பெண்ணையாறு ஆற்றங்கரையோர விவசாயம் கேள்விக்குறி?

0
1493

கடலூர் மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறுகளில் இதுவரை தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. இதனால், ஆற்றங்கரையோர கிராமங்களில் விவசாயம் கேள்விக் குறியாகி வருகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை மிக தாமதமாக அக்டோபர் கடைசியில் துவங்கியது. ஆண்டின் சராசரி மழையளவு 1206 மி.மீ., இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை சராசரி அளவை விட கூடுதலாக 1449 மி.மீ., மழை பெய்துள்ளது. நடப்பு ஆண்டு அக்டோபரில் இயல்பாக பெய்ய வேண்டிய 220.2 மி.மீட்டருக்கு 218 மி.மீ., பெய்துள்ளது.நவம்பர் மாதத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையளவான 295.3 மி.மீட்டரில் கடந்த வாரம் வரை 239.69 மி.மீ., மட்டுமே மழை பெய்துள்ளது.மொத்தத்தில் சராசரி மழையளவை விட 27 சதவீதம் குறைவாக அளவே மழை பெய்துள்ளது.

பெங்களூரூ பகுதியில் சரியான மழை இல்லாத காரணத்தால் பெண்ணையாற்றிற்கு தண்ணீர் வரத்து இல்லாமல் போனது.இதன் காரணமாக சாத்தனுார் அணையில் 119 அடி கொள்ளளவில் வெறும் 91 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் கரையோர கிராமங்களின் கிணற்றில் நீர்மட்டம் உயரவில்லை.

இந்நிலையில் வங்கக்கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வந்தி விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here