேவையை பூர்த்தி செய்யும்
குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களுக்கும், தமிழகத்தின் மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கும், தென்மேற்கு பருவ மழையால், அதிக நீர் வரத்து இருக்கும்.இந்த மழை, அந்தமான் நிகோபார் தீவுகள் முதல், காஷ்மீர் வரை சென்று, இமயமலையில் மோதி, மீண்டும் தெற்கு நோக்கி திரும்பும்.
ஒவ்வொரு ஆண்டும், ஜூன் முதல், செப்டம்பர் இறுதி வரை, தென்மேற்கு பருவ மழை தீவிரம் காட்டும்.கடந்த, 2018ல், தென்மேற்கு பருவ மழை, 75 சதவீதம் மட்டுமே பெய்தது. தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில், வட கிழக்கு பருவ மழையும் பொய்த்தது. இதனால், வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களில், தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.

குழப்பமான அறிவிப்பு

‘மழை, ஜூன், 4ல் தான் பெய்யத் துவங்கும்’ என, ‘ஸ்கைமெட்’ என்ற, தனியார் வானிலை அமைப்பும், ‘ஜூன், 6ல் துவங்கும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையமும், கடந்த வாரம் தெரிவித்தன, இதனால் எந்தத்தேதியில் மழை துவங்கும் என்ற குழப்பம் மக்களிடையே நிழவியது

ஆனால் கணிப்புகளை தாண்டி, தென்மேற்கு பருவமழை, நேற்று அந்தமான் தீவுகளில் துவங்கி விட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இம்மையம் கூறியுள்ளதாவது:அந்தமான் மற்றும் அதையொட்டிய கடற்பகுதியில், பருவ மழைக்கான மேகங்கள் கூடி விட்டன. பருவ காற்றும் சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. வமே இறுதி வாரம் அல்லது ஜூன், 1ம் தேதி, கேரளாவை பருவ மழை வந்தடையும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, வானிலை மையம் கூறியுள்ளது.இந்த அறிவிப்பு, நாட்டு மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்த பருவ காலத்தில், 96 சதவீதம் முதல், 104 சதவீதம் வரை, மழை பெய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மழை நீரை சேமித்து வைக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதா? , தேர்தலிலயே நேரத்தினை ஒதுக்கிவிட்ட ஆட்சியாளர்கள் இனிமேலாவது மழை நீரை சேமிக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்

1 thought on “முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவ மழை”

  1. சாதாரணமாக ஜூன் 1ம் தேதி போல் கேரளாவில் தொடங்கும் தென் மேற்குப் பருவ மழை இந்த வருடம் ஜூன் 4ம் தேதி
    போல் தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியது. மே மாதம் 20 தேதி போல் அந்தமான் தீவுகளில்
    தென் மேற்குப் பருவ மழை தொடங்குவது இயல்பான விஷயம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj