நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட முறையில் , காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், வீட்டுத்தோட்ட காய்கறி விதை, தளைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு, 25 ரூபாய் மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் பீர்க்கன், தக்காளி, வெண்டை, முருங்கை, தட்டைப்பயிர், மிளகாய் மற்றும் அவரை ஆகிய காய்கறிகளில், ஏதாவது ஐந்து காய்கறி விதைகள் 40 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பயனாளியும், அதிகபட்சமாக, ஆறு காய்கறி தளைகள் வரை பெறலாம். மேலும் விபரம் பெற, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை, 04286 280827 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
மாற்று வேளாண் சந்தை மிக மிக அவசியம்!
இன்றைய சூழலில் விதையிலிருந்து விற்பனை வரை சந்தையைச் சார்ந்தே விவசாயிகளின் வாழ்க்கை சுழல்கிறது. பணப்பயிர்கள் நம் நிலங்களை ஆக்கிரமிப்பதால், வேதி உரங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஆனால், அவற்றைக்...