நார்க்கழிவு உரம்

1
3461

          தென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல் பெறலாம்.

           தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது தென்னங்கூந்தல். இதிலிருந்து நார் பிரித்தெடுக்கப்படுகிறது.பிரித்தெடுக்கும் போது, நார் கழிவுகள் கிடைக்கின்றன.இவைகள் தென்னை நார்க் கழிவுகள் என்றழைக்கப்படுகின்றனர்.நம் இந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து, 7.5 மில்லியன் டன் அளவிலான நார்கழிவுகள் என்றழைக்கப்படுகின்றன. நம் இந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து, 7.5 மில்லியன் டன் அளவிலான நார்க்கழிவுகள் ஆண்டுதோறும் கிடைக்கப்பெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5 லட்சம் டன் நார்க்கழிவுகள் கிடைக்கிறது. இதிலுள்ள மூலப்பொருள்களால், இது தோட்டக்கலையில் வளர்தளமாக பயன்படுகிறது.

தென்னை நார்க்கழிவு உரம் தயார் செய்தல்

நோக்கம்:

பண்ணை கழிவான தென்னை நார்கழிவு கொண்டு ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்தல்.

தேவையான பொருட்கள்:

1000 கிலோ தென்னை நார்க்கழிவு, 5 கிலோ யூரியா, 5 பாட்டில் புளூரோட்டஸ், காளான் விதை, தண்ணீர்.

செய்முறை:

நிழல் தரக்கூடிய சமப்படுத்தப்பட்ட தரைப்பகுதியில் 5*3 மீ அளவுடைய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். முதலில் 100 கிலோ நார்க்கழிவை முதல் படுக்கையாக பரப்ப வேண்டும். பிறகு 1 பாட்டில் பூஞ்சாண விதைகளை முதல் படுக்கையின் மேல் சீராக தூவவேண்டும். அதன்மேல் 100 கிலோ நார்க்கழிவை இரண்டாவது படுக்கையாக பரப்ப வேண்டும். 1 கிலோ யூரியாவை இதன் மேல் சமமாக தூவவேண்டும். இவ்வாறாக பூஞ்சாண விதை மற்றும் யூரியாவை அடுத்தடுத்து 100 கிலோ நார்க்கழிவுடன் சேர்த்து அடுக்க வேண்டும். இதனுடன் தண்ணீரைச் சேர்த்து ஈரப்பதம் 50-60 சதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். இதன் உயரம் 1மீ வரை இருக்க வேண்டும். இரண்டு மாதங்களில் கம்போஸ்ட் தயாராகிவிடும். ஈரம் 50 சதத்திற்கும் குறையும் பொழுது தண்ணீர் தெளிக்க வேண்டும். முடிவில் தென்னை நார்க்கழிவு முழுவதும் மக்கி கருப்பு நிற தொழு உரமாக மாறிவிடும்.

தென்னை நார் கழிவு எளிதில் மக்காத பொருட்களான லிக்னின் 30 சதம் மற்றும் செல்லுலோஸ் 20 சதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவற்றை மக்கக்கூடியதாக மாற்ற பூஞ்சாண விதை மற்றும் யூரியா தேவைப்படுகிறது.

 

மட்காத மற்றும் மட்கிய தென்னை நார்க் கழிவில் உள்ள சத்துக்களின் அளவு

பண்புகள் மட்காத தென்னை நார்க்கழிவு (%) மட்கிய தென்னை நார்க்கழிவு (%)
லிக்னின் 30.00 4.80
செல்லுலோஸ் 26.52 10.10
கரிமச்சத்து 26.00 24.00
தழைச்சத்து 0.26 1.24
மணிச்சத்து 0.01 0.06
சாம்பல்சத்து 0.78 1.20
கால்சியம் 0.40 0.50
மக்னீசியம் 0.36 0.48
இரும்பு 0.07 0.09
மாங்கனீசு 12.50 25.00
துத்தநாகம் 7.50 15.80
கந்தகம் 3.10 6.20
கரிமச்சத்து: தழைச்சத்து 112:1 24:1

பயன்பாடுகள்

  • எல்லாவகைப் பயிர்களுக்கும் எக்டருக்கு 5 டன் மட்கிய நார்க்கழிவு தேவைப்படுகிறது.

  • இதனை விதைப்பதற்கு முன் அடி உரமாக இடவேண்டும்.

  • நாற்றங்கால்களுக்கு, பாலித்தீன் பைகள் மற்றும் மண் தொட்டிகளில் நிரப்பவேண்டிய மண்கலவைகளுக்கு 20 சதவீதம் மட்கிய நார்கழிவானது, மண் மற்றும் மணலுடன் கலக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

  • தென்னை, மா, வாழை மற்றும் பழமரங்கள் போன்ற நன்கு வளர்ந்த மரங்களுக்கு குறைந்த அளவு, மரத்துக்கு 5 கிலோ போதுமானது.

  • பொருளாதார ரீதியில் இதனை வாங்கி, மிக அதிக அளவு நிலத்தில் இடுவது கடினம். அதனால் நாம் சொந்தமாக தயாரித்து, பண்ணையில் இடுவது நன்று.

  • மட்கிய நார்கழிவை வாங்குவதற்கு முன், கழிவானது முற்றிலும் மட்கிவிட்டதா என்றும் தரச்சான்று ஆகியவற்றை பரிசோதிப்பது அவசியம்.

  • நன்கு மட்காத கழிவை நிலத்தில் சேர்ப்பதால், இது நிலத்தில் சேர்ந்த பின்பும் அங்குள்ள சத்துக்களை கிரகித்துக்கொண்டு சிதைவடைகிறது. எனவே நிலத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் பயிர் பாதிப்படைகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here