மாடி வீட்டுத் தோட்டம்

தத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!

விரைவில், மேலும், 10 ஆயிரம் விவசாயிகளுக்கு, தத்கல் முறையில் இலவச மின்சாரம் வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்படும்,” என, மின்துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்து, சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது: மொத்தம், 10,000 விவசாயிகளுக்கு, தத்கல் முறையில் இலவச மின்சாரம் வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முடியும் நிலையில் உள்ளது. விரைவில், மேலும், 10,000 விவசாயிகளுக்கு, தத்கல் முறையில், இலவச மின்சாரம் வழங்க அறிவிப்பு வெளியிடப்படும். அதன் மூலம், ஏற்கனவே, இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் எண்ணிக்கை குறையும். மற்ற விவசாயிகளும், இலவச மின்சாரம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

1 Comment

1 Comment

  1. gurunathan

    February 24, 2018 at 9:15 pm

    good

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

To Top